Scroll down to download the pdf
மூவொரு கடவுள் பெருவிழா 26/05/2024
by
திருப்பலி முன்னுரை
இறை உறவில் ஒன்றிணைந்த சகோதர சகோதரிகளே!
இன்றைய நாளில் நம் தாய் திருஅவை மூவொரு கடவுளின் பெருவிழாவை கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கின்றது. உலகம் தோன்றியது முதல் இன்று வரை தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூவரும் தங்களின் எல்லையில்லா ஆற்றலால் இவ்வுலகைப் படைத்து, பராமரித்து, வழிநடத்தி வருகின்றனர். இம்மூவரும் வெவ்வேறு ஆட்களாய் இருந்தாலும், அவர்களுடைய வல்லமை, ஞானம், மற்றும் அன்புறவு ஆகிய இறைத்தன்மைகளின் வாயிலாக ஒரே கடவுளாய் ஒன்றுபட்டு இருக்கின்றார்கள். தந்தை கடவுள் இவ்வுலகை படைத்து, மக்கள் இனத்தை உருவாக்கி, இறை வழியில் வாழ அவர்களுக்கு கட்டளைகளை அளித்தார். மகன் கடவுளாகிய இயேசு கிறிஸ்து உலகை பாவத்திலிருந்து மீட்பதற்காக சிலுவையில் இறந்து உயிர்த்தார். தூய ஆவியார் உலகின் தொடக்க முதல் இன்று வரை தன் எல்லையில்லா ஆற்றல்களை திருஅவையின் மீது பொழிந்து, திருவைக்கு உயிரோட்டம் அளிக்கின்றார். இவ்வண்ணம் உலக படைத்து, பாவத்திலிருந்து மீட்டு, நம்மை வழிநடத்தும் மூவொரு கடவுளிடம் நம் வாழ்வை அர்ப்பணிப்போம்.
நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் மூவொரு கடவுளின் துணையும், அவருடைய அருளும் நம்முடன் என்றும் இருக்கவும், மேலும் கடவுளின் பெயரால் உலகெங்கும் நடக்கும், வன்முறைகளும் போர்களும் முடிவடைந்து, மூவொரு கடவுள் அருளும் அமைதியும், ஆசியும் உலகெங்கும் பரவிட வேண்டி இக்கொண்டாட்டத்தின் விருந்தில் பக்தியுடன் செபிப்போம்.
வாசக முன்னுரை
முதல் வாசகம்
ஆண்டவரின் அருளும், ஆசியும் நம்முடன் இருக்கும் பொழுது நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் முழுமை பெறுகின்றது. இறைவன் இஸ்ரேயல் மக்களை காத்து, அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, தன்னுடைய அன்பை வெவ்வேறு வடிவில் அவர்களுக்கு வெளிப்படுத்தினார் என்றும், . இஸ்ரேயல் மக்களின் வாழ்வு எவ்வாறு முழுமைப் பெற்றது என்றும் மோசே இஸ்ரேயல் மக்களுக்கு அறிவுறுத்துகின்றார். அன்று இஸ்ரேல் மக்களை காத்த இறைவன் இன்று நம்மையும் காக்கின்றார் என்ற மனநிலையுடன் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசகம்
நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள், கடவுளின் பிள்ளைகள் என்ற மனப்பான்மையைப் பெற்றவர்கள். இம்மனப்பான்மை நம்முள் ஆழமாக வேறொன்றும் பொழுது, நாம் அச்சத்தில் இருந்து மீண்டு தூய ஆவியாரின் துணையுடன் கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையில் நிலைத்து வாழ்கின்றோம். இதனால், கடவுளின் பிள்ளைகள் என்ற முறையிலும், கிறிஸ்துவின் சகோதர, சகோதரிகள் என்ற முறையிலும் கிறிஸ்து ஏற்றுக்கொண்ட துன்பங்களில் பங்கெடுக்க நமக்கு அழைப்பு விடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. எங்களை வழிநடத்தும் மூவொரு இறைவா!
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்ற உம் வார்த்தையை, இன்றளவும் தளராது பின்பற்றும் உன் திருஅவையை வழிநடத்தும் திருஅவை தலைவர்களையும், அதன் உறுப்பினர்களையும் நிறைவாக ஆசீர்வதியும். மூவொரு இறைவனின் அருள் இவர்களுடன் என்றும் இருக்கவும், மூவொரு இறைவனின் பெயரால் நற்செய்தியை இன்னும் முழு வேகத்துடன் உலகெங்கும் எடுத்துச் செல்லவும், இவர்களுக்கு வேண்டிய ஆற்றலையும் ஞானத்தையும் தந்தருள் வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
2. உலகின் ஒரு முனை முதல் மறுமுனை வரை நிறைவை கொணரும் எம் மூவொரு இறைவா!
நீர் அன்று இஸ்ரேல் மக்களை உம்முடைய மக்களாக கருதி, பாலை நிலத்தில் உன் கரங்களால் அரவணைத்து காத்து வழி நடத்தியது போல, உலகை ஆளும் ஒவ்வொரு தலைவர்களும் தங்களிடம் அளிக்கப்பட்டு மக்களை, தன்னுடைய மக்களாகக் கருதி அவர்களுக்கு தேவையான நலன்களையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அயராது உழைக்க வேண்டுமென்றும், சுயநலம் இன்றி பிற நல பணிக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
3. வாழ்க்கைத் துணையாய் வரும் எம் மூவொரு இறைவா!
இன்று இத்திருப்பீடத்தின் முன் கூடியுள்ள உம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்காகவும் மன்றாடுகின்றோம். இறைவனின் பிள்ளைகள் என்ற மனப்பான்மையை பெற்றவர்களாய், இறைவனின் துணையுடன், இறை வார்த்தையின் வழியில் என்னாலும் நாங்கள் நடக்கவும், எங்களுடைய இல்லங்களில் மூவொரு இறைவனின் அருள் என்னாலும் இருக்கவும் எங்களுக்கு தேவையான மரங்களைத் தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
4. அமைதியை நிலைநாட்டு மையம் அன்பு இறைவா!
ஈரான் அதிபரின் திடீர் மரணத்தால், உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலை விரைவில் முடிவுக்கு வரவேண்டி மன்றாடுகின்றோம். உலகின் வெவ்வேறு மூலைகளில் போர்களாலும், இனவாதத்தாலும், மதவாதத்தாலும் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைத்து மக்களையும் நீர் உம்முடைய மக்களாக ஏற்று அவர்களை காத்து, அவர்களுக்கு துணையாய் இருக்க வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
Please Leave Your comments Here