இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Thursday, November 28, 2024

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு 01-12-2024

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு 01-12-2024

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு 01-12-2024

திருப்பலி முன்னுரை

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறில் அடியெடுத்து வைக்கும் நாம் அனைவரும் கிறிஸ்துவின் வருகைக்காக நம் உள்ளத்தை தயார் செய்ய அழைக்கப்படுகின்றோம். இன்றைய வாசகங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் வருகைக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கின்றன. மனிதர்கள் மேல் இறைவன் கொண்ட எல்லையில்லா அன்பின் அடையாளமாக, விண்ணுலகில் இறைவனின் வலப்பக்கம் வீற்றிருந்த இறைமகன், மண்ணுலகில் மனிதராய் நமக்காக, நம்முள் ஒருவராய் பிறக்கின்றார். இப்படி பிறக்கும் இயேசு பாலகனை எதிர்நோக்கி காத்திருக்கும் காலமே திருவருகைக்காலம். பகிர்வு மற்றும் தாழ்ச்சி என்ற இரண்டு இறை மதிப்பீடுகளை இவ்வுலகிற்கு எடுத்துரைக்க இறைமகன் இயேசு கிறிஸ்து மனித உறவில் நம்மிடையே பிறக்கின்றார். பகிர்வு மற்றும் தாழ்ச்சி என்ற குணங்களை நாம் பெறும் பொழுது நாம் எவ்வித பாவமுமின்றி இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் மகிழ்வை பெறுகின்றோம். இறைமகன் இயேசுவின் பிறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் நாம், பகிர்வு மற்றும் தாழ்ச்சியை என்ற குணங்களைப் பெற்று பாவத்தை விட்டு விலகி அருள்வாழ்வு வாழ்வதற்காக இத்திருப்பலியில் சிறப்பான முறையில் பங்கேற்று செபிப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

பாவத்தில் விழுந்த இஸ்ரேயல் மக்களை மீட்பதற்காக, ஒரு மீட்பரை அனுப்புவதாக இறைவன் இறைவாக்கினார்கள் வழியாக முன்மொழிந்தார். இவ்வுலகிற்காய் பிறக்க போகும் மீட்பரை பற்றியும், அவருடைய வருகையைப் பற்றியும் எடுத்துரைக்கும் எரேமியா இறைவாக்கினரின் வார்த்தைகளை இம்முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இறைமகன் இயேசுவின் போதனையால் ஈர்க்கப்பட்ட பலர், இயேசுவின் பாதைகளை தமதாக்கிக் கொண்டு பயணிக்க தொடங்கினர். இயேசுவின் பெயரால் திருமுழுக்கு பெற்றனர். அவ்வாறு திருமுருக்கு பெற்ற அனைவரும், இறைவன் மீது எவ்வாறு பற்று கொள்ள வேண்டும் என்று கற்பிக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

  1. இறையன்பையும், இறைவன் தரும் மீட்பையையும் இவ்வுலகிற்கு என்றென்றும் அளிப்பதற்காக உழைக்கும் திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, உம்முடைய அன்பின் பாதையில் பயணித்து, இறைவன் தரும் மீட்பை நாங்கள் எமதாக்கிக் கொள்ள வரமருள வேண்டுமென்று உம்;மை மன்றாடுகிறோம்.
  2. இவ்வுலகத் தலைவர்கள் தங்களின் நலனிலும், புகழிலும் அக்கறை கொள்ளாமல், மக்களின் நலனுக்காக இடைவிடாது உழைக்கவும், மக்களை இனத்தின் அடிப்படையில் பிரித்தாளாமல் அன்பினை ஆதாரமாக வைத்து, அமைதியான உலகை உருவாக்கவா வரமருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்
  3. இறையரசை நிறுவிய எம் இறைவா! கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாங்கள் அனைவரும், கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, இறப்பு மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றில் முழுமையான நம்பிக்கை கொண்டு, கிறிஸ்துவின் வாழ்வை எங்களுடைய பாதையாக மாற்றிக்கொள்ள வரமருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அமைதியை உலகிற்கு கொண்டு வந்த எம் இறைவா! இவ்வுலகில் நிகழும் போர்களாலும், கலவரங்களாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நீரே ஆறுதலாக இருந்து அவர்களின் உடல், உள்ள மற்றும் ஆன்ம நலன்களை நிறைவு செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. கிறிஸ்துவின் பிறப்பை எதிர்நோக்கி நம்பிக்கையுடன் காத்திருக்கும் எங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதியும், இறைவன் தரும் அன்பை நாங்கள் முழுமையாக உணர்ந்து அதை எங்கள் இல்லத்திலும், சமூகத்திலும் பிறருடன் பகிர்ந்து முழுமையான மனித வாழ்வு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Thursday, November 21, 2024

கிறிஸ்து அரசர் பெருவிழா 24-11-2024

கிறிஸ்து அரசர் பெருவிழா 24-11-2024

கிறிஸ்து அரசர் பெருவிழா 24-11-2024

திருப்பலி முன்னுரை

திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் கிறிஸ்து அரசரின் பெருவிழாவைக் கொண்டாட அழைக்கப்படுகின்றோம். ஏழ்மையின் வடிவாய் மாட்டு தொழுவத்தில் பிறந்த இறைமகன் இயேசு, தன் அன்பின் போதனையால் அனைவரையும் தன்பால் ஈர்த்து இவ்வுலகின் அரசராக விளக்குகின்றார். இறைத்திருவுளத்தை நிறைவேற்றுவதையே, என் உணவு என்று மொழிந்த இயேசு கிறிஸ்து, இறையாட்சியை கட்டி எழுப்பதின் வாயிலாக, இறையாட்சின் அரசராக விளங்குகின்றார். இவ்வுலக அரசர்களும், தலைவர்களும் தங்களுடைய மக்கள் தங்களை கொண்டாட வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், நம்முடைய இயேசு கிறிஸ்து, நம்முடைய பாவங்களை தன் மீது ஏற்றுக் கொண்டு நமக்காக சாவை எதிர்கொள்ளும் போர்வீராக, நம்மை பாவத்திலிருந்து மீட்டார். நமக்காக இயேசு எளிமையை தேர்ந்து கொண்டார். பாவத்தில் விழுந்த மக்களை, தன் அன்பின் ஆளுகைக்குள் கொண்டு வந்து, இறையன்வையும், பிறர் அன்பையும் மையமாக வைத்து வாழும் படி நம்மை அழைக்கின்றார். நாம் இறைவனையும், நம் அயலாரையும் முழு மனதுடன் அன்பு செய்யும் பொழுது கிறிஸ்து அரசரின் குடிமக்களாகின்றோம். இவ்வுலகில் அன்பின் பற்றாக்குறையினால்தான் வன்முறைகள், கலவரங்கள் மற்றும் இனவெறி தாக்குதல்கள் என அனைத்தும் நிகழ்கின்றன. எனவே, நம்முடைய இல்லங்களிலும், நம்முடைய சமூகத்திலும் கிறிஸ்து அரசரின் இறையாட்சி மதிப்பீடுகள் மேலோங்க இத்திருப்பலியில் ஜெபிப்போம். மேலும், மதப் பிளவு வாதத்தாலும், இன வேற்றுமையாலும் மணிப்பூரில் நிலவும் வன்முறைகளை விரைவில் முடிவிற்கு வந்து அங்கு அமைதி நிலவ வேண்டுமென்று நம் கிறிஸ்து அரசரிடம் சிறப்பான முறையில் இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

பாவத்தில் விழுந்த தன் மக்களை, பாவத்தின் கோர பிடியிலிருந்து மீட்பதற்காக இறைவன் ஒரு மீட்பரை அனுப்புவதாக பல இறைவாக்கினர்கள் வழியாக முன்மொழிந்தார். இன்றைய முதல் வாசகத்தில் தானியேல் இறைவாக்கினரும் வரவிருக்கும் மீட்பரைப் பற்றி எடுத்துரைக்கின்றார். எல்லா நாட்டிற்கும் அரசராக வரப்போகும் மீட்பரை பற்றி எடுத்துரைக்கும்; இம்முமுதல் வாசகத்திற்கு கிறிஸ்து அரசரின் வருகையை எதிர்பார்தது, கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இவ்வுலகில் எந்த அரசராலும் வெற்றி கொள்ள முடியாத சாவை, நம்முடைய கிறிஸ்து அரசர் வெற்றி கொண்டார். உலக மக்களின் பாவங்களுக்காக மரித்த இயேசு கிறிஸ்து சாவின் சூழ்ச்சியை வென்று நம்மை பாவத்திலிருந்து மீட்டார். அப்படி நம்மை மீட்ட இறைவன் என்றென்றும் இருக்கின்ற இறைவனாய் இருக்கின்றார் என்பதை விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

  1. திருஅவையின் தலைவரே எம் இறைவா! கிறிஸ்து அரசின் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும், கிறிஸ்து அரசரின் மதிப்பீடுகளை நன்குணர்ந்து, அதன் படி வாழவும், கிறிஸ்துவின் அன்பு பாதையை உலகெங்கும் பரப்பவும் தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அரசர்களுக்கெல்லாம் அரசரே எம் இறைவா! மக்களை ஆளும் தலைவர்கள் அனைவரும் தங்களின் சுயநலம் பாறாமல், கிறிஸ்து அரசரைப் போல பிறர்நலனைப் பேணவும், மக்களிடம் உள்ள பாகுபாடுகளைக் களைந்து, நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டிய மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அமைதியை நிலைநாட்ட வந்த எம் இறைவா! மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்ட்ட அனைவருக்கும் நீரே அருதலாக இருந்து, அங்குள்ள பதற்ற சூழ்நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றும், பெண்கள் மீது நடத்தப்டும் தொடர் தாக்குதல்களை முழவதுமாக நிறுத்த வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அன்பை போதித்த எம் இறைவா! கிறிஸ்து அரசின் இறையாட்சி மதிப்பீடுகளான இறையச்சம், பிறரன்பு மற்றும் எற்றுக்கொள்ளல் ஆகியவை எங்கள் இல்லங்களில் என்றும் நீடித்திருக்கவும், கிறிஸ்து அரசின் குடிமக்களாக நாங்கள் எங்கள் இல்லங்களிலும், சமுதாயத்திலும் வாழவும் வேண்டிய வரங்களை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. ஏழ்மையை நீக்க வந்த எம் இறைவா! போர்களாலும், தவறான பொருளாதார கொள்கைகளாலும் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் அனைவரின் வாழ்வையும் நீரே மேம்படுத்த வேண்டும், அவர்கள் வாழ்வின் அன்றாட தேவைகளை நிறைவேற்ற தேவையான உதவிகளைச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Friday, November 15, 2024

பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு 17-11-24

பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு 

17-11-24

பொதுக்காலம் 32-ஆம் ஞாயிறு 17-11-24

திருப்பலி முன்னுரை

ஒவ்வொரு நாள் திருப்பலி கொண்டாட்டமும் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நம்மை தயார் செய்கின்றது. நம்மை பாவத்தின் பிடியிலிருந்து மீட்பதற்காக இம்மண்ணுலகில் மனிதராய் பிறந்த இயேசு கிறிஸ்து, நம்முடைய பாவங்களை தன் மீது சுமந்து, பாவம் போக்கும் செம்மறியாக நம் பாவங்களை நீக்கினார். இறை வல்லமையால் இறப்பினை வென்று விண்ணகம் சென்றார். நம்மையும் விண்ணகம் அழைத்துச் செல்ல மீண்டும் வருவார் என்று எதிர்நோக்கி காத்திருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையே இயேசுவின் இரண்டாம் வருகையின் அடிப்படை. இயேசுவின் இரண்டாம் வருகையின் பொழுது, பாவிகள் பெரும் துயரையும், பாவமற்றவர்கள் இறைவனின் முடிவில்லா பேரின்ப மகிழ்வையும் பரிசாக பெறுவர். நாம் நம்முடைய பாவ வாழ்க்கையில் நாட்டம் கொண்டு, தொடர்ந்து பாவம் செய்வோம் எனில், இயேசுவின் இரண்டாம் வருகை நமக்கு கசப்பானதென்றாகும். இயேசுவின் இரண்டாம் வருகையை இன்பமாய் மாற்ற, நம் உடலில் தைத்துக் கொண்டிருக்கும் பாவ அழுக்குகளை அகற்றுவோம். இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நம் உள்ளம் என்னும் ஆலயத்தை அழகு படுத்துவோம். எப்பொழுதும் விழிப்பாக இருந்து பாவத்திலிருந்து விலகி இருப்பதன் மூலம் நாம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் பெரு மகிழ்வுடன் பங்கேற்போம் என்ற நம்பிக்கையுடன் இந்த மகிழ்வின் பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவன் இம்மண்ணுலகத்திற்கு  தம் மக்களை தீர்ப்பிட இறங்கி வருவார். அவர் வரும்பொழுது பாவம் செய்தவர்களையும், பாவம் மற்றவர்களையும் வெவ்வேறாகப் பிரித்து, அவர்களுக்கு தக்க பலன்களை அளிப்பார், என்று தனியேல் இறைவாக்கினரின் மூலமாக இறைவன் கூறும் செய்திகளை இம்முதல் வாசகத்தில் கவனமுடன் செவி கொடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக இறந்து பாவக்கழுவாய் பலியை நமக்காக நிறைவேற்றினார். பாவத்திலிருந்து மீட்பு பெற்ற நாம், நம்முடைய உள்ளங்களை, பாவத்தின் பிடியிலிருந்து மீட்டு, பாவக்கழுவாய் தேட அழைக்கப்படுகின்றோம். நம்மை பாவமில்லா வாழ்வை வாழ அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நிலை வாழ்வின் மேன்மையை எடுத்துரைத்த எம் இறைவா! உம் திரு அவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும், உம்முடைய இரண்டாம் வருகைக்காக எங்களை தயார் செய்துவதற்கான அனைத்து வரங்களையும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. நேர்மை தவறாத எம் இறைவா! நாங்கள் சமுதாயத்திலும் எங்கள் வீடுகளிலும் வகிக்கும் பொறுப்புகளை முழுமன ஈடுபட்டுடன் ஆற்றவும், பிறருக்கு பயன் அளிக்கும் வகையில் வாழவும் வேண்டிய வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. விழிப்பாயிருக்கும்படி மொழிந்த எம் இறைவா! உம்முடைய இரண்டாம் வருகை எதிர்நோக்கி இருக்கும் நாங்கள் அனைவரும், எந்த நிலையிலும் பாவத்தின் சூழ்ச்சியில் சிக்காமல், உம்முடைய வருகைக்காக எங்கள் இல்லங்களையும், உள்ளங்களையும் தயார் செய்ய தேவையான வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. இறைவாக்குரைத்த எம் இறைவா! நாங்கள் பெற்றுக் கொண்ட இறை நம்பிக்கையையும், படிப்பினைகளையும் எங்கள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய பொறுப்புணர்வையும், அதற்கான ஆற்றல்களையும் எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. அமைதியை ஏற்படுத்த வந்த எம் இறைவா! தொடர் கலவரங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் மணிப்பூர் மாநில மக்களுக்காக மன்றாடுகின்றோம். அங்கு மீண்டும் எழுந்துள்ள மோசமான சூழ்நிலைகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து, அமைதி நிலைநாட்ட வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF

Friday, November 8, 2024

பொதுக்காலத்தின் 32-ஆம் ஞாயிறு 10-11-2024

 பொதுக்காலத்தின் 32-ஆம் ஞாயிறு 10-11-2024


திருப்பலி முன்னுரை

இறை பகிர்வின் இனிய நிகழ்வில் பங்கேற்க வந்துள்ள சகோதர சகோதரிகளே! பொதுக்காலத்தின் 32-ஆம் ஞாயிறு திருப்பலி கொண்டாட்டத்தின் வாசகங்கள் அனைத்தும் அளித்தலின் மேன்மையை பற்றி சிந்திக்க நம்மை அழைக்கின்றன.  இருப்பவற்றில் இருந்து கொடுப்பதை காட்டிலும், இருப்பதையெல்லாம் கொடுப்பதே முழுமையான பிறரன்பு பகிர்வாகும்.  நமக்கான செல்வங்களை இம்மண்ணுலகில் சேர்க்கும் பொழுது அவை அழிந்து போகும். நாம் சேர்க்கும் செல்வத்தை பிறருடன் பகிரும் பொழுது அவை விண்ணுலகில் உயரும்.  நாம் இம்மண்ணுலகில் புரியும் பாவங்களின் பொருட்டு, நமக்காக மரித்த இயேசு கிறிஸ்து, இறைவன் தன் மீது கொண்ட அன்பை நம் அனைவரோடும் பகிர்ந்து கொண்டார். நம்மையும் உன்னதமான இந்த பகிர்வின் வாழ்விற்கு  அழைக்கின்றார். நாம் பற்றி பிடிக்கும் பணம், பதவி, பட்டம் மற்றும் செல்வம் இவை எல்லாம் நம்மோடு நிலைத்து நிற்பதில்லை. எதிர்பார்ப்பின்றி பிறருக்கு செய்யும் நற்செயல்கள் மட்டுமே நம் ஆன்மாவிற்கு நன்மை பயக்கும். இன்றைய வாசகங்களில் இடம்பெறும் ஏழைப் கைம்பெண்கள் தங்களிடம் உள்ளதை எல்லாம் இறைவனுக்கு கொடுத்து, விண்ணகத்தை தங்களின் தாயகம் ஆக்குகின்றனர். இறைவனின் சீடர்களாகிய நாமும் இந்த ஏழைக் கைம்பெண்களை போல பகிர அழைக்கப்படுகின்றோம். இயேசு நம் பாவங்களின் பொருட்டு தன் உயிரையே நமக்காக அளித்தார். இவர்களைப் போல நாமும், நம்மிடம் உள்ளவைகளை பிறருடன் பகிர்ந்து கொண்டு விண்ணகத்தின் விழுமியங்களை கடைபிடிக்க வேண்டிய அருள் வரங்களை வேண்டி இந்த பகிர்வின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்

வாசக முன்னுரைகள்

முதல் வாசகம் முன்னுரை

இறைவாக்குறைக்கும் பணியில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட்ட எலியா இறைவாக்கினர், தன்னுடைய இறைவாக்குரைக்கும் பணியை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் செயல்களின் மூலம் பகிர்வின் மேன்மையை நமக்கு விளக்குகின்றார். உணவின்றி வறுமையில் தவித்த ஏழைக் கைம்பெண்ணின் ஈகை பண்பை விளக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம். 

இரண்டாம் வாசகம் முன்னுரை

நம் பாவங்களுக்காக இம்மண்ணுலகில் பிறந்து மரித்த இயேசு கிறிஸ்து, நம் அனைவருக்கும் தலைமை குருவாக இருக்கின்றார். தலைமை குரு நம் பாவங்களுக்காக பாவ கழுவாய் புரிவது போல, தன்னுடைய இறப்பின் மூலம் நம் அனைவருடைய பாவங்களுக்காகவும் பாவக்கழுவாய் புரிந்த இயேசு என்றும் நம் அனைவருக்கும் தலைமை குருவாய் விளங்குகின்றார் என்று மொழியும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்


மன்றாட்டுகள்

1. உம் எல்லையில்லா அன்பின் அடையாளமாக திரு அவையை ஏற்படுத்திய எம் இறைவா! உன் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும், உம்மைப் போல தங்களிடத்தில் உள்ளது அனைத்தும் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் தாராள மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


2. வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! போதிய உணவு, உடை, உறைவிடமின்றி வறுமையால் வாடும் அனைவரையும் அரவணைக்கும்படி மன்றாடுகின்றோம. இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டிய மனப்பக்குவத்தை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம். 


3. எங்களை அதிகமாய் அன்பு செய்யும் இறைவா! உலகெங்கும் வெவ்வேறு வழிகளில் உம்முடைய நற்செய்தி அறிவிப்பு பணியை, சமூக நல சேவைகள் மூலம் ஆற்றி வரும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுக்கு தேவையான பொருள் உதவிகளை தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்


4. குழந்தைகளை அன்பு செய்த எம் அன்பு இறைவா! எங்கள் வீடுகளில் உள்ள சிறு குழந்தைகளுக்கு பகிர்வின் மேன்மையை எங்களுடைய செயல்களால் எடுத்துச் சொல்லவும். பிறர் அன்பு பகிர்வின் பாதையில் அவர்களின் நன்முறையில் வளர்த்திட வேண்டிய ஞானத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


5. தலைமை குருவே எம் இறைவா! நீர் ஏற்படுத்திய நற்செய்தி பணியை இவ்வுலகில் தொடர்ந்து ஆற்ற, தேவையான இறை அழைத்தல்களை தந்தருள வேண்டுமென்றும், சிறப்பான முறையில் எங்கள் பங்கில் இறை அழைத்தலை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, November 2, 2024

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு 03-11-2024

 

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு 03-11-2024

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு 03-11-2024


திருப்பலி முன்னுரை

உலகம் தோன்றியது முதல், இன்று வரை எண்ணற்ற வழிகளில் இறைவன்  தன்னுடைய அன்பை நம்மிடத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். தன்னுடைய அன்பின் அடையாளமாக, இவ்வுலகை படைத்து நம்முடைய ஆளுகைக்கு உட்படுத்தினார். இத்தகைய உயரிய மதிப்பை நமக்கு அளித்த இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது முழுமையான அன்பையே. இறைவன் தன்னுடைய அன்பை இறைவாக்கினர்கள் வழியாகவும், இறைமகன் இயேசு கிறிஸ்து வழியாகவும் இம்மண்ணுலக மாந்தர்க்கு போதித்தார். நாம் இறைவனின் அன்பை புறக்கணித்து அவரை விட்டு விலகிச் செல்லும் பொழுது தீய நாட்டத்தில் விழுகின்றோம். மனிதருக்குரிய  பண்பை இழக்கின்றோம். கடவுள் நம்மிடம் இருந்தும் எதிர்பார்க்கும் நொறுங்கிய நெஞ்சத்தை மாசுபடுத்துகின்றோம். நம் உள்ளத்தில் படிந்த கறைகளை களைவதற்காக இறைவன் அளித்த ஒரே வழி தான் இறையன்பும், பிறரன்பும். நாம் இறைவனை முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்யும் பொழுது அது நம்முடைய செயல்களின் வாயிலாக நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நன்மை அளிக்கும். இதுவே இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் இறையன்பும், பிறர் அன்பும் ஆகும். இறையன்பில்லாத பிறர் அன்பும், பிறர் அன்பில்லாத இறையன்பும் அர்த்தமற்றதாகும். ஏனெனில், கடவுளை நேசிப்பவர் அவரின் படைப்பாகிய மனிதர்களையும் நேசிக்க வேண்டும். ஆகவே இறைவன் திருச்சபையின் முதன்மையான கட்டளைகள் என்ற போதித்த இறையாட்சியின் படிப்பினைகளை நம் வாழ்வாக்க வேண்டி இந்த உறவின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுக்கும்.

 

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

கடவுளின் கட்டளைகளை கடைப்பிடிப்பவர்கள் தங்கள் வாழ்வில் மென்மேலும் உயர்வடைவார்கள். ஏனெனில், இறைவனின் ஆற்றல் மிகு வார்த்தை நம்மை நன்மையின் பாதையில் வழி நடத்திச் செல்லும். இஸ்ரேல் மக்களை நன்மையின் பாதையில் நடத்தும் பொருட்டு இறைவாக்கினர் மோசே எடுத்துரைக்கும் இறைவாக்குச் செய்திகளுக்கு இம்முதல் வாசகத்தில் கவனமுடன் செவி  கொடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

நம்மைப் போல மனிதராக இம்மண்ணுலகில் பிறந்து உயிரினத்தை இயேசு கிறிஸ்து, சாவை வென்றதன் வழியாக நம்மில் இருந்து மேம்படுகின்றார். இதன் காரணமாக அவர் வாழும் கடவுளின் தலைமை குருவாக என்றென்றும் திகழ்கின்றார் என்ற மறைபொருளை விளக்கும் இரண்டாம் வாசகத்திற்கு ஆர்வமுடன் செவி கொடுப்போம்.

 

மன்றாட்டுகள்

 

1)       அன்பை அடித்தளமாகக் கொண்டு திருஅவையை கட்டி எழுப்பிய எம் அன்பு இறைவா! திரு அவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் இறையன்பையும், பிறர அன்பையும் எவ்வித குறையும் இன்றி கடைபிடிக்க தேவையான அருள் வரங்களை எங்களுக்கு தந்தருள் வேண்டுமென்று உண்மை மன்றாடுகின்றோம்.

 

2)       உலகுக்கு உரு கொடுத்த எம் இறைவா! இவ்வுலகில் மக்களை வழிநடத்தும் அனைத்து தலைவர்களையும் நிறைவாக ஆசீர்வதியும் . இவர்கள் அனைவரும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து, மக்கள் மீது உன் அன்பு கொண்டு,  அவர்களை அன்பின் பாதையில் நடத்திட வேண்டிய வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

 

3)       ஆதரவற்றோருக்கு ஆதரவே எம் இறைவா! முழுமையான அன்பும், முறையான கவனிப்பும் இன்றி தவிக்கும் அனைத்து முதியோர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுக்கு தேவையான அன்பையும் அரவணைப்பையும் தரவேண்டிய பொறுப்புணர்வை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

 

4)       திருக்குடும்பத்தின் சுடரொளியை எம் இறைவா! எங்கள் இல்லங்களில் அன்பு செய்தல், விட்டுக்கொடுத்தல் கீழ்ப்படிதல் போன்ற திருக்குடும்பத்தின் படிப்பினைகளை பின்பற்றவும், அதன் மூலம் எங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அமைதி நிலவவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

 

5)       அழியும் செல்வமான இம்மன்னக செல்வத்தின் மீது நாட்டம் கொள்ளாமல், நிலையான செல்வமாகிய விண்ணகச் செல்வத்தை உடைமையாக்கி கொள்வதற்கான வழி ஆகிய அன்பை நாங்கள் இறுகி பற்றி கொள்ளவும். பிறர அன்பு பணிகளில் அதிகமாக ஈடுபடவும் வேண்டிய தாராள மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF


Friday, November 1, 2024

இறந்த விசுவாசிகள் அனைவர் நாள் – நவம்பர் 02

இறந்த விசுவாசிகள் அனைவர் நாள்  நவம்பர் 02

Scroll to Download
**Tamil All souls day mass introduction 
**Mass introduction
இறந்த விசுவாசிகள் அனைவர் நாள் – நவம்பர் 02

திருப்பலி முன்னுரை

இறைவன் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் முடிவில்லா வாழ்வை தமதாக்கி கொள்வார்கள் என்ற நம்பிக்கையை கொண்ட சகோதர, சகோதரிகளே! இன்றைய நாளில், நாம் அனைவரும், இறந்த ஆன்மாக்களை நினைவு கூறவும், அவர்களுக்காக சிறப்பான முறையில் ஜெபிக்கவும் அழைக்கப்படுகின்றோம். மனிதன் செய்த முதல் பாவத்தின் விளைவாக இவ்வுலகத்தில் பாவமும், சாவும் நுழைந்தது. அப்படி பாவத்தில் விழுந்த மனிதர்களை சாவின் பிடியில் இருந்து மீட்பதற்காக, இறைமகன் இயேசு கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் பிறந்து, எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார். இறுதியாக, சிலுவை மரணத்தின் மூலம் பாவத்தின் பிடியில் சிக்கிய மனிதனை மீட்டெடுத்தார். பாவமில்லா வாழ்வு வாழ்ந்ததன் அடையாளமாக விண்ணக வீட்டிற்கு ஏறிச் சென்றார். இயேசு கிறிஸ்து இம்மண்ணுலகில் வாழ்ந்த பொழுது, இறையன்பு, பிறரன்பு, இறைத் திருவுளத்தை நிறைவேற்றல் ஆகிய இறையாட்சியின் விழுமியங்களை முற்றிலுமாக பின்பற்றினார். அதன் நிறைவாக, பாவத்திலிருந்தும் மீண்டு நித்திய வாழ்வை நமதாக்கிக் கொள்ள முடியும் என்று முன்மாதிரி வாழ்வு வாழ்ந்து காட்டினார். அவருடைய சீடர்களாகிய நாமும் அவருடைய வழியை பின்பற்றுவதன் வழியாக நித்திய வாழ்வை நம்முடையதாக்கிக் கொள்ள முடியும். இந்த நித்திய வாழ்வை அடைவதற்காக ஏங்கும் ஒவ்வொரு ஆன்மாவுக்காகவும் இத்திருப்பலியில் செபிப்போம். அதிலும் குறிப்பாக, யாரும் நினையாத ஆன்மாக்களை நினைவு கூறுவோம்! அனைத்து அன்மாக்களும் நித்திய இளைப்பாற்றியை அடைய வேண்டி இத்திருப்பலியில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வோம். 

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (எசேக்கியேல் 37: 1, 4-6, 12-14)

இயேசு இவ்வுலகிற்கு இறுதி தீர்ப்பு வழங்க வரும் நாளில் இறந்த அனைவரும் உயிர்பெற்று எழுவர் என்பதை நாம் நம்முடைய நம்பிக்கை அறிக்கையில் நினைவு கூர்கின்றோம். அதைப்போல, இறைவன் எலும்புகளுக்கும் உயிரளிப்பார். இறந்தவரை உயிர்த்;தெழச் செய்வார் என்று இறைவாக்கினர் எசேக்கியலும் இறைவாக்குரைக்கின்றார். எனவே, கிறிஸ்துவின் பொருட்டு வாழ்வு பெருவோம் என்ற நம்பிக்கையுடன் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (பேதுரு 1;:3-9)

கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்வதென்பது, நம் உதட்டளவில் அவரைப் புகழ்வதல்ல. கிறிஸ்துவின் படிப்பினைகளை பின்பற்றுவதன் மூலமே நாம் கிறிஸ்துவில் கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்த முடியும். அப்படி நாம் கிறிஸ்துவில் உண்மையான நம்பிக்கை கொள்ளும் பொழுது நம் வாழ்வில் நிகழும் அற்புதங்களை எடுத்துக் கூறும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. மரித்தோரை உயிர்த்தெழச் செய்யும் எம் இறைவா! ஆன்மாக்களின் மீட்பிற்காக நீர் உருவாக்கிய உம்முடைய திருஅவைக்காக மன்றாடுகின்றோம். உம்முடைய கட்டளையின் படி வாழ்ந்து, இறந்த அனைத்து விசுவாசுகளின் அன்மாக்களையும் கண்ணோக்கியருளும். இவர்கள் தங்கள் வாழ்வில் செய்த அற்ப பாவங்களை மன்னித்து, உம்முடைய விண்ணக வீட்டின் இன்பத்தில் பங்குகொள்ள அவர்களுக்கு உதவியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 

2. வாழ்வளிப்பவரே எம் இறைவா! எங்களுடைய இல்லங்களிலும், உள்ளங்களிலும் வாழ்ந்து, இறந்த அனைத்து ஆன்மாக்களுக்காகவும் மன்றாடுகின்றோம். இவ்வுலகத்தில் இவர்கள் செய்த அனைத்து நன்மைகளையும் கண்ணோக்கி, அவர்கள் செய்த பாவங்களை மன்னிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். மேலும், இன்றைய நாளில் யாராலும் நினைவு கூறப்படாத ஆன்மாக்களையும் நினைவு கூர்ந்து, அவர்களுக்கு உம்முடைய நித்திய இறைப்பாற்றியை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. போர்களிலும், போராட்டங்களிலும் பிறருக்காக உயிர் நீத்த தியாக உள்ளங்களுக்காக மன்றாடுகின்றோம். பிற நலனுக்காக உயிர் நீத்த இவர்களின் ஆன்மாக்களை நாங்கள் என்றென்றும் நினைவு கூர்ந்து, அவர்களின் தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் உணர்வை எங்களுக்கு தந்துருள்ள வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

4. எங்கள் பாவங்களுக்காக உயிர் நீத்த எம் இறைவா! சிலுவை மரணத்தின் மூலம் பாவத்திலிருந்து மீட்கப்பட்டு நாங்கள் அனைவரும், மென்மேலும் பாவங்களை செய்யாமல் எங்களுடைய ஆன்மாக்களை காத்துக்கொண்டு, நித்திய வாழ்வை நோக்கி பயணிக்கும் அருள் வரங்களை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. இம்மண்ணில் வாழும் மனிதர்களாகிய நாங்கள் அனைவரும் எங்கள் வாழ்விற்கு ஒரு முடிவு உண்டு என்பதை உணர்ந்து, நாங்கள் வாழும் நாட்களில் எங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்தும், பிறர் எங்களு செய்த உதவியை நினைவுகூர்ந்தும்  வாழ வேண்டிய வரங்களை தந்தருள் வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.


#Before download leave your comment and share 

Download

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...