Showing posts with label Sunday Intro. Show all posts
Showing posts with label Sunday Intro. Show all posts

Wednesday, November 20, 2024

கிறிஸ்து அரசர் பெருவிழா 24-11-2024

கிறிஸ்து அரசர் பெருவிழா 24-11-2024

கிறிஸ்து அரசர் பெருவிழா 24-11-2024

திருப்பலி முன்னுரை

திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் கிறிஸ்து அரசரின் பெருவிழாவைக் கொண்டாட அழைக்கப்படுகின்றோம். ஏழ்மையின் வடிவாய் மாட்டு தொழுவத்தில் பிறந்த இறைமகன் இயேசு, தன் அன்பின் போதனையால் அனைவரையும் தன்பால் ஈர்த்து இவ்வுலகின் அரசராக விளக்குகின்றார். இறைத்திருவுளத்தை நிறைவேற்றுவதையே, என் உணவு என்று மொழிந்த இயேசு கிறிஸ்து, இறையாட்சியை கட்டி எழுப்பதின் வாயிலாக, இறையாட்சின் அரசராக விளங்குகின்றார். இவ்வுலக அரசர்களும், தலைவர்களும் தங்களுடைய மக்கள் தங்களை கொண்டாட வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், நம்முடைய இயேசு கிறிஸ்து, நம்முடைய பாவங்களை தன் மீது ஏற்றுக் கொண்டு நமக்காக சாவை எதிர்கொள்ளும் போர்வீராக, நம்மை பாவத்திலிருந்து மீட்டார். நமக்காக இயேசு எளிமையை தேர்ந்து கொண்டார். பாவத்தில் விழுந்த மக்களை, தன் அன்பின் ஆளுகைக்குள் கொண்டு வந்து, இறையன்வையும், பிறர் அன்பையும் மையமாக வைத்து வாழும் படி நம்மை அழைக்கின்றார். நாம் இறைவனையும், நம் அயலாரையும் முழு மனதுடன் அன்பு செய்யும் பொழுது கிறிஸ்து அரசரின் குடிமக்களாகின்றோம். இவ்வுலகில் அன்பின் பற்றாக்குறையினால்தான் வன்முறைகள், கலவரங்கள் மற்றும் இனவெறி தாக்குதல்கள் என அனைத்தும் நிகழ்கின்றன. எனவே, நம்முடைய இல்லங்களிலும், நம்முடைய சமூகத்திலும் கிறிஸ்து அரசரின் இறையாட்சி மதிப்பீடுகள் மேலோங்க இத்திருப்பலியில் ஜெபிப்போம். மேலும், மதப் பிளவு வாதத்தாலும், இன வேற்றுமையாலும் மணிப்பூரில் நிலவும் வன்முறைகளை விரைவில் முடிவிற்கு வந்து அங்கு அமைதி நிலவ வேண்டுமென்று நம் கிறிஸ்து அரசரிடம் சிறப்பான முறையில் இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

பாவத்தில் விழுந்த தன் மக்களை, பாவத்தின் கோர பிடியிலிருந்து மீட்பதற்காக இறைவன் ஒரு மீட்பரை அனுப்புவதாக பல இறைவாக்கினர்கள் வழியாக முன்மொழிந்தார். இன்றைய முதல் வாசகத்தில் தானியேல் இறைவாக்கினரும் வரவிருக்கும் மீட்பரைப் பற்றி எடுத்துரைக்கின்றார். எல்லா நாட்டிற்கும் அரசராக வரப்போகும் மீட்பரை பற்றி எடுத்துரைக்கும்; இம்முமுதல் வாசகத்திற்கு கிறிஸ்து அரசரின் வருகையை எதிர்பார்தது, கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இவ்வுலகில் எந்த அரசராலும் வெற்றி கொள்ள முடியாத சாவை, நம்முடைய கிறிஸ்து அரசர் வெற்றி கொண்டார். உலக மக்களின் பாவங்களுக்காக மரித்த இயேசு கிறிஸ்து சாவின் சூழ்ச்சியை வென்று நம்மை பாவத்திலிருந்து மீட்டார். அப்படி நம்மை மீட்ட இறைவன் என்றென்றும் இருக்கின்ற இறைவனாய் இருக்கின்றார் என்பதை விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.

மன்றாட்டுகள்

  1. திருஅவையின் தலைவரே எம் இறைவா! கிறிஸ்து அரசின் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும், கிறிஸ்து அரசரின் மதிப்பீடுகளை நன்குணர்ந்து, அதன் படி வாழவும், கிறிஸ்துவின் அன்பு பாதையை உலகெங்கும் பரப்பவும் தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அரசர்களுக்கெல்லாம் அரசரே எம் இறைவா! மக்களை ஆளும் தலைவர்கள் அனைவரும் தங்களின் சுயநலம் பாறாமல், கிறிஸ்து அரசரைப் போல பிறர்நலனைப் பேணவும், மக்களிடம் உள்ள பாகுபாடுகளைக் களைந்து, நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டிய மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அமைதியை நிலைநாட்ட வந்த எம் இறைவா! மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்ட்ட அனைவருக்கும் நீரே அருதலாக இருந்து, அங்குள்ள பதற்ற சூழ்நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றும், பெண்கள் மீது நடத்தப்டும் தொடர் தாக்குதல்களை முழவதுமாக நிறுத்த வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அன்பை போதித்த எம் இறைவா! கிறிஸ்து அரசின் இறையாட்சி மதிப்பீடுகளான இறையச்சம், பிறரன்பு மற்றும் எற்றுக்கொள்ளல் ஆகியவை எங்கள் இல்லங்களில் என்றும் நீடித்திருக்கவும், கிறிஸ்து அரசின் குடிமக்களாக நாங்கள் எங்கள் இல்லங்களிலும், சமுதாயத்திலும் வாழவும் வேண்டிய வரங்களை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. ஏழ்மையை நீக்க வந்த எம் இறைவா! போர்களாலும், தவறான பொருளாதார கொள்கைகளாலும் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் அனைவரின் வாழ்வையும் நீரே மேம்படுத்த வேண்டும், அவர்கள் வாழ்வின் அன்றாட தேவைகளை நிறைவேற்ற தேவையான உதவிகளைச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25 திருப்பலி முன்னுரை தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்...