பொதுக் காலம் 13-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
இறை நம்பிக்கையில் வேரூன்றி. இவ்விறைப் பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே ! இறைவன் நம்மீது கொண்டுள்ள அன்பை தம்முடைய படைப்புகளின் மூலமும், இறை பராமரிப்பின் வழியாகவும் நமக்கு வெளிப்படுத்துகிறார். இவ்வாறு இறைவன்
தம்மை வெளிப்படுத்தும் பொழுது நாம் அதை புரிந்துகொள்ள நமக்கு அழமான விசவாசம்
என்பது இன்றியமையாதது. இன்றைய வசனங்கள் அனைத்தும் நம்முடைய விசவாசத்தின் ஆழத்தை
அளவிட நம்மை அழைக்கின்றது. இறைவனுடனும், சக மனிதர்களுடனும் நல் உறவை ஏற்படுத்த நம்பிக்கை மிகவும் முக்கியமானது. நாம்
நம்மடைய நம்பிக்கையை இறைவனிடத்திலும், பிறரிடத்திலும் வெளிப்படுத்துவதற்கான எளிய வழியை இன்றைய வசனங்கள் நமக்கு
கற்பிக்கின்றன. நாம் செய்யும் சின்னச் சிறு செயல்கள் முலம் நம்முடைய நம்பிக்கையை
வெளிப்படுத்துவதே அந்த எளிய வழி.
செயல்கள் அற்ற விசுவாவம், செத்த விசுவாசம் என்ற
பவுல் அடியாரின் சொற்களுக்கேற்ப நாம் நம்முடைய நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்க
வேண்டும். நம்முடைய இறை நம்பிக்கையை இறைவழிபாட்டின் மூலம் மட்டும்
வெளிப்படுத்தாமல் தூய்மையான வாழ்வின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். பிறரிடத்தில்
நாம் கொண்டுள்ள அன்பை கனிவான வார்த்தைகாளால் மட்டும் வெளிப்படுத்தாமல், கரிசனை கொண்ட செயல்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டும். நம்முடைய சின்னசிறு
செயல்கள் நம்முடைய நம்பிக்கைக்கு எடுத்துகாட்டாய் அமையும். இதன்மூலம் நாம்
இயேசுவோடு இணைந்து; புதுவாழ்வு பெறுவோம்.
அப்புதுவாழ்வை பெற இப்புனிதக் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
வாசக முன்னுரை
முதல் வாசக முன்னுரை
படைப்புகள் அனைத்தும் இறைவனின் இயல்பில் பங்கேற்கின்றன. இறைவன் எந்த
படைப்பையும் அழிவிற்காக படைப்பதில்லை. இறைவன் அழிவில்லாமல் என்றும்
நிலைத்திருப்பது போல அவருடைய படைப்புகாளகிய நாமும் அழிவில்லாமல் என்றும்
நிலைத்திருக்க கூடியவர்கள் என்றும் அதற்கான வழிகளையும் கற்பிக்கும் இம்முதல்
வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
இயேசு இம்மண்ணுலகில் மனிதராய் பிறந்து எளிமையான வாழ்வு வாழ்ந்து தன்னுடைய
அன்பை பிறரிடத்தில் பகிர்ந்தார். நாமும் நம்மிடம் நிறைவாக உள்ளவைகளை பிறரிடத்தில்
பகிர வேண்டும். நாம் நம்மிடத்தில் உள்ளவைகளை பிறரிடத்தில் பகிரும் போது நம்மிடம்
உள்ளவைகள் குறைவுபடாமல் பன்மடங்கு உயரும் என்ற பவுல் அடியாரின் இறை ஒளிக்;கு பக்தியுடன் செவி கொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. ஏளியவரைக் காக்கும் எம் இறைவா! நீர் ஏற்ப்படுத்திய எளிய வழி நற்செய்தி அறிவிப்பு பணியை வார்த்தையாலும், செயல்களாலும் வெளிப்படுத்தும் உம் திருஅவையை நிறைவாக ஆசிர்வதித்து, நற்செய்தி அறிவிப்பில் இன்னும் அதிக வேகத்துடன் பங்கெடுக்க அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2. நலிந்தவர்களின் நம்பிக்கையே எம் இறைவா! தவறான மத கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு பிற நாடுகளையும், தன் நாட்டின் பாமர மக்களையும் நசுக்கும் தலைவர்களுக்கு மனித உயிர்களின் உயர்வை உணர்த்தும் மனிதநேய பண்புகளை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. குழந்தைகளை விரும்பிய எம் அன்பு இறைவா! தலைமுறை இடைவெளியாலும், தகவல் தொழில் நுட்ப கருவிகளாலும் கட்டுண்டு தவிக்கும் எம் குழந்தைகளுக்கு, இறையரசின் மேன்மைகளை உணர்த்தும், நல்ல பண்புகனை கொண்ட வழிகாட்டிகளை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. இறந்தோரை உயிர்த்தெழ செய்ய வல்ல எம் இறைவா! அன்பு, இரக்கம், விசுவாசம் போன்ற இறை மதிப்பீடுகளுக்கு புத்துயிர் அளித்து. மனித மனங்களிலிருந்து மறையும் மதிப்பீடுகளை உயிர்த்தெழ செய்ய தேவையான மனித பண்பினை எங்களுக்கு தந்தருள வேணடுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
5. நம்பிக்கையை வலுப்படுத்தும்
எம் இறைவா! இறை வேண்டலில் ஈடுபட்டு, இறைநம்பிக்கையில் வலுபெற இறைபீடம் சூழ்ந்துள்ள எங்கள் அனைவருக்காகவும்
மன்றாடுகின்றோம். இறைவன் மீதான நம்பிக்கையில் வலுபெற்று, இயேசுவோடு சேர்ந்து புதுவாழ்வு பெற அருள்புரிய வேண்டுமென்று உம்மை
மன்றாடுகின்றோம்.