இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Friday, September 20, 2024

பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு 22-09-2024

 பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு 22-09-2024

பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு 22-09-2024


திருப்பலி முன்னுரை

    ஆயனின் அரவணைப்பில், அன்றாடும் மகிழும் சகோதர, சகோதரிகளே! இறைவன் தன்னுடைய எல்லையில்லா அன்பை நம்மிடத்தில் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். ஆயனற்ற மந்தைகளாய் திரிந்த மக்கள் கூட்டமாகிய நம்மை மீட்பதற்கு எண்ணற்ற இறைவாக்கினர்களையும், நீதிமான்களையும் நம்மிடைய அனுப்பினார். நாம் அவர்களை புறக்கணித்து கடவுளை புறக்கணித்த போதிலும், நம் மீது இறைவன் கொண்ட அன்பானது கடுகளவும் குறையவில்லை. தம் அன்பின் உச்சமாக தன்னுடைய ஒரே மகனையே நமக்கு ஆயனாக அனுப்பினார். பொல்லாதவர்கள் நீதிமான்களை சோதிப்பது போல, தீய எண்ணம் படைத்த பொல்லாதவர்கள் இறைமகன் இயேசு கிறிஸ்துவையும் சோதித்தார்கள். இருப்பினும் இயேசு கிறிஸ்து, தனக்கு அளிக்கப்பட்ட அத்தனை தடைகளையும் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாக கருதி, பாடுகளின் பலனால் நம் அனைவரையும் ஒரே மக்களினமாக கட்டி எழுப்பினார். சிதறடிக்கப்பட்டு, அல்லல்படும் உள்ளங்களுக்கு நலம் அளிக்கும் நல் ஆயனாக நம் இயேசு கிறிஸ்து விளங்குகின்றார்.. நலம் தரும் நல்ல ஆயிரம் இயேசு கிறிஸ்துவை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். இயேசு கற்பித்த அன்பின் பாதையில் நாம் நமது வாழ்வை செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் நாம் இயேசு கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றோம். இயேசு கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக் கொள்ள வரம் வேண்டி இந்த உறவின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசகம் முன்னுரை

இறைவனின் வார்த்தைகளை கேட்டு, அவற்றின் படி நடப்பவர்களே நீதிமான்கள் ஆவார்கள். இறைவனின் சித்தப்படி வாழும் இந்த நீதிமான்களின் வாழ்வில் பொல்லாதவர்கள் எண்ணற்ற தடைகளை உருவாக்குவார்கள். நீதிமான்களை நீதியின் வழியில் இருந்து வழிமாற்ற அவர்கள் எண்ணற்ற சிக்கல்களை உருவாக்குவார்கள் என்ற செய்திகளை கூறும் முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இறைவன் அளிக்கும் ஞானத்தை பெற நம்முடைய சிற்றின்ப ஆசைகளே தடையாக உள்ளது. நாம் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதும், எதிராக தீங்கு நினைப்பதற்கும் இந்த சிற்றின்ப ஆசைகளை முதன்மை காரணிகளாக அமைகின்றது. சிற்றின்ப ஆசைகளை விடுத்து இறைவன் தரும் ஞாணத்தை பெற அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.


மன்றாட்டுகள்

1. இன்னல்கள் மூலம் எங்களை பாவத்திலிருந்து மீட்ட எம் அன்பு இறைவா! பாவத்திலிருந்து நீர் மீட்ட அன்பின் சமூகத்தை, அன்பின் வழியில் தொடர்ந்து நடத்திச் செல்லும் திருஅவையையும், அதன் அனைத்து உறுப்பினர்களையும்  ஆசீர்வதியும், இவர்கள் அனைவரும் மக்களை வழிநடத்தும் நல் ஆயர்களாக செயல்பட வேண்டிய இறை ஞானத்தை தந்தருள வேண்டுமென்று  உம்மை மன்றாடுகின்றோம்.

2. நீதிமான்களின் பக்கம் நிற்கும் என் அன்பு இறைவா! எந்த சூழ்நிலையிலும் நீதி தவறாது, உண்மைக்காக சான்றுபகரும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் அனைவரும் நீதியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க தேவையான மன வலிமையை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. வழிநடத்து நாயகனே எம் இறைவா! வாழ்வில் சாதிக்கும் எண்ணத்துடன் அன்றாடம் போராடும் இளைஞர், இளம் பெண்களை உன் பாதம் சமர்ப்பிக்கின்றோம், இவர்களுக்கு நீரே நல்ல வழிகாட்டியாகவும், ஆயனாகவும் இருந்து அவர்களின் லட்சியத்தை அடைய அவர்களுக்கு உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. காணாமல் போன ஆன்மாக்களைத் தேடி மீட்ட அன்பு இறைவா! இறைவனை விட்டு விலகி, இறைப் பற்றி இல்லாமல் வாழும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களை உம் எல்லையில்லா வரங்களால் ஆசீர்வதித்து, உம் பாதம் திருப்பி, இறை ஞானத்தை உடைய நல்ல மக்களாக வாழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. இயற்கையை ஆளுகை புரியும் இறைவா! மாறிவரும் பருவநிலை மாற்றத்தை நாங்கள் உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் எங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ளவும், மென்மேலும் இயற்கையை காயப்படுத்தாமல் அதனை அழகுப்படுத்தும் புண்ணிய செயல்களில் ஈடுபடவும் வேண்டிய அறிவை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்


To Download PDF

No comments:

Post a Comment

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...