இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Friday, November 28, 2025

Advent First Week - Hope

 திருவருகைக் காலம் முதல் ஞாயிறு 
**Advent Mass Introduction
**Catholic Mass Introduction

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமானவர்களே! இன்று திருவருகை காலத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் அடி எடுத்து வைக்கிறோம். இக்காலம் இறைமகனின் வருகைக்காக நம்மை தயாரிக்கின்ற காலம். அதிலும், சிறப்பாக திருவருகை;காலத்தின் இம்முதல் வாரத்தில் நாம் கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையை பலப்படுத்த அழைக்கப்படுகின்றோம். இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்காக நாம், நம் இல்லத்தை மட்டுமல்லாமல், நம் உள்ளங்களையும் தயாரிக்க இத்திருவருகைக்காலம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. 

இன்றைய மூன்று வாசகங்களும் இறைமகனின் வருகையை பற்றியும் அதற்காக நாம் மேற்கொள்ள வேண்டிய தயாரிப்பு கடமைகளை பற்றியும் நமக்கு போதிக்கின்றன. இறைவனின் வார்த்தைகளுக்கேற்ப நோவா தன்னை தயார்படுத்திக் கொண்டார். அதனால், தன்னுடைய உயிரையும், இறைவனோடு கொண்ட உறவையும் காத்துக்கொண்டார். நோவாவைப் போல் நாமும் நம்முடைய இறைமகனின் வருகைக்காக நம்மை தயார் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் நம்மை தயார் செய்யும் பொழுது கிறிஸ்து பிறப்பின் மகிழ்வில் தகுதியுடன் பங்கெடுக்க முடியும். எனவே, கிறிஸ்து பிறப்பின் நிகழ்விற்காக நம்மைத் தயாரிக்கும் இத்தாயரிப்பின் பயணத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

கிறிஸ்துமஸ் ரீத் முன்னுரை

நம்பிக்கை

கிறிஸ்துவில் நம்பி;க்கைக் கொள்வோர் என்றென்றும் வாழ்வு பெறுவர் என்ற இறைவார்த்தைகளை மையமாக வைத்து நம்முடைய நம்பிக்கை வாழ்வை ஆழப்படுத்த வேண்டும். அதே வேளையில், நம்முடைய நம்பிக்கை நம் செயல்களில் வெளிபட வேண்டும். இதைத்தான், புனித பவுல் செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம் என்கின்றார். நம்முடைய சொல், செயல்களில் நம்முடைய கிறிஸ்துவின் போதனைகளை வெளிப்படுத்தவும். நம் அயலாரை அன்பு செய்தல், பிறருக்கு உதவுதல், இறைவனைனோடு கொண்ட உறவை இறைவேண்டல் மூலம் அதிகரித்தல் போன்ற நம்பிக்கையின் கனிகளை நம்முடைய வாழ்வாக்குவதன் அடையாளமாக இந்த நம்பிக்கையின் திரியை ஏற்றி திருவருகைக்காலத்தின் முதல் படிநிலையில் பயணமாக தயாராகுவேம். 

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரின் ஆசிர் பெற்ற மக்களினமாக கருதிய இஸ்ரேயல் மக்கள் தங்களுடைய பாவங்களால் இறைவனை மறுத்தலித்தனர். இருப்பினும், இறைவன் முன்குறித்தது போல தன்னுடைய மகனை இறைமக்களின் மீட்புக்காக அனுப்புவதாக முன்னறிவித்தார். இவ்வாறு, வரப்போகும் மீட்பரை எதிர்நோக்கி காத்திருக்கும் நமக்கு அளிக்கப்பட்ட இம்முதல் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்தவ வாழ்வென்பது கிறிஸ்துவின் வார்த்தைகளை அறிந்து, அதன்படி வாழ்வதாகும். கிறிஸ்துவின் மக்கள் என்பவர்கள் நீதிநெறி தவறாமல், ஒளியில் நடப்பவர்கள் ஆவார்கள். கிறிஸ்துவை எதிர்நோக்கி நம்பிக்கையுடன் காத்திருக்கும் நாம் அனைவரும் நம்முடைய வாழ்கையை நிதியின் பாதையில் நடத்துவதற்கு அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. இறையன்பையும், இறைவன் தரும் மீட்பையையும் இவ்வுலகிற்கு என்றென்றும் அளிப்பதற்காக உழைக்கும் திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, உம்முடைய அன்பின் பாதையில் பயணித்து, இறைவன் தரும் மீட்பை நாங்கள் எமதாக்கிக் கொள்ள வரமருள வேண்டுமென்று உம்;மை மன்றாடுகிறோம்.

2. இவ்வுலகத் தலைவர்கள் தங்களின் நலனிலும், புகழிலும் அக்கறை கொள்ளாமல், மக்களின் நலனுக்காக இடைவிடாது உழைக்கவும், மக்களை இனத்தின் அடிப்படையில் பிரித்தாளாமல் அன்பினை ஆதாரமாக வைத்து, அமைதியான உலகை உருவாக்க வரமருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்

3. இறையரசை நிறுவிய எம் இறைவா! கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாங்கள் அனைவரும், கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, இறப்பு மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றில் முழுமையான நம்பிக்கை கொண்டு, கிறிஸ்துவின் வாழ்வை எங்களுடைய பாதையாக மாற்றிக்கொள்ள வரமருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

4. கிறிஸ்துவின் பிறப்பை எதிர்நோக்கி நம்பிக்கையுடன் காத்திருக்கும் எங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதியும், இறைவன் தரும் அன்பை நாங்கள் முழுமையாக உணர்ந்து அதை எங்கள் இல்லத்திலும், சமூகத்திலும் பிறருடன் பகிர்ந்து முழுமையான மனித வாழ்வு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


Friday, November 21, 2025

Christ the King Tamil Mass Introduction 2025

 கிறிஸ்து அரசர் திருவிழா (23-11-2025)

https://iraivelicham.blogspot.com/2025/11/christ-king-tamil-mass-introduction-2025.html


திருப்பலி முன்னுரை

இறையரசின் பெருமகிழ்வு கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்துள்ள சகோதர, சகோதரிகளே! மனிதர்களாகிய நம்மிடத்தில் மனிதராய் பிறந்த இயேசு கிறிஸ்து இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றியதன் மூலம் இறப்பின் மீது வெற்றி கொண்டு இறையரசிற்கு அடித்தளமிட்டார். அவருடைய அன்புக் கட்டளைகளை கடைபிடித்து இறையரசின் மக்களாக வாழ நம்மையும் அழைக்கின்றார். 

கிறிஸ்துவின் இறையரசு இம்மண்ணகத்தைச் சார்ந்தது அல்ல. இம்மண்ணக இறையரசைப் போன்று நிலப் பலத்தையும், செல்வத்தையும் முன்னிறுத்தக் கூடியதல்ல. இறையரசின் வருகையானது நம்முடைய தன்னலமற்ற வாழ்வில் மையம் கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இறையரசை எதிர்நோக்கியிருப்பது என்பது காணாத ஒன்றுக்காக காத்திருப்பதில்லை. உண்மையில், அனைத்தையும் படைத்த இறைவனையும், இறைவன் படைத்த அனைத்தையும் நாம் அன்பு செய்யும் பொழுது நம்மிடையே இறையரசு நிலைநிறுத்தப்படும். 

எதிர்நோக்கின் திருப்பயணிகளாக இவ்-ஜீபிலி ஆண்டில் பயணிக்கும் நாம் அனைவரும் நம்முடைய பயணத்தின் பலனாக அன்பு கொண்ட, நம்முடைய கனிந்த உள்ளதை கிறிஸ்து அரசருக்கு காணிக்கையாக்க வேண்டும். திருமுழக்கின் வழியாக கிறிஸ்துவில் பங்கேற்கும் நாம், இறையரசை எதிர்நோக்கிய நம்முடைய பயணத்தை இறைவனின் அன்புக் கட்டளைகளை பின்பற்றுவதன் வழியாகவே அர்த்தமுள்ளதாக்க முடியும். எனவே, கிறிஸ்துவின் இறையரசில் பங்கேற்ற கிறிஸ்வின் படிப்பினைகளை குறைவின்றி கற்று, அதை நம்முடைய வாழ்வாக்க தேவையான வரங்களை வேண்டி கிறிஸ்து அளிக்கும் இக்கொண்டாட்டத்தில் பெருமகிழ்வுடன் பங்கேற்போம். 

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இஸ்ரேயல் மக்களை ஆசிர்வதித்த இறைவன் அவர்களுக்கு பல்வேறு ஆசிர்வாதங்களை வழங்கினார். அவர்களின் இன்னல் வேளைகளில் அவர்களுக்கு பல்வேறு இறைவாக்கினர்களையும், அரசர்களையும் அளித்துள்ளார். இருப்பினும், இறைவனே அவர்களை ஆட்சி செய்யும் அரசராக என்றும் இருக்கின்றார். பழைய இஸ்ரேயலை ஆட்சி செய்த இறைவனை இஸ்ரேயலை எவ்வாறு வழி நடத்தினார் என்று கூறும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை

தொடக்கத்தில் பாவத்தில் வீழ்ந்த மானிடத்தை மீட்க இறைவன் பல்வேறு இறைவாக்கினர்களை அனுப்பினார். இறுதியில், தன்னுடைய மகனை இவ்வுலகின் தலைப்பேறாக அனுப்பினார். அப்படி மனிதராகவும், இறைவனாகவும் நம்மிடையே தோன்றிய கிறிஸ்துவே, திருச்சiயின் உடலுக்கு தொடக்கும், தலையுமாக இருக்கின்றார் என்று விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம். 

மன்றாட்டுகள்

1. இறையாட்சியை நிறுவ திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! இறையரசை நிறுவும் நோக்குடன் செயல்படும் உம் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். நாங்கள் அனைவரும் இறையரசை நிறுவுவது என்பது எங்களுடைய அன்பை பிறரருன் பகிர்வது என்பதை புரிந்து கொண்டு, அன்பு வாழ்வால் திருஅவையை கட்டியெழுப்ப தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


2. அரசர்களுக்கெல்லாம் அரசரே எம் இறைவா! மக்களை ஆளும் தலைவர்கள் அனைவரும் தங்களின் சுயநலம் பாறாமல், கிறிஸ்து அரசரைப் போல பிறர்நலனைப் பேணவும், மக்களிடம் உள்ள பாகுபாடுகளைக் களைந்து, நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டிய மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.



3. அன்பை போதித்த எம் இறைவா! கிறிஸ்து அரசின் இறையாட்சி மதிப்பீடுகளான இறையச்சம், பிறரன்பு மற்றும் எற்றுக்கொள்ளல் ஆகியவை எங்கள் இல்லங்களில் என்றும் நீடித்திருக்கவும், கிறிஸ்து அரசின் குடிமக்களாக நாங்கள் எங்கள் இல்லங்களிலும், சமுதாயத்திலும் வாழவும் வேண்டிய வரங்களை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


4. ஏழ்மையை நீக்க வந்த எம் இறைவா! போர்களாலும், தவறான பொருளாதார கொள்கைகளாலும் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் அனைவரின் வாழ்வையும் நீரே மேம்படுத்த வேண்டும், அவர்கள் வாழ்வின் அன்றாட தேவைகளை நிறைவேற்ற தேவையான உதவிகளைச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


Irai Velicham Download


 


Saturday, November 15, 2025

Sunday 33 Mass Introduction

பொதுக்காலம் 33 ஆம் ஞாயிறு 

(16-11-2025)

#Iraivelicham
#Mass Introduction


#Sunday Mass       Sunday 33 Mass Introduction

திருப்பலி முன்னுரை

    இறை உறவில் ஒன்றிணைந்த சகோதர சகோதரிகளே! இன்று நம்முடைய திருஅவை பொதுக்காலத்தின் 33 ஆம் ஞாயிறை சிறப்பிக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது. பொதுக்காலத்தின் இறுதி நாள் வாசகங்கள் அனைத்தும் எதிர்வரும் திருவருகை காலத்திற்கு நம்மை தயார் செய்கின்றன. இன்றைய வாசகங்கள் கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் எவ்வாறு வாழ வேண்டும் என்று கற்பிக்கின்றன. அனைவரையும் அன்பு செய்யுங்கள் என்று மொழிந்த கிறிஸ்துவுக்கு இவ்வுலகம் சிலுவையை பரிசாக அளித்தது. இருப்பினும், கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த பொழுதும் “இவர்களை மன்னியும”; என்ற வார்த்தையின் மூலம் இவ்வுலகின் மீது அவர் கொண்ட அன்பை வெளிப்படுத்தினார். இயேசுவை பின்பற்றும் நாம்  நம்முடைய சோதனை காலத்திலும் நம்பிக்கையில் நிலை பெற்று வாழ அழைக்கப்படுகின்றோம் நம்பிக்கையாளர்களின் சமூகமாகிய நாம் நம்முடைய செயல்களில் கிறிஸ்துவை வெளிப்படுத்துவோம. நம்முடைய ஜெப வாழ்வு நம்முடைய விசுவாசத்தையும், நம்மைச் சுற்றியுள்ளவரின் விசுவாசத்தையும் அதிகப்படுத்துவதற்கான வழியாக இருக்க வேண்டும். எனவே, ஜெபத்தின் மூலம் நம்முடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், அந்த நம்பிக்கையின் பலனாக நற்செயல்கள் புரிந்து இச்சமூகத்தை முழுமை பெறச் செய்ய தேவையான அருள் வரங்கள் வேண்டி இந்த மீட்பின் தயாரிப்பில் மகிழ்வுடன் பங்கெடுப்போம்

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

பாவத்தின் பிடியிலிருந்து நாம் மீண்டெழும் பொழுது நம்முடைய மனித இயல்புகளைத் துறந்து இறைப்பண்புகளைப் பெறுகின்றோம். அப்படி, நாம் நிதியின் பாதையில் நடக்கும் பொழுது நம்முடைய உள்ள அழுக்குகள் அகன்று, இறைவனுக்கு ஏற்ற வாழ்வு வாழ முடியும் என்றும், இறைவனில் நம்பிக்கை கொள்வோர் புதுவாழ்வு பெறுவர் என்றும் நம்பிக்கையூட்டும் இம்முதல் வாசகத்திற்கு செவிகொடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்து இறந்து உயிர்த்து பின்பு திருத்தூதர்கள் கிறிஸ்துவின் வாக்கின்படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டனர். தங்களுடைய வார்த்தைகளால் மட்டும் இயேசுவை கற்பிக்காமல், தங்களுடைய செயல்களில் கிறிஸ்துவின் படிப்பினைகளை வெளிப்படுத்pனார். திருத்தூதர்களைப் போன்று செயல்களின் மூலம் கிறிஸ்துவை வெளிப்படுத்த அழைபு;பு விடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்தை பக்தியுடன் கவனிப்போம்.

மன்றாட்டுகள்

1. உம் அன்பின் அடையாளமாக திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! உம் திருஅவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும், அன்பை எங்கள் வாழ்வின் அடித்தளமாக கொண்டு வாழவும், நாங்கள் அடைந்த இறையனுபவத்தையும், இறை ஆனந்தத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் தேவையான வரங்களைப் பொழிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. வாழ்வளிக்கும் எம் இறைவா! இயற்கை இடர்களாலும், மனிதச் செயல்களாலும் தங்கள் வாழ்வை இழந்த அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். பல உயிர்களையும், உறவுகளையும் இழந்த இவர்களுக்கு நீரே துணையாக இருக்க வேண்டுமென்றும், அவர்கள் வாழ்வின் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப தேவையான உதவிகளைச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. சிலுவை மரணத்தால் இவ்வுலகை மீட்ட எம் இறைவா! நாங்கள் எங்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பங்களை எதிர் கொள்ள வேண்டிய மன உறுதியை எங்களுக்கு அளித்தருளும். எங்களுடைய நம்பிக்கை வாழ்வில் தளராமல், நம்பிக்கையின் துணை கொண்டு அனைத்து தீமைகளை வெற்றி கொள்ள எங்களுக்கு தேவையான இறைஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. காயப்பட்ட ஆடுகளை தேடிச் செல்லும் இறைவா! சமூகத்தில் உடலளவிலும், உள்ளத்தளவிலும் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், நாங்கள் உதவியாக இருக்க அருள்புரியும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கும் எங்களுக்கு தேவையான நல்ல மனதை தந்தருள வெண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


Download

Friday, November 7, 2025

Sunday Mass Introduction - 32 Sunday

பொதுக்காலம் 32 ஆம் ஞாயிறு

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு
09-11-2025
Sunday Mass Introduction

Sunday Mass Introduction -  32 Sunday

திருப்பலி முன்னுரை

நொருங்கிய உள்ளத்தை பலியாக அளிக்க இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! இன்று நம் தாயாம் திருஅவை அதனுடைய தலைமைப்பீடமான புனித லூத்தரன் ஆலய நேர்ந்தளிப்பு பெருவிழாவை கொண்டாட நமக்கு அழைப்புவிடுக்கின்றது. சிறப்புமிக்க இந்நாளில், நம் திருஅவையின் தோற்றத்திற்கான காரணத்தையும், நம்முடைய கிறிஸ்துவ வாழ்வையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். பாவத்தின் பிடியில் சிக்குண்ட ஆன்மாக்களை மீட்பதற்காக, கிறிஸ்து மனிதராக பிறந்தார். அன்பின் பாதையில் நடப்பதன் வழியாக நாம் பாவத்திலிருந்து விடுபட முடியும் என்று தன் சொல்லாலும் செயலாலும் கற்பித்தார். இறுதியில் அன்பின் இறையரசை தன்னுடைய பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு மூலம் நிறுவினார். அதன்படி, ஆன்மாக்களை மீட்கும் பணியை தொடர்ந்தாற்ற திருஅவையை ஏற்படுத்தினார். அவ்வண்ணம், இறைவனால் ஏற்படுத்தப்பட்ட திருஅவையின் உறுப்பினராக இருக்கும் நம்முடைய சிந்தனையும், செயலும், சொல்லும் அதற்கேற்றவாறு உள்ளதா? என சிந்திப்போம்.  நம் குடும்பத்திலும், இறைச் சமுகத்திலும் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுகின்ற பொழுது நாம் கிறிஸ்துவின் சிடர்களாகின்றோம். எனவே, லூத்தரன் ஆலய நேர்தளிப்பு விழாவை கொண்டாடும் இந்நாளில், நம்முடைய ஆன்மாவை இறைவனுக்கு காணிக்கையாக்கி நம்முடைய ஆன்ம மீட்புக்காகவும், நம்முடைய அயலாரின் மீட்புக்காகவும் சிறப்பாக செபிப்போம்.

வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை

இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட இஸ்ரேயல் மக்கள், இறைவனின் வாக்கிற்கேற்ப தங்கள் வாழ்வை நடத்தாததால் பல்வேறு நாடுகளுக்கு சிதறடிக்கப்பட்டனர். சிதறடிக்கபட்ட மக்களை இறைவாக்குரைத்து இறைவனின் பாதையில் இறைவாக்கினர்கள் வழிநடத்தினர். இன்று எசேக்கியல் இறைவாக்கினரும், இஸ்ரேயல் மக்களின் கனவான வழிபாட்டு அலயத்தையும். நம் உள்ள ஆலயத்தையும் இம்முதல் வாசகத்தில் ஒப்பிடுகின்றார். எனவே, உள்ள மாற்றத்திற்கு அழைப்புவிடுக்கும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை

நம்முடைய ஆன்மாவை கட்டியெழுப்புவதற்காகவே கிறிஸ்து திருஅவையை ஏற்படுத்தினார். இந்த திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் அன்பின் பாதையில் நடப்பதன் மூலம் நம் ஆன்மாவினை கட்டியெழுப்ப முடியும். அதன்படி, தூய ஆவியாரின் துணை கொண்டு அன்பின் பாதையில் பயணிக்க அழைப்பு விடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் கவனிப்போம்.


மன்றாட்டுகள்

1. அன்பின் அடையாளமாக திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! உம் திருஅவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும், உம்முடைய அன்பின் கட்டளைகளை குறைவின்றி கற்க வேண்டுமென்றும், எங்கள் உள்ள ஆலயத்தையும், வழிபாட்டு ஆலயத்தையும் அன்பு நிறைந்த செயல்களால் அலங்கரிக்க தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. வழிநடத்தும் எம் இறைவா! இச்சமுகத்தின் தூண்களான இளைஞர், இனம் பெண்களை நிறைவாக ஆசிர்வதியும். தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், தங்களைச் சார்ந்தவர்களின் நலனில் அக்கறை கொள்ளவும் அவர்களுக்கு தேவையான ஞானத்தை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. பெண் சீடர்களை உயர்த்திய எம் இறைவா! எங்களுடைய இல்லத்திலும், சமுகத்திலும் வாழும் பெண்களுக்கு உரிய மதிப்பளித்திட வேண்டிய வரங்களை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்றும், இச்சமுகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்புடன் வாழ்வதற்கான மேம்பட்ட சமுகத்தை கட்டியெழுப்புவதற்கான சுத்தமான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பு செய்ய அழைப்பு விடுக்கும் எம் இறைவா! இவ்வுலகெங்கும் போர்களாலும், இனவாதத்தாலும் பாதிக்கபட்டு தங்கள் உயிரையும், உறவுகளையும் இழந்த அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். “உம் அயலாரை, உன்னை அன்பு செய்தது போல் அன்பு செய்” என்ற இயேசுவின் அழைப்பினை ஏற்று, இவ்வுலகினை அன்பினால் கட்டியெழுப்ப தேவையான மனநிலையை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


Comment , Share

Download

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...