பொதுக்காலம் 17ம் ஞாயிறு 28-07-2023
திருப்பலி முன்னுரை
வெண்ணிற அப்பமும், திராட்சை இரசமும் இயேசுவின் திருவுடலாகவும், திருஇரத்தமாகவும் மாறும் அருளடையாளக் கொண்டாட்டத்தில் பங்கொள்ள வந்திருக்கும் சகோதர சகோதரிகளே! இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகளை நினைவு கூறும் பொதுக்காலத்தின் 17ம் ஞாயிற்று திருப்பலியில், இயேசு எவ்வாறு மக்களுக்கு தன்னுடைய இறை இயல்பை வெளிப்படுத்தினார் என்பதை அறிந்து கொள்ளவதற்கு நம் தாயாம் திருஅவை நமக்கு அழைப்பு விடுகின்றது. கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்கு பெற்று, அவரால் இணைக்கப்பட்ட நாம் அனைவரும், கிறிஸ்துவை தலையாகக் கொண்டு அவர் உடலின் பாகங்களாக செயல்படுகின்றோம். நாம் அனைவரும் எவ்வித வேறுபாடுமின்றி கிறிஸ்துவின் இரத்தால் மீட்புப் பெற்றுள்ளோம். நமக்காக இம்மண்ணுலகில் பிறந்த இயேசு கிறிஸ்து தன் வாழ்வாலும், மலைப்பொழிவாலும், சிலுவைப் போதனையாலும் தன் அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றார். அதன் ஒரு பகுதியாகவே அப்பத்தை பலுக பெருகச் செய்து தன் இறைத்தன்மையையும், மக்களிடத்தில் தாம் கொண்டுள்ள அன்பையும் வெளிப்படுத்துகின்றார். அதன் தொடர்ச்சியாக நம்மிடையே அப்ப, இரச வடிவில் இயேசு இன்றும் நம்மிடையே இருக்கின்றார். நம்மிடையே என்றும் வாழும் இறைவனின் இயல்பை பெற தகுதி பெறும் பொருட்டு இந்த மகிழ்வின் கொண்டாட்டத்தில் மகிழ்வுடன் பங்குகொள்;வோம்.
வாசக முன்னுரை
முதல் வாசக முன்னுரை
எல்லாம் வல்ல இறைவனால் இயலாதது எதுவுமில்லை. இறைவனின் வாக்கை இம்மியும் வழுவாது பின்பற்றினால், இறைவன் நமக்காக வைத்திருக்கும் பல புதுமைகளை நாம் பெறலாம். இறைவனின் வார்த்தைகளை பின்பற்றியதால் இறைவாக்கினர் எலியா செய்த புதுமையை விவரிக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
எல்லாருக்கும் மேலான இறைவனின் இறைப்பண்புகளையும், அவருடைய இயல்புகளையும் நாம் நம்முடைய அறிவால் அல்ல, அனுபவத்தாலே தெரிந்துகொள்ள முடியும். அப்படி அறிந்துகொண்ட கிறிஸ்துவின் மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தை பக்தியுடன் கவனிப்போம்.
மன்றாட்டுகள்
1. இறைவாக்கினர்களை இவ்வுலகிற்கு அனுப்பிய எம் இறைவா! இறைவாக்கினர்களின் பணியை இவ்வுலகில் ஆற்றும் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். நாங்கள் அனைவரும் இறைவாக்குரைக்கும் பணியை முழு ஈடுபாட்டுடன் ஆற்றிட தேவையான இறைவலிமையை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2. உறவை மேம்படுத்தும் எம் இறைவா! நாடுகளுக்கிடையிலும், இனக்குழுக்களுக்கும் இடையும் உள்ள மோதல்களை சரிசெய்து, அனைவரும்; இறைவனின் பிள்ளைகள் என்ற கண்ணோட்டததுடன் ஒருவரொருவரை நடத்திட வேண்;டிய மனித பண்புகளை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. பகிர்வின் நாயகனே எம் இறைவா! எம் நாட்டு தலைவர்கள் நாட்டின் மொத்த வளங்களையும் தங்களுடைய சுயநல எண்ணங்களுக்காக ஓரே இடத்தில் குவிக்காமல். அனைவருக்கும் சமமான முறையில் பகிர்ந்தளிக்கவும், நாட்டினை வெறுப்புணர்வின் அனலில் அளாமல,; அனைவரையும் அரவணைத்து செல்லும் நல்ல பண்பினை தந்தருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.
4. சொல்லுக்கு செயல் வடிவம் அளிக்கும் அற்றலை எங்கள் அனைவருக்கும் தந்தருளும். பிறரிடத்தில் நாங்கள் கொண்டுள்ள அன்பை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்தாமல் அன்பு நேச செயல்களால் வெளிப்படுத்தி, அன்பால் எம் சமுகத்தை கட்டி எழுப்ப வேண்டிய அணைத்து வரங்களை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. குணமளிக்கும் எம் இறைவா! மாறிவரும் காலநிலை மாற்றத்தாலும், துரித உணவு கலச்சாரத்தாலும் பாதிக்கப் பட்டு, உடல் நோயல் வருந்தும் அனைவரையும் முழமையாய் ஆசிர்வதித்து, அவர்களுக்கு பூரண உடல் நலனை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
Leave your comments and Share with your Friends




