Thursday, February 13, 2025

பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு – 16-02-25

பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு 

16-02-25

பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு – 19-02-25

                                    இயேசுவின் மலைப் பொழிவு


திருப்பலி முன்னுரை

இவ்வுலக மக்களாகிய நாம் செல்வமாக கருதுபவை யாவும் இறைவன் முன்னிலையில் மதிப்பற்றதாகின்றது. எனவே, உலக செல்வத்தை சேர்ப்பதால் இறைவன் தரும் நிலைவாழ்வை நாம் உடமையாக்கிக் கொள்ள முடியாது. இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசங்களும் இறைவன் தரும் நிலைவாழ்வை பெறுவதற்காக தகுதியாக்கிக் கொள்ள நமக்கு அழைப்புவிடுகின்றது. அதிலும் சிறப்பாக, இன்றைய நற்செய்;தியில் இடம் பெற்றுள்ள மலைப்பொழிவு வாசகத்தில் இறைவன் அளிக்கும் விண்ணக இன்பத்தை யார் அடைவார்கள் என்று இயேசுவே பட்டியலிடுகின்றார்.

ஏழைகளையும், நோயளிகளையும் மற்றும் துன்புறுவோரையும் பாவிகள் என்று கருதி இவ்வுலகு வெறுத்த வேளையில், இவர்களுக்கே விண்ணகம் உரியது என்று இயேசு கிறிஸ்து மொழிந்த பொன்மொழிகளை நம்முடைய வாழ்வாக்கி, இறைவன் தரும் நிலையான பெருமகிழ்வில் பங்குகொள்ள நமக்கும் அழைப்பு விடுகின்றார். எளிய இறை நம்பிக்கையின் மூலம், இறைவனின் பிள்ளைகளாகிய அனைவருக்குமாக நாம் வாழ்வோமெனில், இறைவன் நம் இதயத்தில் குடிகொள்ளவார். எனவே, எளிய மனம் கொண்ட இயேசுவின் சிடர்களாகிய நாம் அனைவரும் ஏழைக்களுக்காகவும், துயருவோருக்காகவும் செபிக்க இந்த எளிமையான விருந்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவனை தவிர்த்து, இவ்வுலக செல்வத்தின் மீதும். மனிதர்களும் மீதும் நம்பிக்கை வைப்போமெனில் இறைவன் தரும் மீட்பை நம்மால்; பெற முடியாது. எனெனில், அனைத்தையும் படைத்த நம்முடைய இறைவனே நம்மை காக்க வல்லவர். எனவே, இறைவனில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர் என்றும், நீர் அருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பார்கள் என்று கூறும் இறைவாக்கினர் எசாயா அவர்களின் இறைவாக்கிற்கு கவனமுடன் செவிகொடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு கிறிஸ்து இவ்வுலக மக்கள் அனைவரின் பாவங்களுக்காகவும் இறந்தார். இறந்த இயேசு கிறிஸ்து இறப்பை வென்று, மீண்டும் உயிர்தெழுந்தார். எனவே, அவருடைய சகோதர, சகோதிரிகளாகிய நம்மாலும் பாவத்தை விலக்கி, சாவை வெற்றி கொள்ள முடியும். கிறிஸ்துவோடு இணைந்திருப்போமெனில், கிறிஸ்துவோடு உயிர்த்தெழுவோம் என்ற உயிர்ப்பின் வார்த்தைகள் அடங்கிய இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம். 


மன்றாட்டுகள்

1. எழை, எளியோரின் வாழ்வை நலமாக்க திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! உம் திருஅவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைரும் உலக செல்வத்தில் நாட்டம் கொள்ளாமல், விண்ணகச் செல்வத்தை சேர்ந்து இறைவன் தரும் நிலைவாழ்வை உடமையாக்கிக் கொள்ளவதற்கான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. எழைகளே, நீங்கள் பேறுபெற்றோர் என்று மொழிந்த எம் இறைவா! எங்களிடத்தில் தேவைக்கு மிகுதியாக உள்ளவற்றை பிறருடன் பகிர்ந்து கொண்டு, ஏழைகளின் துயர் துடைக்கவும், அவர்களின் வாழ்வு மேன்மையடைய தேவையான நல உதவிகளை நாங்கள் அவர்களுக்கு செய்திட தேவையான நல்ல மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்களுக்காக மரித்த எம் இறைவா! நாட்டின் எல்லைகளிலும்; மற்றும் எங்கள் மத்தியிலும்; உயிர்களைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடும் வீரர்களுக்காகவும், மருத்துவர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் செய்யும் பணியை நிறைவாக ஆசிர்வதித்து, அவர்களுடைய பணியை கவனமுடன் ஆற்ற அவர்களுக்கு தேவையான அனைத்து வரங்களையும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் இருப்பிடமே எம் இறைவா! இறைவனாகிய உம்மாலே நாங்கள் அனைவரும் மீட்பு பெறுகின்றோம் என்பதை உணர்ந்து, விண்ணக வீட்டை எங்கள் இல்லமாக மாற்ற விண்ணகச் செல்வத்தை சேர்க்க வேண்டிய ஆற்றலை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்றும், அதற்காக எம்மையே நாங்கள் தகுதியாக்கிக் கொள்ள தேவையான அருள் வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. தேடிச் சென்று உதவும் இறைவா! பல்வேறு பிரச்சனைகளால் காப்பகங்களில் இருக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை நாங்கள் செய்யவும், எங்கள் இல்லங்களில் உள்ள குறைபாடுள்ளவர்களை நன்றாக கவனித்து கொள்ளதற்கும் தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.




Sunday Mass Introduction
Catholic Mass 
Tamil Mass Introduction

No comments:

Post a Comment

தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25 திருப்பலி முன்னுரை தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்...