பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு
23-02-25
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவின் அன்பால் ஈர்க்கப்பட்டு இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! பொதுக்காலத்தின் ஏழாம் ஞாயிற்றின் திருப்பலி வாசகங்கள் அனைத்தும் நம்மை அன்பு செய்யவும், நம் அன்பை பிறரோடு பகிர்ந்து வாழவும் அழைக்கிறது. பகைவரையும் அன்பு செய்யுங்கள் என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தை நம்மை சிந்திக்க வைக்கிறது. அன்பு செய்பவரையே பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில், நம் பகைவரையும் வெறுப்போரையும் எவ்வாறு பொறுத்துக் கொண்டு, அன்பு செய்வது? என்ற கேள்வியை நம்மை நோக்கி நாமே எழுப்புவோம். நம்மிடையே நம்முள் ஒருவராக பிறந்து, வளர்ந்து மற்றும் பாடுபட்டு இறந்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிறரன்iபு வெறும் வார்த்தைகளால் அல்லாமல் தம் தினசரி வாழ்க்கையால் வாழ்ந்தும் காட்டினார்.
அன்பே இறைமகனாம் இயேசுவின் சாயலாகும். அவரின் சாயலில் படைக்கப்பட்ட நாம் அவரைப்போல வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் உள்ளத்தில் கோபம், பழிவாங்கும் எண்ணம் மற்றும் பொறாமை பெருகும் பொழுது அவற்றை தூக்கு எரிந்து விட்டு அன்பு, மகிழ்ச்சி, பொறுமை என்னும் தூய ஆவியின் கனிகளை அச்சாணியாக கொண்டு நம் வாழ்வை புதுப்பிப்போம்.
"நாளை நாளை எண்ணாதே நாளை வீணில் களிக்காதே
நாளை செய்யும் காரியத்தை இன்றே செய்து முடித்திடுவாய்!"
என்பதற்கேற்ப நாளை என ஒதுக்காமல், இன்றே நல்லதை செய்ய தொடங்குவோம். பகைவரை அன்பு செய்து, வெறுப்போருக்கு நன்மை செய்து, சபிப்போருக்கு ஆசி கூறி மற்றும் இகழ்வோரை மன்னித்து வாழும் நல் மனம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
தன்னை கொலை செய்ய வந்த சவுலை பழிதீர்க்க தாவீதுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தாவீதோ "ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கைவைக்கமாட்டேன் என்று கடவுள் மேல் உள்ள அன்பையும், பத்தியையும் வெளிப்படுத்தினார். அன்பு எங்கு உள்ளதோ அங்கே மன்னிப்பு இருக்கும். தாவீதைப் போல மன்னித்து வாடி வரம் வேண்டி இ;ம்முதல் வாசகத்திற்கு பக்தியோடு செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
புனித பவுல் கொரிந்து மக்களுக்கு கடவுளின் சாயலையும், மனிதனரின் சாயலையும், அவர்களின் இயல்பையும் இந்த இரண்டாம் வாசகம் வழியாக எடுத்துரைக்கிறார். முதல் மனிதன் ஆதாம் மண்ணிலிருந்து உருவாக்கப்பெற்றார். மண்ணக சாயலைக் கொண்டார். ஆனால் இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். விண்ணக சாயலை கொண்டவர். இம்மண்ணக, விண்ணக சாயலின் விளக்கங்களை அறிந்து கொள்ள உதவும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. உம் எல்லையில்லா அன்பின் அடையாளமாக திரு அவையை ஏற்படுத்திய எம் இறைவா! உம் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும், உம்மைப் போல தங்களிடத்தில் உள்ள அனைத்தையும் பிறரோடு பகிர்ந்து கொண்டு வாழும்; தாராள மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! போதிய உணவு, உடை, உறைவிடமின்றி வறுமையால் வாடும் அனைவரையும் அரவணைக்கும்படி மன்றாடுகின்றோம. இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டிய மனப்பக்குவத்தை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்களை அதிகமாய் அன்பு செய்யும் இறைவா! உலகெங்கும் வெவ்வேறு வழிகளில் உம்முடைய நற்செய்தி அறிவிப்பு பணியை, சமூக நல சேவைகள் மூலம் ஆற்றி வரும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுக்கு தேவையான பொருள் உதவிகளை தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்
4. குழந்தைகளை அன்பு செய்த எம் அன்பு இறைவா! எங்கள் வீடுகளில் உள்ள சிறு குழந்தைகளுக்கு பகிர்வின் மேன்மையை எங்களுடைய செயல்களால் எடுத்துச் சொல்லவும். பிறரன்பு பகிர்வின் பாதையில், அவர்களை; நன்முறையில் வளர்த்திட வேண்டிய ஞானத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
5. தலைமை குருவே எம் இறைவா! நீர் ஏற்படுத்திய நற்செய்தி பணியை இவ்வுலகில் தொடர்ந்து ஆற்ற, தேவையான இறை அழைத்தல்களை தந்தருள வேண்டுமென்றும், சிறப்பான முறையில் எங்கள் பங்கில் இறை அழைத்தலை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment