தவக்காலம் இரண்டாம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
கிறிஸ்து இயேசுவில் அன்புக்குரியவர்களே,
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருப்பலி இயேசுவின் தோற்றம் மாற்ற் நிகழ்வைப் பற்றி சிந்திக்க அழைப்புவிடுக்கின்றது.
இயேசு தோற்றம் மாறும் பொழுது அவருடைய மனித சாயல் மறைந்து, இறைசாயல் வெளிப்படுகிறது. இயேசு தாபோர் மலையில் வேண்டிக் கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது, அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. இந்த தோற்றம் மாறும் நிகழ்வானது இயேசு மனித சாயலும், இறைசாயலும் கொண்டுள்ளார் என்பதை உறுதிபடுத்தி, அவர் கடவுளின் மகன் என்றும், நமக்காக இவ்வுலகிற்கு வந்து, நம் பாவங்களுக்காக தன் உயிரை கையளிக்க போகிறார் என்பதன் முன் அடையாளமாக இருக்கிறது. இயேசு இறைவேண்டல் வழியாக துன்பத்தை ஏற்க வலிமை பெறுகிறார், மனவுறுதி கொள்கிறார். இதன் மூலம் தன் பாடுகளை ஏற்க ஆயத்தமாகிறார்.
ஒவ்வொரு திருப்பலியும் இயேசுவின் பாடுகளை தியானிக்கவும், மனமாற்றம் பெறவும் அழைப்புவிடுக்கிறது. இத்தவக்காலத்தில் பக்தி நிறை செயல்களை செய்து, செபத்தில் நிலைத்து, திருப்பலிக்கு முக்கியதுவம் கொடுத்து, நம் பாவங்களுக்காக மனம் வருந்தி, மன்னிப்பு பெற்று. நம் வாழ்வில் மாற்றம் பெற இத்திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசகம் முன்னுரை தொடக்கநூல் 15:5-12, 17-18, 21
இன்றைய முதல் வாசகமானது தொடக்கநூலிலருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆபிரகாம் ஆண்டவர் மீது கொண்ட நம்பிக்கையும், அதற்கு கைமாறாக இறைவன் அபிரகாமுக்கு ஆசிளித்து அவருடன் உடன்படிக்கை செய்து கொண்டதையும் எடுத்துரைக்கிறது. ஆபிரகாம் போல் ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளவும், அவருடைய முடிவில்லா. அன்பையும், ஆசிரையும் பெற்று கொள்ள அழைப்புவிடுக்கும் இம்முதல் வாசகத்திற்கு பக்தியுடன் செவிசாய்ப்போம்.
இரண்டாம் வாசகம் முன்னுரை பிலிப்பியர் 8:17-4:1
இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் விண்ணக வாழ்வை பற்றி சிந்திக்க அழைப்புவிடுக்கிறார். விண்ணகமே நம் தாய்நாடு என்பதை மையப்படுத்தி, இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வானது நிலையில்லாதது. எனவே, மண்ணகம் சார்ந்தவை பற்றி எண்ணாமல் விண்ணகம் பற்றி சிந்திக்க அழைப்புவிடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. மனமாற்றத்தின் பாதையில் மக்களை வழிநடத்த திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! கிறிஸ்துவின் சீடர்களாகிய நாங்கள் அனைவரும், கிறிஸ்துவின் போதனைகளின் படி எங்கள் வாழ்வை நடத்தவும், கிறிஸ்துவின் பாடுகள் மூலம் நாங்கள் பெற்ற மீட்மை என்றென்றும் காத்துக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2. பாவிகனை மன்னிக்கும் எம் இறைவா! குற்றங்கள் புரிந்து, அதற்காக தண்டனை அனுபவிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் அனைவரும் தங்கள் தவறுகளுக்காக மனம் வருந்தி, தங்கள் வாழ்வை புதிய பாதையில் அமைத்துக் கொள்ள தேவையான அனைத்து வரங்களையும் பொழிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. அமைதியை ஏற்படுத்த வந்த எம் இறைவா! எங்கள் இல்லங்களில் அமைதி, ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல் போன்ற இறைப்பண்புகள் மேலோங்கிட வேண்டுமென்றும், மனமாற்றத்தின் காலமாகிய இத்தவக்காலத்தில் எங்கள் குடும்பங்களில் உள்ள உறவு பிணைப்புகள் வலுப்பெற தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. தங்கள் நாடுகளையும், வீடுகளையும் இழந்து அகதிகளாக வாழும் அனைத்தும் மக்களையும் நிறைவாக அசீர்வதிக்கும்படி மன்றாடுகின்றோம். கடுமையான மன மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் இவர்களை நாங்கள் அனைவரும் எங்களுடைய சகோதரர்களாக கருதி அவர்களுக்கு மதிப்பும், நல்வாழ்வும் அளிக்க தேவையான தாராள மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
5. அன்பின் இறைவா, ஏழ்மையிலும், பசியாலும், பட்டினியாலும் வாடுவோருக்காக செபிக்கின்றோம். இத்தவக்காலத்தில் தர்மம், நோன்பு, இறைவேண்டல் ஆகியவற்றை மையப்படுத்தி வாழும் எம்மக்கள் தங்களால் முடிந்த உதவிகளையும், பொருட்களையும் இல்லாதவர்களோடு பகிர்வாழும் மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment