Thursday, February 27, 2025

பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு 02-03-2025

பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு 

02-03-2025

பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு 02-02-2025


திருப்பலி முன்னுரை

நல்ல உள்ளம் கொண்டவர்களின்; நன்மைத்தன்மை, அவர்களுடைய செயல்களாலே அறியப்படும். இறைவன் மீதும், தம் அயலாரின் மீதும் அன்பு கொண்டவர்கள் ஒருபொழுதும் தீங்கிழைக்க மாட்டார்கள். இருப்பினும், மனித பலவீனத்தால் ஏதேனும் தவறுகள் செய்துவிட்டால், அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பார்கள். இப்படி, தங்களிடத்;தில் உள்ள நம்மைத்தன்மைக்கு செயல் வடிவம் கொடுப்பார்கள். இதைத்தான் புனித பவுல் “செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்” என்று குறிப்பிடுகின்றார்.

இயேசு இவ்வுலகில் பிறந்து, இறைவனிடமிருந்து பெற்ற நன்மைத்தன்மையை யாவருக்கும் பகிர்ந்தளித்தார். தம்முடைய சீடர்களையும் அவர் வழி பின்பற்றி நன்மையை உலகெங்கும் எடுத்துச்செல்ல பணித்தார். அதுபோல, இறைவனின் உண்மையான சீடர்களும் நற்செயல்கள் புரிவதில் ஆர்வம் காட்டுவார்கள். எனெனில், நம்முடைய செயல்களை பொறுத்தே நமமுடைய விசுவாசமானது அறியப்படுகின்றது. இயேசுவின் சீடர்களாக நாம் இருக்க வேண்டுமென்றால் அதற்குரிய பண்புகளையும், செயல்களையும் நாம் கொண்டிருக்க வேண்டும். 

நம்முடைய எண்ணத்தால், வார்த்தையால், சொற்களால் மற்றும் செயல்களால் நம்மிடையே உள்ள நல்லவைகளை பன்மடங்கு பெருக்கி, அதை பன்மடங்கு பிறருக்கு உதவும்படி செய்ய தேவையான ஆற்றல்களை வேண்டி இந்த ஆன்மீக விருந்தில் அர்பணிப்புடன் பங்கேற்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

ஒருவரின் வாயிலிருந்து உதிர்க்கும் வார்த்தைகளும், அந்த வார்த்தைகளோடு பொருந்திய அவருடைய செயல்களுமே, அம்மனிதரின் உள்ளத்து அறைகளின் அழகை இவ்வுலகுக்கு எடுத்துரைக்கின்றன. எனவே, நாம் உதிர்க்கும் வார்த்தைகளுக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னரை

இவ்வுலகின் மீது ஆளுகைப் புரிந்து கொண்டிருந்த பாவத்தையும், அதனால் விளையும் சாவையும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெற்றிக்கொண்டார். அவருடைய சீடர்களாகிய நாமும், பாவத்தை விடுத்து சாவை வெற்றி கொள்ள முடியும். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கைக் கொண்டு பாவத்துக்கிற்கு எதிராக வாழ அழைப்புவிடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.


மன்றாட்டுகள்

1. அன்பு தந்தையே இறைவா, திருஅவையை கட்டி எழுப்ப நீர் தேர்ந்தெடுத்த எம் திருதந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் இருபால் துறைவியருக்காக செமிக்கிறோம். தங்கள் வாழ்வில் வரும் சோதனை, இன்னல்கள் மற்றும் தடைகளை கண்டு தடம் மாறாமல். நல்ல கனி தரும் மரங்களாக வளர தேவையான அருளை பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 


2. வழிநடத்தும் வள்ளலே எம் இறைவா, எம் நாட்டு தலைவர்களை ஆசிர்வதிக்க வேண்டுகிறோம். தன்னலனில் அக்கறை கொள்ளாமல் பிறர் நலன் நாடவும், மக்களின் அன்றாட தேவையை உணர்ந்து, அவர்களை வழிநடத்த தேவையான ஞானத்தையும், முன்மதியையும் தர வேண்டி உம்மை மன்றாடுகிறோம்.


3. நல்ல ஆயனே இறைவா, இன்றைய உலகில் மக்கள் படும் துன்பங்களை உம் கருணை கண் கொண்டு பாரும். போர்களாலும், இயற்கை சீற்றத்தாலும் பாதிக்கப்பட்டு நிம்மதியற்று வாழும் மக்களுக்காக வேண்டுகிறோம். அன்பு, அமைதி, மன்னிப்பு மற்றும் விட்டுக்கொடுத்தல் போன்ற பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தி தங்களை பாதுகாத்து வாழ வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 


4. உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும் என்று மொழிந்த ஆண்டவரே. இத்திருப்பீடம் சூழ்ந்துள்ள அனைவரையும் உம் பாதம் அர்பணிக்கின்றோம். நாங்கள் அனைவரும் உம் ஆற்றலுள்ள இறைவார்த்தையை எங்கள் உள்ளத்தில் பதித்து, அதனை  எங்கள் அன்றாட வாழ்வில் பிறரோடு பகிர்ந்து வாழ் அரம்தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. குணமளிப்பவரே எம் இறைவா! தொடர் உடல் நல பின்னடைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருத்தந்தை அவர்களுக்காக மன்றாடுகின்றோம். கிறிஸ்துவை இவ்வுலகில் பிரதிபலித்து, மக்களின் திருந்தந்தையாக திகழ்ந்த எம்முடைய திருந்தந்தை விரைவில் குணமடைய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 


To Download PDF


No comments:

Post a Comment

தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25 திருப்பலி முன்னுரை தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்...