திருநீற்று புதன் 05-03-2025
திருப்பலி முன்னுரை
கிறிஸ்துவின் பாடுகளையும் அதனால் நாம் பெற்ற மீட்பையும் பற்றி சிந்திக்க இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆடம்பரமான பலிகளை நம்மிடமிருந்து எதிப்பார்ப்பதில்லை. மாறாக, நொறுங்கிய மற்றும் தாழ்ச்சிமிக்க உள்ளத்தையே எதிர்பார்க்கின்றார். அதன்படி, இறுமாப்புக் கொண்ட நம்முடைய உள்ளங்களை இறைவனின் கருணை கொண்டு கரைக்க இத்தவக்காலம் நமக்கு உதவுகின்றது. கிறிஸ்து நமக்காக அனுபவித்த பாடுகளை எண்ணி மனம் மாற்றத்தின் பாதையில் பயணிக்க தயராகும் நாளே இச்சாம்பல் புதனாகும். மண்ணிலிருந்து தோன்றிய நாம் மீண்டும் மண்ணுக்கே திரும்புவோம் என்ற உண்மையை நமக்கும் உணர்ந்தும் அடையாளமாக இன்றைய திருப்பலியில் நம் நேற்றியில் சாம்பலானது பூசப்படுகின்றது.
மோசே நாற்பது நாட்கள் நோன்பிருந்து பத்துகட்டகளையைப் பெற்றார். இஸ்ரேயல் மக்கள் நாற்பது ஆண்டுகளாக பாலைநிலத்தில் பயணம் செய்து கானான் நாட்டை அடைந்தார்கள். இறைமகன் இயேசு கிறிஸ்து நாற்பது நாட்களாக பாலைவனத்தில் தனித்திருந்து செபித்தார். இவர்களைப் போன்று நாமும் இத்தவக்காலத்தை இறைவனை அனுகிச் செல்வதற்கான காலமாக கடைபிடிப்போமெனில் இயேசு காட்டும் மீட்பின் பாதையை நமக்கானதாக மாற்ற முடியும்.
எனவே, எளிய உள்ளதவராய் உதட்டளவில் மட்டும் நோன்பிருந்து, இறைவேண்டல் புரியாமல் நம் உள்ளத்தளவில் நோன்பிருந்து இறைவேண்டல்களை மேற்கொள்வதற்கு தேவையான ஆற்றல்களை வேண்டி இம்மனமாற்றத்தின் பகிர்வில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம். உள்ளத்தை கிழித்து கொள்ளுங்கள் என்று இறைவாக்கினர் யோவேல் முன்னறிவிக்கிறார். மனமாற்றம் என்பது ஒருவர் தாம் செய்த தவறை உணர்ந்து, பாவத்திலிருந்தும் மற்றும் எல்லா வகையான தீமையிலிருந்தும் விலகி திரும்பி வருவதை குறிக்கும். கடவுள் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர் மற்றும் நீடிய பொறுமை உள்ளவர் என்பதை உணர்த்தும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
தவக்காலம் இதுவே தகுந்த காலம். இன்றே மீட்பின் நாள் என்று புனித பவுலடியார் இவ்விரண்டாம் வாசகத்தின்; வழியாக கடவுளோடு ஒப்புரவாக நமக்கு அழைப்புவிடுக்கிறார். அவரின் அழைப்பை ஏற்று கடவுளிடமிருந்து நாம் பெற்ற அருளை மீண்டும் புதுமிக்க வழிகாட்டும் இவ்வாசகத்திற்கு மனம் திறந்து செவிமடுப்போம்.
திருநீற்று பூசும் சடங்கு முன்னுரை
பழைய ஏற்பாட்டில்; கோணிiயை ஆடையாக அணிந்து சாம்பல் பூசி தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தும்படி இறைவாக்கினர்கள் மக்களை அழைத்தார்கள். அதேபோல் மனம் மாற்றத்தின் காலமாகிய தவக்காலத்தில் அடியெடுத்து வைப்பதன் அடையாளமாக இப்பொழுது, அருள்பணியாளர் நம்மை அனைவரையும் இச்சடங்கில் பங்கேற்க அழைப்பார். அதன் பின்னர் திருநீற்றின் மீது செபித்து அதை ஆசிர்வதித்து “மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்” என்ற சொல்லியபடி திருநீற்றை நம் நெற்றியில் பூசுவார். இறைமக்கள் அனைவரும் இச்சடங்கில் பக்தியுடனும் அமைதியுடனும் பங்கெடுக்கவும்.
மன்றாட்டுகள்
1. மனமாற்றத்தின் பாதையில் மக்களை வழிநடத்த திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! கிறிஸ்துவின் சீடர்களாகிய நாங்கள் அனைவரும், கிறிஸ்துவின் போதனைகளின் படி எங்கள் வாழ்வை நடத்தவும், கிறிஸ்துவின் பாடுகள் மூலம் நாங்கள் பெற்ற மீட்மை என்றென்றும் காத்துக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2. பாவிகனை மன்னிக்கும் எம் இறைவா! குற்றங்கள் புரிந்து, அதற்காக தண்டனை அனுபவிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் அனைவரும் தங்கள் தவறுகளுக்காக மனம் வருந்தி, தங்கள் வாழ்வை புதிய பாதையில் அமைத்துக் கொள்ள தேவையான அனைத்து வரங்களையும் பொழிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. அமைதியை ஏற்படுத்த வந்த எம் இறைவா! எங்கள் இல்லங்களில் அமைதி, ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல் போன்ற இறைப்பண்புகள் மேலோங்கிட வேண்டுமென்றும், மனமாற்றத்தின் காலமாகிய இத்தவக்காலத்தில் எங்கள் குடும்பங்களில் உள்ள உறவு பிணைப்புகள் வலுப்பெற தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. தங்கள் நாடுகளையும், வீடுகளையும் இழந்து அகதிகளாக வாழும் அனைத்தும் மக்களை நிறைவாக அசீர்வதிக்கும்படி மன்றாடுகின்றோம். கடுமையான மன மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் இவர்களை நாங்கள் அனைவரும் எங்களுடைய சகோதரர்களாக கருதி அவர்களுக்கு மதிப்பும் நல் வாழ்வும் அளிக்க தேவையான தாராள மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
5. மனமாற்றத்தின் காலமாகிய இத்தவக்காலத்தில் காலடி எடுத்து வைக்க இத்திருநீற்று புதன் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இறை வாரத்தை படித்து, தியானித்து அதன் படி வாழ்ந்து இத்தவகாலத்தை பயனுள்ளதாக மாற்ற தேவையான அருள் வரங்களை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment