இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Saturday, September 7, 2024

பொதுக்காலம் 23ம் ஞாயிறு 08 - 09 - 24

பொதுக்காலம் 23ம் ஞாயிறு 08 - 09 - 24



திருப்பலி முன்னுரை

இறைவனின் வார்த்தைகளை உள்வாங்க இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே ! இறைவனிடத்தில் நாம் காட்டும் அன்பிற்கு நமக்கு கைமாறு கிடைக்காமல் போகாது. இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட மக்களினமாகிய இஸ்ரேயல் மக்கள் கூட்டம் இறைவனுடைய எல்லையில்லா அன்பை ஒவ்வொரு நொடியும் பெற்று மகிழ்ந்தது. நம்முடைய மனதை தூய்மையாக்கும் பொழுது இஸ்ரேயல் மக்களைப் போல நாமும் இறைவனின் அளவற்ற அன்பை அடைய முடியும். பகட்டில்லாத, செருக்கற்ற எளிய உள்ளமே இறைவன் வாழ விரும்பும் தூய்மையான இல்லம். இந்த எளிய உள்ளங்களின் குரலுக்கு செவிசாய்த்து,  இயேசு கிறிஸ்து பலரின் நோய்களை குணப்படுத்தினார். இயேசு எப்பொழுதெல்லாம் பிறரின் பிணிகளை குணப்படுத்துகின்றாரோ? அப்பொழுதெல்லாம் அவர்களின் தூய உள்ளத்தில் இயேசுவே குடி கொள்கின்றார். நம் உள்ளத்தை தூய்மைபடுத்த இறைவனை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்கு அயத்தமாக நம்மைச் சுற்றியுள்ள அனைத்து சாரரையும் எவ்வித வேறுபடியின்றி சமமாக நடத்த வேண்டும். பொருள் இருப்பவரிடத்தில் அன்பு பாராட்டி, பொருள்ளற்றவரிடத்தில் வெறுப்பை கக்கும் உள்ளங்கள் இறைவன் வாழ்வதற்கு உகந்த இல்லம் அன்று. நாம் நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் எவ்வித பாகுபாடுமின்றி நடத்த, நமக்கு தேவையானது எளிய உள்ளமே. அப்படிபட்ட எளிய உள்ளங்களின் குரல்களுக்கு இறைவன் இசையாமல் போகமாட்டார். நம்முடைய உள்ளத்தை இறைவனுக்கு உகந்த இல்லமாக மாற்ற, பாரபட்சமற்ற இந்த சமதர்ம கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்குகொள்வோம்.


வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவனிடத்தில் நாம் நம்மை முழமையாக ஒப்படைக்கும் பொழுது, நமக்கு தேவையான அனைத்து நலன்களையும் இறைவன் நமக்கு அருள்வார். இறைவனில் உறுதிகொண்டு, இறைநம்பிக்கையில் திடமாய் இருப்பவர்கள் வாழ்வில் இறைவன் பல புதுமைகளை நிகழ்த்துவார் என்று இறைவாக்குரைக்கும் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளுக்கு இம்முதல் வாசகத்தில் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இறைவன் வாழும் ஆலயத்தில், இறைநம்பிக்;கையாளர்களே செல்வர்களே. ஒரு மனிதன் வைத்திருக்கும் பொருள் செல்வத்தினால், அவரின் இறையனுபவத்தை நாம் மதிப்பிடக் கூடாது. யாவரையும் சமமாக நடத்த வேண்டும். செருக்கற்ற எளிய உள்ளத்துடன் நாம் வாழ வேண்டும் என்ற திருத்தூதர் யாக்கோபின் வார்த்தைகளை தாங்கிய இவ்விரண்டாம் வாசகத்தை பக்தியுடன் கவனிப்போம்.

 

மன்றாட்டுகள்


1. எளிய உள்ளங்களின் குரலுக்கு செவிகொடுத்த எம் இறைவா! எளியவர்களை பேணுவதற்காக நீர் ஏற்படுத்திய திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரையும் நிறைவாக ஆசிர்வதியும், காயப்பட்ட எளிய உள்ளங்களை நீர் தேடி மீட்டார் உம் பதம் திருப்பினிர். நாங்களும் எளிய உள்ளத்தை பெற்று இறைவனால் மீட்கப்பட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. நலமளிப்பவரே எம் இறைவா! உடல் நோய்களையும், பல்வேறு உடல் குறைபாடுகளைக் கொண்டுள்ள அனைவருக்கும் நலமளித்து, அவர்களின் எளிய குரலுக்கு செவிசாய்த்து, அவர்களுக்கு குணமளிக்க வேண்டுமென்றும், அவர்கள் வாழ்வில் புதுமைகளை நிகழ்த்த வேண்மென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. எளியவர்களின் இன்னல் துடைத்த எம் இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் உள்ளத்தை தொட்டு ஆசிர்வதியும். பணம் படைத்தவர்களுக்கு மட்டும் சேவை புரியாமல், மக்களின் தேவையறிந்து அனைவருக்கும் சமமான சேவைபுரியும் நல்ல மனதை இவர்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. குறையுள்ள உள்ளங்களைக் குணப்படுத்தும் எம் இறைவா! செருக்கு, பாரபட்ச குணம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற சமுக நோய்களால் ஆட்டிப்படைக்கப்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும், இறைவனின் சாயல் என்பதை உணர்ந்து, அனைவரையும் சமமாக நடத்தம் நல்ல மனதை இவர்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

 

5. ஒற்றுமையை உருவாக்கும் எம் இறைவா! தாய் திருஅவையின் ஒரு பகுதியாகிய எங்கள் பங்கை உம் பாதம் ஒப்படைக்கின்றோம். எம் பங்கில் உள்ள அனைத்து குடும்பங்களையும் நிறைவாக ஆசிர்வதித்து, எங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதியும், ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


To download pdf





Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...