இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Saturday, September 14, 2024

பொதுக்காலம் 24ம் ஞாயிறு 15-09-2024

பொதுக்காலம் 24ம் ஞாயிறு 15-09-2024

பொதுக்காலம் 24ம் ஞாயிறு 15-09-2024

திருப்பலி முன்னுரை

இறைவனிடத்தில் கொண்ட நம்பிக்கையை செயல்களால் வெளிப்படுத்த இவ்விறைப்பிடம் சூழ்ந்துள்ள சகோதர சகோதரிகளே! இறைவனின் மீது எல்லையற்ற அன்பு கொண்ட இறைவாக்கினர்களும்இ இறைவனின் அடியார்களும் தங்கள் செயல்களின் மூலம் தங்களுடைய நம்பிக்கையை வெளிப்படுத்தினர். சொல் வடிவத்தில் வெறும் வார்த்தைகளாக இருக்கும் தங்களின் நம்பிக்கைகளுக்கு செயல் வடிவில் உயிர் அளிக்கின்றனர். இறை திருவுளத்தை தங்கள் வாழ்வின் பாதையாக கொண்டு அதில் பயணிக்கின்றனர். இறைவன் அனைவரிடத்திலும் அன்பாய் இருக்கிறார் என்று போதிப்பதை விடஇ இறைவன் இப்படித்தான் அன்பாய் இருப்பார் என்று நம்முடைய செயல்கள் மூலம் நாம் இறைவனின் பண்பை வெளிப்படுத்த வேண்டும். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் இறைவன் நேசிக்கின்றார் என்ற இறைச் செய்தியை நாம் நம்முடைய வார்த்தைகளால் எடுத்துரைக்காமல் நம்முடைய செயல்களால் எடுத்துரைக்க வேண்டும். நம்முடைய இறை விசுவாசத்தை நம்முடைய செயல்களால் நிறைவேற்றுவதே இறைத் திருவுளம். இறைமகன் இயேசு கிறிஸ்துஇ இம்மண்ணுலகில் மனிதராய் பிறந்து அத்தனை இன்னல்களுக்கும் உள்ளாகி தன்னுடைய உன்னத செயல்களின் பலனாக நம்மை பாவத்திலிருந்து மீட்டார். விண்ணகத்திலிருந்து மண்ணகம் இறங்கி வந்த மீட்பரைப் போல நாம் நம்முடைய விசுவாசத்திற்கு செயல் வடிவம் கொடுக்கவும்இ நம்முடைய அன்பை வெறும் வார்த்தைகளால் அல்லாமல்இ செயல்களால் வெளிப்படுத்த தேவையான இறை வரங்களை வேண்டி முழு ஈடுபாட்டுடன் பலியில் இணைவோம்.

வாசகம் முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கை எடுத்துரைத்த இறைவாக்கியர் எசயாவிற்கு இஸ்ரவேல் மக்கள் மத்தியில் எண்ணற்ற எதிர்ப்புகள் இருந்தாலும்இ இறைவன் மீது கொண்ட பற்றின் காரணமாக தொடர்ந்து இறைவாக்குறைக்கும் பணியை ஆற்றினார். தம்முடைய விசுவாசத்தை எவ்வித தயக்கமும் இன்றி இறை பணி ஆற்றுவதற்கான உறுதியை எடுக்கும் வார்த்தைகள் தாங்கிய இம் முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை

நம்முடைய விசுவாசமும் வாழ்வும் ஒரே பாதையில் பயணிக்க வேண்டும். நம்மிடத்தில் நம்பிக்கை உண்டேனில் அது நம் செயல்கள் மூலம் வெளிப்பட வேண்டும். நாம் நம் சகோதர சகோதரிகளிடத்தில் நட்புறவு பேண வேண்டும் என்ற செய்திகளை தாங்கி வரும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.


மன்றாட்டுகள்

  1.    விசுவாசத்தை மண்ணில் விதைக்க நீர் உண்டாக்கிய திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும், தாங்கள் பெற்ற விசுவாசத்தின் பலனை தங்கள் செயல்களால் வெளிப்படுத்தி, இறை மக்களின் உள்ளத்தை இறைவன் வாழும் இல்லங்களாக மாற்றும் வரம் தர வேண்டுமென்று இறைவா உன் மன்றாடுகின்றோம்.

     

    2.   எதிர்ப்புகள் மத்தியிலும் இறை திருவுளம் நிறைவேற்றிய இறைவா|. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பொருட்படுத்தாமல் நேர்மையாக உழைக்கும் அனைவரும், தங்களுடைய பணியை தொடர்ந்து நேர்மையுடன் ஆற்ற தேவையான மன வலிமையை தந்தருள் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

     

    3.   சிலுவை மூலம் பாவத்தை வென்ற எம் இறைவா! கடுமையான சூழலில் நடுவிலும் உம்முடைய சிலுவையின் மகிமையை எடுத்துரைக்கும் அனைத்து இறை நம்பிக்கையாளர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். தன்னார்வ மனம் கொண்ட இளைஞர், இளம் பெண்கள் அனைவரும் ஆன்மீகத்தில் மென்மேலும் வளர தேவையான இறைஞானத்தை தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

     

    4. சொல்லுக்கு செயல் வடிவம் அளிக்கும் அற்றலை எங்கள் அனைவருக்கும் தந்தருளும். பிறரிடத்தில் நாங்கள் கொண்டுள்ள அன்பை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்தாமல் அன்பு நேச செயல்களால் வெளிப்படுத்தி, அன்பால் எம் சமுகத்தை கட்டி எழுப்ப வேண்டிய அணைத்து வரங்களை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

     

    5.   இறை திருவுளத்தை நிறைவேற்றுவதையே உணவாகக் கொண்ட எம் இறைவா! திருமுழுக்கினால் இறைவனின் அழைப்பு பெற்ற அனைவரும் இறைவனின் திருவுளத்தை அறிந்து, இறைவன் நமக்கென அளித்துள்ள பணியை சிறந்த முறையில் ஆற்றிட தேவையான மனதிடத்தை தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...