இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Thursday, October 10, 2024

பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு - 13-10-2024

 பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு - 13-10-2024

பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு - 13-10-2024

திருப்பலி முன்னுரை

    இறைவன் அளிக்கும் ஞானத்தை இன் முகத்துடன் பெற்றுச் செல்ல இவ்விறைப்பிடம் சூழ்ந்துள்ள சகோதர சகோதரிகளே! பொதுக்காலத்தின் 28-ஆம் ஞாயிறு வழிபாட்டு கொண்டாட்டத்தின் வாசகங்கள் அனைத்தும், நிலையான செல்வமாகிய, இறைவன் அளிக்கும் ஞானத்தை பற்றிக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கின்றது.  இறைவன் ஒருவரே நிறைவுள்ளவர் என்பதே அந்த ஞானம். மனிதர்களாகிய நாம், மண்ணக பார்வையில் செல்வர்களாக இருந்தால், விண்ணகத்தை நமதாக்க முடியாது. ஏனெனில், செல்வம் இருக்கும் இடத்தில் செருக்கும் இருக்கும், செருக்கு மிகுந்த உள்ளத்தில் இறைவன் வாழ்வதில்லை. தாழ்ச்சியான, எளிமையான, ஏழைகளின் உள்ளத்தில்தான் இறைவன் வாழ்கின்றார்.  அப்படி கடினப்பட்ட உள்ளத்தை கரைப்பதற்காக இறைவன் அளித்த அமுத வழி தான் இறைவா வார்த்தையின் படி வாழ்வது. கடவுளுடைய உயிருள்ள வார்த்தையை உள்வாங்கி, தியானித்து, அதை நம் வாழ்வாக்கும் பொழுது, செருக்கு மிகுந்த நம் உள்ளம் இறைவன் வாழக்கூடிய சிறந்த இல்லமாக மாறும். மண்ணக மாந்தர்களை மகிழ்விக்க நாம் செல்வங்களை சேர்த்தால், விண்ணகம் சென்றடைய முடியாது, விண்ணகவேந்தரான இறைவனின் வார்த்தையின் படி வாழும் பொழுது இறை ஞானம் பெற்று விண்ணகத்தை நமதாக்கிக் கொள்வோம். எனவே, நாம் விண்ணகத்தில் குடிகொள்ளவும், இறைவன் நம் அகத்தில் குடிகொள்ளவும் நம்மை தயார் செய்யும் இந்த உன்னத கொண்டாட்டத்தின் பக்தியுடன் பங்கெடுப்போம்.


வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

    பொன்னை விடவும், போர் கருவிகளை விடவும் ஒரு நாட்டை ஆள்வதற்கு தேவையானது ஞாணமே என்பதை உணர்ந்த அரசர் சாலமோன், இறைவனிடத்தில் ஞானத்தின் பெருமையை எடுத்துச் சொல்லி அதை மன்றாடிக் கேட்கும் வார்த்தைகளை தாங்கிய இம்முதல் வாசகத்திற்கு  கவனமுடன் சொல்லிக்கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

    தொடக்கத்தில் வாக்காக இருந்த கடவுள், மனிதராய் தோன்றி இறை மக்களிடத்தில் இறைவாக்கு உரைத்தார். இறைவன் தன்னுடைய படைப்புகளின் மூலமும் இறைவார்த்தைகளின் மூலமும் தன்னை வெளிப்படுத்துகின்றார். இறைவன் அருளிய அந்த வார்த்தைகளின் ஆழத்தையும், அதன் மேன்மையையும் எடுத்துக் கூறும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு செவி கொடுப்போம்.


மன்றாட்டுகள்

1.   ஏழைகளைத் தேடிச் சென்ற எம் இறைவா! விளிம்பு நிலை மக்களை தேடிச் சென்று தேற்றும் உன் திரு அவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இயலாதவர்களுக்கு இவர்கள் செய்யும் உதவியை மன்மேலும் சிறப்பாக ஆற்றிட தேவையான உதவிகளை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2.   தாழ்ச்சியின் உருவே எம் இறைவா! தேவையற்ற ஆடம்பர நிகழ்வுகளிலும், மக்களுக்கு உபயோகமற்ற திட்டங்களிலும் எம் நாட்டுத் தலைவர்கள் பணத்தை வீணடிக்காமல், தொலைநோக்குடைய நல்ல திட்டங்களை தீட்டி, மக்களின் வாழ்வை உயரச் செய்ய தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3.   நொருங்கிய உள்ளத்தை பலியாக கேட்ட எம் இறைவா! பேராசை, தீச்செயல், வஞ்சகம், பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு போன்ற உள்ள அழக்குகளை அகற்றி, எங்கள் இல்லங்களை நாங்கள் அலங்கரிப்பது போல, எங்கள் உள்ளங்களையும் அலங்கரிக்கும் வரம் வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்.

4.   இன்னலிலும் இறைவாக்குரைத்த எம் இறைவா! வேத போதக நாடுகளில் எத்தனையோ இன்னல்களுக்கு நடுவில் உம் இறை வார்த்தையை எடுத்துரைக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுடைய இன்னல்களை நீர்தாமே துடைத்து தருள வேண்டுமென்று, அவர்கள் செய்யும் பணியில் அவர்கள் நிறைவு காண வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5.   வார்த்தைக்கு வாழ்வளிக்கும் எம் இறைவா! இறைஞானம் பெற இறைப்பிடம் சூழ்ந்துள்ள நாங்கள் அனைவரும், பிறரன்பு பகிர்வில் வெறும் சொல் வீரர்களாய் மட்டும் இல்லாமல், செயல் வீரர்களாய் இருந்து, பிறரன்பு பணியில் ஈடுபட்டு இறைஞானத்தை எமதாக்கும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...