பொதுக்காலம் 2 – ஆம் ஞாயிறு 19-01–2025
திருப்பலி முன்னுரை
கிறிஸ்துவின் அன்பையும், அரவணைப்பையும் அனுபவிக்க இவ்விறைப் பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! அனைத்தையும் படைத்த நம்முடைய இறைவன், நாம் கேட்பதற்கு முன்பே, நம்முடைய தேவைகளை அறிந்து வைத்திருக்கின்றார். நம் தேவைகளை அறிந்து தகுந்த நேரத்தில் அவற்றை நமக்கு தருகின்றார். ஏனெனில், இறைவனின் பிள்ளைகளாகிய நமக்கு, என்ன தேவையென்று நம் தந்தைக்கு மட்டுமே தெரியும். இறைவன் இவ்வுலகைப் படைத்து, அதன் மீது ஆளுகை புரியும்படி மனிதனுக்கு கொடுத்தார். பாவத்தில் வீழ்ந்த மனித குலத்தை மீட்க எண்ணற்ற இறைவாக்கினர்களை அனுப்பினார். இறுதியாக, தன்னுடைய அன்பின் மிகுதியால் தன்னுடைய ஒரே மகனை இவ்வுலகின் பாவம் போக்கும் செம்மறியாக அளித்தார். நம் பாவம் போக்குவதற்காக இவ்வுலகிற்கு மனிதனாக வந்த இறைமகன் நமக்கு தாயும், தந்தையுமாக இருந்து மாற்றம் தரும் பல புதுமைகளை நிகழ்த்தி தம் அன்பையும், ஆசிரையும் நமக்கு வெளிபடுத்துகின்றார். நன்மைகளை வாரி வழங்கும் இறைவனிடம் நம் தேவைகளை எடுத்துரைத்து, தந்தையிடமிருந்து எதிர்நோக்கு கொண்ட பிள்ளைகாய் இந்த அருளடையாள கொண்டாடத்தின் ஆர்வமுடன் பங்கெடுப்போம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை
போர்களாலும், தொடர் பஞ்சத்தாலும் வாட்டமுற்ற மக்களை இறைவன் தாமே தம்முடைய இறைவாக்கினர்கள் வழியாக ஒன்றிணைத்து புதுவாழ்வளிக்கின்றார். இறைவனால் நாம் கைவிப்பட்டோம் என்று கவலையில் கறைந்த மக்களை தன் அமுத மொழியால் இறைவன் தேற்றுகின்றார். கவலையில் இருப்போரை தேற்றுவதற்காய் அமைக்கப்பட்ட இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
திருமுழுக்கு பெற்ற அனைவருக்கும் தன்னுடைய பணியை ஆற்றுவதற்கான அழைப்பையும், திறனையும் இறைவன் அளித்துள்ளார். பணிகளின் பண்புகள் வெவ்வேறு விதமானவையாக இருந்தாலும், நாம் அனைவரும் வாழ்வளிக்கும் ஒரே இறைக்காக பணிபுரிகின்றோம் என்ற உண்மையை விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம்.
மன்றாட்டுகள்
1) அன்பை அடித்தளமாகக் கொண்டு திருஅவையை கட்டி எழுப்பிய எம் அன்பு இறைவா! திரு அவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் இறையன்பையும், பிறர அன்பையும் எவ்வித குறையும் இன்றி கடைபிடிக்க தேவையான அருள் வரங்களை எங்களுக்கு தந்தருள் வேண்டுமென்று உண்மை மன்றாடுகின்றோம்.
2) உலகுக்கு உரு கொடுத்த எம் இறைவா! இவ்வுலகில் மக்களை வழிநடத்தும் அனைத்து தலைவர்களையும் நிறைவாக ஆசீர்வதியும் . இவர்கள் அனைவரும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து, மக்கள் மீது உன் அன்பு கொண்டு, அவர்களை அன்பின் பாதையில் நடத்திட வேண்டிய வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3) ஆதரவற்றோருக்கு ஆதரவே எம் இறைவா! முழுமையான அன்பும், முறையான கவனிப்பும் இன்றி தவிக்கும் அனைத்து முதியோர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுக்கு தேவையான அன்பையும் அரவணைப்பையும் தரவேண்டிய பொறுப்புணர்வை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.
4) திருக்குடும்பத்தின் சுடரொளியை எம் இறைவா! எங்கள் இல்லங்களில் அன்பு செய்தல், விட்டுக்கொடுத்தல் கீழ்ப்படிதல் போன்ற திருக்குடும்பத்தின் படிப்பினைகளை பின்பற்றவும், அதன் மூலம் எங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அமைதி நிலவவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
5) அழியும் செல்வமான இம்மன்னக செல்வத்தின் மீது நாட்டம் கொள்ளாமல், நிலையான செல்வமாகிய விண்ணகச் செல்வத்தை உடைமையாக்கி கொள்வதற்கான வழி ஆகிய அன்பை நாங்கள் இறுகி பற்றி கொள்ளவும். பிறர அன்பு பணிகளில் அதிகமாக ஈடுபடவும் வேண்டிய தாராள மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
.jpeg)