பொதுக்காலம் நான்காம் ஞாயிறு
✦ திருப்பலி முன்னுரை
இறையாசிர் பெற இவ்விறைப் பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! நம்முடைய வலிமையிலும், வலிகளிலிலும்; கிறிஸ்துவின் வல்லமை முழமையாக வெளிப்படுகின்றது. அனைத்து விதமான வரங்களையும் இறைவன் நமக்களித்து, நிலையான பேரின்பத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றார். இருப்பினும், நாம் நம்முடைய மனித பலவீனங்களால்; அப்பாதையிலிருந்து தவறும் பொழுது, காணாமல் போன ஆடுகளை ஆயன் தேடி மீட்பது போல கிறிஸ்து நம்மை மீட்க, நம்மை நோக்கி வருகின்றார். அப்படி நம் மீட்புக்காக நம்மை அணுகிவரும் இறைவனை எளிமையின் இதயம் கொண்டவராக, ஏழ்ழையின் உள்ளம் கொண்டவராக மனமுவந்து ஏற்க வேண்டும்.
ஏனெனில், இவ்வுலகு எவ்வற்றையெல்லாம் வெறுமையெனக் கருதி விலக்குகினறதோ? அவற்றையெல்லாம் இறைவன் தன் அன்பால் அரவணைத்து தன் பதம் ஈர்த்துக்கொள்கின்றார். எனவே, நாம் இவ்வுலகத்தால் நம்முடைய நற்செயல்களின் பொருட்டும், ஏழ்மையின்; பொருட்டும் வெறுக்கப்பட்டாலும் இறைவனின் அசீரும், துணையும் நமக்கு என்றுமிருக்கும் என்ற நம்பிக்கையுடன் இறைவனின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.
மேலும், சாதி, பணம், இனம் மற்றும் பதவி போன்ற இவ்வுலக அளவுகோல்களை தகர் தெறிந்துவிட்டு, எளிமை, ஏழ்மை மற்றும் அன்பு என்ற விண்ணக திறவுகோல்களின் துணையுடன் இறைவனின் நிழலில் என்றும் இருப்போம் என்ற நம்பிக்கையுடன் எளியவர்களின் இவ்விறைக் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
✦ வாசக முன்னுரைகள்
வாழ்வில் எத்தனை இன்னல்களை சந்தித்தாலும், இறைவனின் மீது நம்பிக்கை இழக்காமல், இறைவனின் வார்த்தையின் படி நடப்பவர்களே உண்மையான விசுவாசிகளாவர். பல்வேறு இன்னல்களை சந்தித்த இஸ்ரேயல் மக்களினம், பலமுறை இறைவன் மறுதலித்து, இறைவனின் பாதையிலிருந்து விலகிச் சென்றது. இந்த இஸ்ரேயல் மக்களைப் போல் அல்லாமல், எளியவரின் உள்ளத்துடன், நேர்மையுடன் வாழ அழைக்கும் இறைவாக்கினர் செப்பனியாவின் வார்த்தைகளுக்கு செவிகொடுப்போம்.
இவ்வுலகின் அளவுகோலும், இறைவனும் அளவுகோலும் முற்றிலும் மாறுபட்டவை. இறைவனின் படைப்பில் தங்களுடைய இயலாமையை ஓப்புக்கொள்பவர்கள் இறைவனின் துணை வேண்டி அதை தங்களுடையதாக்கிக் கொள்கின்றனர். ஞானம், அறிவு மற்றும் வலிமை என அனைத்தையும் அடைந்ததாக கருதுபவர்கள் இறைவனை புறக்கணிப்பதால், வீழ்ச்சி அடைகின்றனர். எனவே, எளிமையின் உள்ளதவராக இவைனில் பெருமை பாரட்ட அழைப்புவிடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
✦ மன்றாட்டுகள்
- நிலைவாழ்வை எமக்களிக்க வந்த எம் அன்பு இறைவா! விண்ணகத்தை நாங்கள் உடைமையாக்கி கொள்ள நீர் கற்ப்பித்த வழிகளை அன்றாடும் கடைப்பிடிக்கும் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். இயேசு கற்றுத் தந்த வாழ்வின் படிப்பினைகளை நாங்கள் அனைவரும் சரியாக பின்பற்றிட தேவையான இறை ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- உண்மைக்கு உயிர் கொடுக்கும் எம் இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்களும், ஆட்சியாளர்களும் தங்களின் அதிகாரத்தையும், அரசின் செல்வங்களை தங்களுடைய சுய இலாபத்திற்காக பயன்படுத்தாமல், மக்களுக்கு பயன்படும் நல்ல திட்டங்களில் செலவழித்திட வேண்டிய நேர்மையான உள்ளத்ததை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- படைப்புகளை ஆளுகை புரியும் எம் இறைவா! உலக வெப்பமயமாதல் மற்றும் கடல் நீர்மட்டத்தின் அளவு அதிகரித்தல் என்ற இருபெரும் பேராபத்தை நோக்கி பயணிக்கும் இவ்வுலகின் இயற்கைச் சூழலைப் பாதுகாத்திட வேண்டுமென்று மன்றாடுகின்றோம். இயற்கையை காப்பதற்கு போதுமான விழிப்புணர்வை தந்து, இயற்கையைக் காப்பாற்றி எங்கள் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்வதற்கான தெளிவை எங்களுக்கு அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- அமைதியை அகிலத்திற்கு அளித்த எம் இறைவா! கடும் போராட்டத்தாலும், வன்முறையாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காக மன்றாடுகின்றோம். போரட்டங்களில் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு நீரே ஆறுதலாக இருந்து, அவர்களின் நாட்டிலும், வீட்டிலும் அமைதியை மலரச் செய்ய வேண்டுமென்றும், போரில் ஈடுபடும் தலைவர்களின் மனதில் அமைதியை விதைத்திட வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.
- எங்கள் தேவைகளை நன்கறிந்த எம் இறைவா! இந்த திருவழிப்பாட்டில் பங்கு கொள்ளும் அனைவரின் தேவைகளையும் கண்ணோக்கி, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்தருள வேண்டுமென்று மன்றாடுகின்றோம். மேலும் விண்ணக உணவாகிய உம்மை நாங்கள் இறுகப்பற்றிக் கொண்டு , எளியவராக, நேர்மையுடன் தொடர்ந்து வாழ தேவையான வரங்களை தந்தருள உம்மை மன்றாடுகின்றோம்.
Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Ordinary 4th Week | Iraivelicham Mass Introduction

