இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Thursday, October 23, 2025

பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு  

26-10-2025
பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு   26-10-2025

To Receive PDF format follow the Page.
If you any special day Introduction, write it in comment.
Tamil Sunday Mass Introduction


திருப்பலி முன்னுரை

இறைவனை  தாழ் பணிந்து, இறை ஆசீரை பெற்றிட இவ்வீறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! இந்நாளில், நாம் பொதுக்காலத்தின் 30-ஆம் ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள் அனைத்தும் நம்மை தாழ்ச்சியோடு வாழ அழைக்கின்றன. உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார், தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார் என்ற மரியாவினுடைய வார்த்தைகளை நம் உள்ளத்தில் இருத்தி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். எளியவர்களிடத்தில் இறைவன் கனிவுள்ளவராய் இருக்கின்றார். ஏனெனில், நாம் செருக்கடையாமல் இறைவனிடம் மன்றாடும் பொழுது, இறைவன் நம்முடைய வேண்டுதல்களுக்கு செவிசாய்கின்றார். நாம் செருக்கடையும் பொழுது நம் உள்ளத்தின் மையத்தில் இறைவன் வசிப்பதில்லை;. நாமே, அதில் வசிக்கின்றோம். மாறாக, நாம் தாழ்ச்சியுடன் மன்றாடும் பொழுது நம் உள்ளத்தில் இறைவன் மையமாகின்றார். 

இறைவனை தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்ட திருத்தூதர்களும், புனிதர்களும் உள்ளத்தளவில் செருக்கடையாமல், இறைவனை மையமாக வைத்து வாழ்ந்தனர். இறைவனிடத்தில் மன்றாடினர். அதன்,  விளைவாக இறைவன் அருளிய அளப்பெரிய ஆசீர்வாதங்களை பெற்றனர். அவ்வாசிர்வாதத்தை நாமும் பெற்றிட தாழ்ச்சியுடன், இறைவனின் துணையை வேண்டி,  இந்தப்பணிவின் பெருமகிழ்வில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் இரக்கமும் நிதியும் உள்ளவர் என்பதை சிராக்கின் நூலில் இருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் நமக்கு உணர்த்துகின்றது. இறைவன் என்றும் ஒறுதலைப் பட்சமாக செயல்படுவதில்லை. ஏழை, எளியவர்களின் குரலுக்கு என்றும் செவிசாய்க்கின்றார். எனவே, நாமும் எளிமையும், தாழ்ச்சியும் நிறைந்த மனதை பெறுவதற்காக இம்முதல் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இறைவனுக்காக வாழ்ந்து, இறைப்பணி ஆற்றுவதைக் காட்டிலும் இவ்வுலகத்தில் நிறைவானது எதுவும் இல்லை. கிறிஸ்துவின் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புனித பவுல் இறைவன் தமக்களித்த பணியை ஆற்றி நிறைவுடன் திமோத்தேயுக்கு எழுதிய வார்த்தைகள் இன்று நமக்கு இரண்டாம் வாசகத்தில் கொடுக்கப்ட்டுள்ளன. திருமுழுக்கின் மூலம் கிறிஸ்துவ வாழ்வில் பங்கெடுக்க அழைக்கப்பட்ட நாம், புனித பவுலின் பகிர்விற்கு கவனமுடன் செவிகொடுப்போம். 

மன்றாட்டுகள்

  1. அன்பின் அடையாளமாக திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! திருஅவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும், இறைவழிபாட்டு சடங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், அன்பு செய்யுங்கள், தாழ்ச்சி கொள்ளுங்கள் என்று இறைப் படிப்பினைகளில் நாட்டம் செலுத்தி, ஆன்மீக வாழ்விலும், சமுக வாழ்விலும் மேம்படையத் தேவையான அனைத்து அருள் வரங்களையும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 
  2. இளைஞர்களின் வழிகாட்டியே எம் இறைவா! எம் நாட்டின் எதிர்காலமாக திகழும் இளைஞர்களும், இளம் பெண்களும் படிப்பிலும், தன்னம்பிக்கையிலும் சிறந்து விளங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். எம் நாட்டின் இளைஞர்கள் திரைப்பட மற்றும் விளையாட்ட பிரபலங்களின் நலனை அக்கறைக் கொள்ளாமல், தங்களுடைய வாழ்விலும், குடும்ப நலனிலும் அக்கறைக் கொள்வதற்கு தேவையான ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. இறைமக்கள் சமுகத்தின் நாயகரே எம் இறைவா! இத்திருப்பலியில் பங்கேற்று இறைவனின் ஆசிரைப் பெற்றிட இங்கு கூடியுள்ள அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இறைவன் அருளும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தை பெற்று, இறைவனுக்;கு ஏற்புடைய மக்களாக மாற வேண்டிய அனைத்து வரங்களையும் தந்தருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
  4. வளங்களை வாரி வழங்கும் எம் இறைவா! வறுமையினாலும், கடும் போரினாலும் பாதிக்கப்பட்ட அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். ஏழ்மையில் வாழும் இவர்களின் குரலுக்கு செவி சாய்த்திடும் ஆவர்களுடைய வேண்டுதல்களுக்கு செவிசாய்த்து, அவர்களின் துயர் நீங்கிட தேவையான அனைத்து வரங்களையும் அவர்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.



No comments:

Post a Comment

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...