இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Friday, December 12, 2025

Advent 3rd Sunday Mass Introduction 2025

திருவருகைக்கால மூன்றாம் ஞாயிறு
                             14-12-2025 ------Follow-->>> 



திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவில் இணைய இவ்விறைப் பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறாகிய இன்று மகிழ்ச்சி என்னும் இறை வரத்தை மையமாக வைத்து நம்முடைய இத்திருவழிபாட்டை முன்னெடுக்க அழைக்கப்படுகின்றோம். கிறிஸ்து ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் நோயளிகளுக்கும் மகிழ்ச்சி அளிக்க நம்மிடையே மனிதராக பிறந்தார். எனவே, கிறிஸ்து அளிக்கும் மகிழ்வு என்பது பணம், பதவி மற்றும் செல்வம் போன்ற உலக இன்பங்களைச் சார்ந்ததல்ல.

பிறர் அன்பில் திளைத்து, விண்ணகத்தின் மக்களாக மகிழ்வுடன் வாழும் மானுடத்தை கட்டியெழுப்புவதே கிறிஸ்துவின் நோக்கமாகும். மனமாற்றத்திற்கு அழைக்கும் இத்திருவருகைக் காலத்தில் நம் மண்ணக செல்வத்தை பெருக்கும் வெற்று செயல்களில் ஈடுபடாமல், ஏழைகளுக்கு உணவளித்தல், நோயளிகளைச் சந்தித்தல், நம்மை வெறுப்போரை அன்பு செய்தல் போன்ற அன்பின் செயல்களைச் செய்து, கிறிஸ்து பிறப்பின் மகிழ்வை பிறருடன் பகிர்ந்து கொள்வோம். இவ்வுலகில் வாழும் ஒவ்வொரும் பிறக்கவிருக்கும் இயேசுவை தங்களுடைய உள்ளத்தில் வரவேற்க தயாராகுவோம். ஏனெனில், மகிழ்ச்சியற்ற உள்ளம் இறைவன் வாழ்வதற்கு உகந்தல்ல. 

எனவே, பகிர்தலின் மூலம் நம் உள்ளத்தை மகிழ்வின் இல்லாமாக மாற்றிட, கிறிஸ்து பிறப்பிற்கு நம்மைத் தாயர் செய்யும் இத்தாயாரிப்பின் கொண்டாடத்தில் மகிழ்வுடன் பங்கெடுப்போம். நம்மால் முடிந்த பொருளுதவிகளையும், செப உதவிகளையும் பிறருக்கு செய்து இறைவனை மகிழ்வுடன் நம் உள்ளத்தில் வரவேற்போம்.

கிறிஸ்துமஸ் ரீத் முன்னுரை - மகிழ்ச்சி 

மகிழ்ச்சி என்பது பகிர்த்தலில் இருந்து பிறக்கின்றது. கிறிஸ்து இவ்வுலகம் மகிழ தம்மையே நமக்காக பகிர்ந்தார். கிறிஸ்துவின் சீடர்களாகிய நாமும் பகிர்தலின் மூலம் பிறரன்பு சமூகத்தை கட்டியெழுப்ப அழைக்கப்படுகின்றோம். எனவே, நம்மிடம் உள்ளவற்றை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன்பின், நம்மையே இறைவனிடத்தில் முழுமையாக கையளிக்க வேண்டும். அவ்வாறு, நாம் பகிர்வின் படிநிலைகளை நிறைவு செய்யும் பொழுது மகிழ்வின் முதுநிலையை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் இம்மூன்றாம் திரியை ஏற்றி பகிர்வின் சமூகத்தை கட்டியெழுப்ப உறுதி ஏற்போம். 

வாசக முன்னுரைகள் 

முதல் வாசக முன்னுரை (எசாயா 35: 1-6அ,10)

பல ஆண்டுகள் அடிமைகளாக இருந்து, விடுதலைப் பெற்று நாடும் திரும்பும் இஸ்ரேயல் மக்களின் உள்ளங்களைத் தேற்றுவதற்காக எசாயா இறைவாக்கினர் இறைவாக்குறைக்கின்றார். அவருடைய வார்த்தைகள் கிறிஸ்துவின் பிறப்பை எதிர்நோக்கும் நமக்கு இன்று தரப்பட்டுள்ளது. இஸ்ரேயல் மக்களைப் போல பாவத்தின் பிடியிலிருந்து விடுபட போராடும் நம்முடைய பாவங்களை போக்க வரும் மீட்பரை எதிர்பர்த்து இம்முதல் வாசகத்திற்கு செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (யாக்கோபு 5: 7-10)

 கிறிஸ்துவின் கட்டளைகளை கடைபிடித்து, நற்செய்தியை தங்களுடைய செயல்களால் எடுத்துரைக்கும் அனைவரும் கிறிஸ்துவின் வருகைக்காக பொறுமையுடன் காத்திருப்போம். பொறுமை இழந்து நம்முடைய உள்ளத்தை கேடான செயல்களின் மீது நாட்டம் கொள்ளாதவாறு காத்தருளுவோம் என்ற செய்திகளைக் கூறி, உள்ளத்தில் உறுதியுடன் இறைவனின் வரவை எதிர்பார்த்து நம்பிக்கையில் நிலைத்திருக்க மகிழ்வுடன் அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகெடுப்போம். 

மன்றாட்டுகள்

1. நிலையான மகிழ்வை இவ்வுலகிற்கு அளிக்க திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! உம் திருஅவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நற்செய்தியை பரப்பவும், அன்பும் அமைதியும் நிறைந்த நிறை வாழ்வை மேற்கொள்ளவும், எங்களுக்கு உம் அருளை பொழிந்து கிறிஸ்துவில் ஒருமைப்பாட்டுடன் வாழ வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. நீதியுடன் உலகை ஆளும் எம் இறைவா! உலகத் தலைவர்கள் அனைவரும் நீதியுடன் மக்களின் நன்மைக்காக செயல்பட, அவர்களுக்கு போதிய ஞானத்தையும் ஆற்றலையும்  அளித்தருளும். தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்களை முன் வைத்து மக்களை ஆட்சி செய்யாமல், பிறரின் மகிழ்ச்சிக்காக உழைக்க அவர்களுக்கு தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. மகிழ்வை அளிக்கவல்ல எம் இறைவா! கிறிஸ்துவைப் போல, எங்களுடைய வாழ்வை பிறருக்காக அளிக்கும் எளிய மனதை எங்களுக்கு தந்தருளும். மேலும், செப உதவியும் பொருளுதவியும் தேவைப்படும் எளிய உள்ளங்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய தேவையான அருள் வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. மகிழ்வின் மகிமையை உணர்த்த குடும்பங்களை கட்டியெழுப்பும் எம் இறைவா! எம் பங்கில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியையும்; அமைதியையும் அளித்து, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அன்பும் பரிவும் கொண்டு வாழவும், தங்கள் உறவுகளில் ஒருமைப்பாட்டுடன் இருக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.





1 comment:

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...