🌟 பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு 🌟
18- 01- 2026
✦ திருப்பலி முன்னுரை
திருமுழுக்கினால் கிறிஸ்துவோடு பிணைக்கப்பட்டு கிறிஸ்துவின் சகோதர, சகோதரிகளாக இத்திருக்கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் அன்பு உள்ளங்களே! இன்று நம்முடைய தாயாம் திருஅவை பொதுக்காலத்தின் 2-ஆம் ஞாயிறை சிறப்புடன் கொண்டாட நமக்கு அழைப்புவிடுக்கின்றது. இன்றைய திருவழிபாட்டு வாசங்கள் அனைத்தும் கிறிஸ்து திருமுழக்கின் வழியாக பெற்ற இறையாசிரைப் பற்றி எடுத்துக்கூறி, கிறிஸ்துவில் பற்றுகொண்ட நம்பிக்கையாளர்களாக நம்மை வாழ அழைக்கின்றது.
கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற பொழுது தூய ஆவியானவர் புறாவின் வடிவில் கிறிஸ்துவின் மீது இறங்கி, கிறிஸ்து மேற்கொள்ளவிருந்த இறையரசின் பணிகளுக்கு பலமளித்து, அலகையின் சோதனைகளை வெற்றி கொள்ள திடமளித்தார். கிறிஸ்துவின் சீடர்களாக திருமுழுக்கினால் புதுபிறப்பினை பெற்ற நாமும் கிறிஸ்துவை போல தூய ஆவியாரின் துணைகொண்டு வாழ்வதன் வழியாக கிறிஸ்து அளிக்கும் மீட்பை நமதாக்கி கொள்ள முடியும். அந்த மீட்பின் வழியாகவே, இறைவனின் அன்பில் என்றும் நிலைத்து நிற்கும் இறைப்பிள்ளைகளாவும், கிறிஸ்துவின் சகோதர, சகோதரிகளே வாழ நம்மையே நாம் தகுதிப்படுத்திக் கொள்ள முடியும். எனவே, இறைவனின் பெருமகிழ்வில் பங்குகொள்ள நம்மை ஆன்ம, உடல் மற்றும் மனரீதியாக தயார்படுத்தும் இந்த தாயரிப்பின் கொண்டாட்டத்தில் பெருமகிழ்வுடன் பங்கெடுத்து கிறிஸ்துவில் அகமகிழ இத்திருப்பலியில் இணைவோம்! இறையருளைப் பகிர்வோம்.
✦ வாசக முன்னுரைகள்
கடவுள் நம்மை தம்முடைய பிள்ளைகளாக கருதுகின்றார். தம்முடைய அன்பின் அடையளமாக அவர் நம்மைத் தேர்ந்து கொண்டார். நாம் இறைனை விட்டு விலகிச் செல்லும் வேளைகளில், தன்னுடைய இறைவாக்கினர்கள் வழியாக வாக்குரைத்து நம்மை நல் வழிப்படுத்துகின்றார். எவ்வித எதிர்பார்ப்புமின்றி நம்மை மீ;ட்க வல்ல இறைவனின் அன்பின் அரவணைப்பை உணர்த்தும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
மனிதராய் பிறந்த இயேசு கிறிஸ்து இவ்வுலக மக்கள் அனைவருக்கும் மிட்பளித்தார். இறைவன் கிறிஸ்துவின் வழியாக நம் அனைவரையும் ஒரே குலத்தின் மக்களாக ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தார். அப்படி, ஓரின மக்களாக வாழும் நமக்கு பவுல் அடிகளார் வழங்கும் ஆசி பெற்ற வார்த்தைகளை உள்ளடக்கிய இவ்விரண்டாம் வாசகத்திற்கு செவிகொடுத்து இறைவனின் ஆசிரை நமதாக்குவோம்.
✦ மன்றாட்டுகள்
- அன்பை அடித்தளமாகக் கொண்டு திருஅவையை கட்டி எழுப்பிய எம் அன்பு இறைவா! திரு அவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் இறையன்பையும், பிறரன்பையும் எவ்வித குறையும் இன்றி கடைபிடிக்க தேவையான அருள் வரங்களை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்றும், கிறிஸ்துவின் பிள்ளைகளாக என்றும வாழ்ந்திட வரமளித்திட வேண்டுமென்றும் உண்மை மன்றாடுகின்றோம்.
- உலகுக்கு உரு கொடுத்த எம் இறைவா! இவ்வுலகில் மக்களை வழிநடத்தும் அனைத்து தலைவர்களையும் நிறைவாக ஆசீர்வதியும். இவர்கள் அனைவரும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து, மக்கள் மீது அன்பு கொண்டு, அவர்களை அன்பின் பாதையில் நடத்திட வேண்டிய வரங்களை தந்து, சுயநலமற்ற பிறநல சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
- ஆதரவற்றோருக்கு ஆதரவே எம் இறைவா! முழுமையான அன்பும், முறையான கவனிப்பும் இன்றி தவிக்கும் அனைத்து முதியோர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுக்கு தேவையான அன்பையும் அரவணைப்பையும் தரவேண்டிய பொறுப்புணர்வை எங்களுக்கு தந்தருளும். எங்கள் வீட்டில் உள்ள முதியவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அவர்களை அன்புடன் நடத்திட வேண்டிய அருள் வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- அறிவின் ஒளியே எம் இறைவா! எம் நாட்டின் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்களுடைய வாழ்வில் அடைய வேண்டிய குறிக்கோள்களை நோக்கி பயணித்திட வேண்டிய அறிவொளியை தந்தருளும். விலைமதிப்பற்ற தங்களுடைய நேரத்தை பொழுதுபோக்குகளில் செலவழிக்கமால் தங்கள் வாழ்க்கைக்கு உதவும் அறிவுசார் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய அனைத்து வரங்களையும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
- அழியும் செல்வமான இம்மண்ணக செல்வத்தின் மீது நாட்டம் கொள்ளாமல், நிலையான செல்வமாகிய விண்ணகச் செல்வத்தை உடைமையாக்கி கொள்வதற்கான வழியாகிய அன்பை நாங்கள் இறுகி பற்றி கொள்ளவும். பிறர அன்பு பணிகளில் அதிகமாக ஈடுபடவும் வேண்டிய தாராள மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Baptism of Lord

No comments:
Post a Comment