Thursday, March 20, 2025

தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25




திருப்பலி முன்னுரை

தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்றாம் வாரத்தில், மனம் வருந்தி விண்ணகத்தை உடமையாக்கிக் கொள்ள  நம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்து உயிர்த்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, பாவமற்ற பரிசுத்த வாழ்வு வாழ்வதற்கான வழிகளை நமக்கு காட்டியுள்ளார்.  ஒரு மரத்தின் கனியின் மூலம் மரமானது அறியப்படுவது போல, நம்முடைய செயல்களே நம்மைப் பற்றி இவ்வுலகுக்கு எடுத்துரைக்கின்றன. எனவே, இத்தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் பக்தி முயற்சிகள் அனைத்தும் நம்முடைய செயல்களில் வெளிப்பட வேண்டும். ஏனெனில், நாம் அனைவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டுள்ளோம். ஆகவே, கிறிஸ்துவின் இயல்புகள் நம்மில் வெளிப்பட வேண்டும். ஆவ்வாறாக, கிறிஸ்துவின் இயல்புகளை நாம் பெற வேண்டுமெனில் நம்முடைய பாவங்களுக்காக மனம் வருந்தி, பாவத்தை விலக்கி, அனைவருக்கும் நலமளிக்க கூடிய வகையில் வாழ வேண்டும். மரத்தின் கிளைகளை தரித்து விடுவது போல, நம்மிடத்தில் உள்ள வேண்டாத குணங்களை இத்தவகாலத்தில் விலக்குவோம். கிறிஸ்து வாக்களித்த விண்ணகத்தின் குடிமக்களாக மாற தகுதி பெற வேண்டி இந்த பாவ கழுவாயின் பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம். 

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

துன்பத்தில் வாடுவோரின் துயர் துடைக்க இறைவன் தன்னுடைய பணியாளர்களை தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கின்றார். எகிப்தில் கடும் கொடுமைகளுக்குள்ளான இஸ்ரேயல் மக்களை, மீட்பதற்கு இறைவன் மோசேவை அனுப்பினார். அவ்வாறு மோசே இறைவனின் பணிக்காக அனுப்பபடும், இறைவன் மோசேவின் நம்பிக்கயை  உறுதிபடுத்தும் வார்த்தைகளைக் கொண்ட இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை

பாலைநிலத்தில் பயணம் செய்த இஸ்ரேயல் மக்களை இறைவன் நிறைவாக ஆசிர்வதித்து, அவர்களுக்கு தேவையான அனைத்தும் நலன்களையும் அளித்தார். இருப்பினும், இஸ்ரேயல் மக்கள் இறைவனுக்கு எதிராக பாவம் புரிந்தனர். பாவத்தில் விழுந்து இஸ்ரேயல் மக்களை போலில்லாமல், விண்ணகத்தை உறைவிடமாக கொண்ட நம் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி விண்ணகத்தின் மக்களாக வாழ அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்த்pற்கு பக்தியுடன் செவிகொடுப்போம். 


மன்றாட்டுகள்

1. அன்பை ஆணிவேராக கொண்டு நீர் உருவாக்கிய உம் திரு அவைக்காக மன்றாடுகின்றோம். இறைவாக்கினர்களும், மெசியாவும் எவ்வித தொய்வுமின்றி இறைப்பணி ஆற்றியது போல உம் திரு அவையின் தலைவர்களும், உறுப்பினர்களும் தளராது இறைப்பணி ஆற்ற தேவையான மன திடத்தை தந்தருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.


2. உறவுகளை உன்னத விருந்தின் மூலம் கட்டி எழுப்பும் எம் அன்பு இறைவா! திருப்பலியில் பங்கேற்று ஒரே பாத்திரத்தில் இருந்து நற்கருணை உட்கொள்ளும் நாங்கள் அனைவரும் ஒரே மக்கள் என்ற உணர்வைப் பெற்று எவ்வித வேறுபாடு இன்றி ஒற்றுமையில் நிலைத்திருக்கவும்;. சாகோதரத்துடன் வாழவும் அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.



3. நம்பிக்கையை வலுப்படுத்தும் எம் இறைவா! இறை வேண்டலில் ஈடுபட்டு இறைநம்பிக்கையில் வலுபெற இறைபீடம் சூழ்ந்துள்ள எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். எங்களுடைய குறைகளை ஏற்று, இறைவழியில் நடந்து, இறைவனின் வல்லமையை பெற எங்களுக்கு தேவையான அருளைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


4. மனம் வருந்துங்கள் என்று மொழிந்த எம் இறைவா! தவக்காலத்தில் பக்தி முயற்சிகளில் ஈடுபடும் எங்களின் செப வாழ்வு, எங்கள் அன்றாட வாழ்வில் வெளிப்பட வேண்டுமென்றும். எங்களிடத்தில் உள்ள தீய குணங்களை விலக்கி விண்ணத்தின் மக்களாக வாழ வரமருளி, உம் மந்தையில் எம்மையும் சேர்த்துக் கொள்ள வேண்டி உம்மை மன்றாடுகின்றோம். 


5. அல்லல்படுவோரின் ஆதரவே எம் இறைவா! பருவநிலை மாற்றத்தாலும், மோசமான உடல்நிலையாலும் பாதிக்கப்பட்டு அல்லல்படும் மக்களை நிறைவாக ஆசிர்வதியும். நீரே அவர்களுக்கு அதரவாக இருந்து, அவர்களின் துயர்துடைத்து அவர்களுக்கு புதுவாழ்வளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF



 


Saturday, March 15, 2025

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை

கிறிஸ்து இயேசுவில் அன்புக்குரியவர்களே, 

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருப்பலி இயேசுவின் தோற்றம் மாற்ற் நிகழ்வைப் பற்றி சிந்திக்க அழைப்புவிடுக்கின்றது. 

இயேசு தோற்றம் மாறும் பொழுது அவருடைய மனித சாயல் மறைந்து, இறைசாயல் வெளிப்படுகிறது. இயேசு தாபோர் மலையில் வேண்டிக் கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது, அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. இந்த தோற்றம் மாறும் நிகழ்வானது இயேசு மனித சாயலும், இறைசாயலும் கொண்டுள்ளார் என்பதை உறுதிபடுத்தி, அவர் கடவுளின் மகன் என்றும், நமக்காக இவ்வுலகிற்கு வந்து, நம் பாவங்களுக்காக தன் உயிரை கையளிக்க போகிறார் என்பதன் முன் அடையாளமாக இருக்கிறது. இயேசு இறைவேண்டல் வழியாக துன்பத்தை ஏற்க வலிமை பெறுகிறார், மனவுறுதி கொள்கிறார். இதன் மூலம் தன் பாடுகளை ஏற்க ஆயத்தமாகிறார். 

ஒவ்வொரு திருப்பலியும் இயேசுவின் பாடுகளை தியானிக்கவும், மனமாற்றம் பெறவும் அழைப்புவிடுக்கிறது. இத்தவக்காலத்தில் பக்தி நிறை செயல்களை செய்து, செபத்தில் நிலைத்து, திருப்பலிக்கு முக்கியதுவம் கொடுத்து, நம் பாவங்களுக்காக மனம் வருந்தி, மன்னிப்பு பெற்று. நம் வாழ்வில் மாற்றம் பெற இத்திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசகம் முன்னுரை தொடக்கநூல் 15:5-12, 17-18, 21 

இன்றைய முதல் வாசகமானது தொடக்கநூலிலருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆபிரகாம் ஆண்டவர் மீது கொண்ட நம்பிக்கையும், அதற்கு கைமாறாக இறைவன் அபிரகாமுக்கு ஆசிளித்து அவருடன் உடன்படிக்கை செய்து கொண்டதையும் எடுத்துரைக்கிறது. ஆபிரகாம் போல் ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளவும், அவருடைய முடிவில்லா. அன்பையும், ஆசிரையும் பெற்று கொள்ள அழைப்புவிடுக்கும் இம்முதல் வாசகத்திற்கு பக்தியுடன் செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை பிலிப்பியர் 8:17-4:1 

இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் விண்ணக வாழ்வை பற்றி சிந்திக்க அழைப்புவிடுக்கிறார். விண்ணகமே நம் தாய்நாடு என்பதை மையப்படுத்தி, இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வானது நிலையில்லாதது. எனவே, மண்ணகம் சார்ந்தவை பற்றி எண்ணாமல் விண்ணகம் பற்றி சிந்திக்க அழைப்புவிடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம்.


மன்றாட்டுகள்

1. மனமாற்றத்தின் பாதையில் மக்களை வழிநடத்த திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! கிறிஸ்துவின் சீடர்களாகிய நாங்கள் அனைவரும், கிறிஸ்துவின் போதனைகளின் படி எங்கள் வாழ்வை நடத்தவும், கிறிஸ்துவின் பாடுகள் மூலம் நாங்கள் பெற்ற மீட்மை என்றென்றும் காத்துக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாவிகனை மன்னிக்கும் எம் இறைவா! குற்றங்கள் புரிந்து, அதற்காக தண்டனை அனுபவிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் அனைவரும் தங்கள் தவறுகளுக்காக மனம் வருந்தி, தங்கள் வாழ்வை புதிய பாதையில் அமைத்துக் கொள்ள தேவையான அனைத்து வரங்களையும் பொழிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. அமைதியை ஏற்படுத்த வந்த எம் இறைவா! எங்கள் இல்லங்களில் அமைதி, ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல் போன்ற இறைப்பண்புகள் மேலோங்கிட வேண்டுமென்றும், மனமாற்றத்தின் காலமாகிய இத்தவக்காலத்தில் எங்கள் குடும்பங்களில் உள்ள உறவு பிணைப்புகள் வலுப்பெற தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. தங்கள் நாடுகளையும், வீடுகளையும் இழந்து அகதிகளாக வாழும் அனைத்தும் மக்களையும் நிறைவாக அசீர்வதிக்கும்படி மன்றாடுகின்றோம். கடுமையான மன மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் இவர்களை நாங்கள் அனைவரும் எங்களுடைய சகோதரர்களாக கருதி அவர்களுக்கு மதிப்பும், நல்வாழ்வும் அளிக்க தேவையான தாராள மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்பின் இறைவா, ஏழ்மையிலும், பசியாலும், பட்டினியாலும் வாடுவோருக்காக செபிக்கின்றோம். இத்தவக்காலத்தில் தர்மம், நோன்பு, இறைவேண்டல் ஆகியவற்றை மையப்படுத்தி வாழும் எம்மக்கள் தங்களால் முடிந்த உதவிகளையும், பொருட்களையும் இல்லாதவர்களோடு பகிர்வாழும் மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


To Download PDF

Wednesday, March 5, 2025

தவக்காலம் முதல் ஞாயிறு 09-03-25

தவக்காலம் முதல் ஞாயிறு 09-03-25

தவக்காலம் முதல் ஞாயிறு 09-03-25

திருப்பலி முன்னுரை

தவக்காலத்தின் முதல் ஞாயிறு திருப்பலி கொண்டாட்டத்தின் வழியாக சோதனைகளை வெற்றி கொள்ள நம் இறைவன் நமக்கு அழைப்புவிடுகின்றார். இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்கு பெற்ற பின்புஇ தூய ஆவியானவரால் பாலை நிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு 40 நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அலகையின் பேராசை மிக்க வார்த்தைகளுக்கு செவிசாய்க்காமல்இ வாழ்வை துலங்க வைக்கும் இறைவார்த்தையே சிறந்தது என்பதை மேற்கோள் காட்டி சோதனைகளை இறைவார்த்தையினால் வெல்கிறார். 

இத்தவக்காலம் அருளின் காலம்இ இறக்கத்தின் காலம் மற்றும் கடவுளின் அன்பை சுவைக்கும் காலம். இயேசுவின் தியாகத்தை உணர்ந்து அவருடன் பயணிக்க வேண்டிய காலம். அலகை தரும் சோதனைகளையும்இ வேதனைகளையும் கண்டு ஒளிந்து கொள்ளாமல் தர்மம்இ இறைவேண்டல்இ நோன்பு இவைகளைப் பயன்படுத்தி அவற்றை திடமுடன் வெல்வோம். பாவநிலையை அகற்றிஇ தூயவர்களாக வாழ அழைப்பு விடுக்கும் இத்தவக்காலத்தில் முடிந்தவரை முயற்;சி செய்து இயேசுவுக்கு நெருக்கமானவர்களாக மாறுவோம். 

சோதனையில் சிக்கி மனந்தளராமல்இ இறைவார்த்தையை மார்புக்கவசமாக கொண்டுஇ  இறைவனின் கல்வாரி பயணத்தில் அவருடன் இணைந்து பயணிக்க தகுதி பெரும்பொருட்டு இந்த தயாரிப்பின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை : இணைச்சட்டம் 26  : 4-10 

இன்றைய முதல் வாசகமானது இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தம் வலிய கரத்தாலும்இ ஓங்கிய புயத்தாலும்இ அஞ்சத்தக்க பேராற்றலாலும்இ அடையாளங்களாலும் அடிமைதனத்தனத்திலிருந்து விடுவித்த ஆண்டவருக்கு தங்கள் முதற்பலன்களை நன்றி காணிக்கையாக செலுத்த இறைவாக்கினர் மோசோ மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். நமக்கு கிடைத்த பலன்களுக்கு நன்றி கூற அழைப்புவிடுக்கும் இம்முதல் வாசத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரைகள் : உரோமையர் 10:8-12 

ஆண்டவரின் திருப்பெயரை வாயார அறிக்கையிட்டு மன்றாடும் எவரும் மீட்டு பெறுவர் என்று புனித பவுலடியார் இறைவார்த்தையின் வல்லமையைஇ இரண்டாம் வாசகம் வழியாக எடுத்துக் கூறுகின்றார். எனவே, நாமும் இயேசுவே ஆண்டவரை வாயார அறிக்கையிட்டு எந்தவித பாகுபாட்டிற்கும் இடம் கொடாமல்ஈ இயேசுவின் மீட்பு பாதையில் இணைய அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிசாய்ப்போம்.

மன்றாட்டுகள்

1. நல்லாயனே எம் இறைவா! திருஅவையை வழிநடந்தும் திருப்பணியாளர்கள் அனைவருக்காவும் செபிக்கின்றோம். தூய ஆவியாரின் துணைக்கொண்டுஇ தாம் எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றி பெற்றுஇ தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நல்வழியில் நடத்தவும்இ சோதனைகளுக்கு இடம் கொடாமல் இறைவார்த்தையையின் படி என்றென்றும் வாழவும் தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 


2. அன்பின் இறைவாஇ ஏழ்மையிலும்இ பசியாலும்இ பட்டினியாலும் வாடுவோருக்காக செபிக்கின்றோம். இத்தவக்காலத்தில் தர்மம்இ நோன்புஇ இறைவேண்டல் ஆகியவற்றை மையப்படுத்தி வாழும் எம்மக்கள் தங்களால் முடிந்த உதவிகளையும்இ பொருட்களையும் இல்லாதவர்களோடு பகிர்வாழும் மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


3. வார்த்தையை வாழ்வாக்கிய எம் இறைவா! எங்களுடைய சொற்களாலும்இ செயல்களாலும் பிறர் மனத்தை காயப்படுத்தாமல் அன்புஇ அமைதிஇ பொறுமை போன்ற தூய ஆவியாரின் கனிகளையும்இ ஒருவரை ஒருவர் மதித்துஇ மன்னித்து ஏற்றுக்கொண்டு வாழ வேண்டுமென்றும்இ இறைவனின் வார்த்தைகளை எங்கள் வாழ்வாக்க வரமருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.


4. நம்பிக்கையின் ஊற்றே எம் இறைவா! இத்திருப்பீடம் சூழ்ந்துள்ள அனைத்து இறைமக்களுக்காகவும் செபிக்கிள்றோம். மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் என்பதனை உணர்ந்துஇ இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவும்இ இத்தவக்காலத்தில் மன்னிப்புஇ இறக்கம்இ பொறுமை போன்ற விழுமியங்களை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் எங்கள் வாழ்க்கையிலும. பிரதிபலக்க வேண்டிய வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


5. காணாமல் போன ஆன்மாக்களைத் தேடி மீட்ட எம் அன்பு இறைவா! இறைவனை விட்டு விலகிஇ இறைப் பற்றி இல்லாமல் வாழும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களை உம் எல்லையில்லா வரங்களால் ஆசீர்வதித்துஇ உம் பாதம் திருப்பிஇ இறை ஞானமுடைய நல்ல மக்களாக வாழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


To Download PDF


Saturday, March 1, 2025

திருநீற்று புதன் 05-03-2025

திருநீற்று புதன் 05-03-2025

திருநீற்று புதன் 05-03-2025


திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவின் பாடுகளையும் அதனால் நாம் பெற்ற மீட்பையும் பற்றி சிந்திக்க இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆடம்பரமான பலிகளை நம்மிடமிருந்து எதிப்பார்ப்பதில்லை. மாறாக, நொறுங்கிய மற்றும் தாழ்ச்சிமிக்க உள்ளத்தையே எதிர்பார்க்கின்றார். அதன்படி, இறுமாப்புக் கொண்ட நம்முடைய உள்ளங்களை இறைவனின் கருணை கொண்டு கரைக்க இத்தவக்காலம் நமக்கு உதவுகின்றது. கிறிஸ்து நமக்காக அனுபவித்த பாடுகளை எண்ணி மனம் மாற்றத்தின் பாதையில் பயணிக்க தயராகும் நாளே இச்சாம்பல் புதனாகும். மண்ணிலிருந்து தோன்றிய நாம் மீண்டும் மண்ணுக்கே திரும்புவோம் என்ற உண்மையை நமக்கும் உணர்ந்தும் அடையாளமாக இன்றைய திருப்பலியில் நம் நேற்றியில் சாம்பலானது பூசப்படுகின்றது.

மோசே நாற்பது நாட்கள் நோன்பிருந்து பத்துகட்டகளையைப் பெற்றார். இஸ்ரேயல் மக்கள் நாற்பது ஆண்டுகளாக பாலைநிலத்தில் பயணம் செய்து கானான் நாட்டை அடைந்தார்கள். இறைமகன் இயேசு கிறிஸ்து நாற்பது நாட்களாக பாலைவனத்தில் தனித்திருந்து செபித்தார். இவர்களைப் போன்று நாமும் இத்தவக்காலத்தை இறைவனை அனுகிச் செல்வதற்கான காலமாக கடைபிடிப்போமெனில் இயேசு காட்டும் மீட்பின் பாதையை நமக்கானதாக மாற்ற முடியும். 

எனவே, எளிய உள்ளதவராய் உதட்டளவில் மட்டும் நோன்பிருந்து, இறைவேண்டல் புரியாமல் நம் உள்ளத்தளவில் நோன்பிருந்து இறைவேண்டல்களை மேற்கொள்வதற்கு தேவையான ஆற்றல்களை வேண்டி இம்மனமாற்றத்தின் பகிர்வில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம். உள்ளத்தை கிழித்து கொள்ளுங்கள் என்று இறைவாக்கினர் யோவேல் முன்னறிவிக்கிறார். மனமாற்றம் என்பது ஒருவர் தாம் செய்த தவறை உணர்ந்து, பாவத்திலிருந்தும் மற்றும் எல்லா வகையான தீமையிலிருந்தும் விலகி திரும்பி வருவதை குறிக்கும். கடவுள் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர் மற்றும் நீடிய பொறுமை உள்ளவர் என்பதை உணர்த்தும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

தவக்காலம் இதுவே தகுந்த காலம். இன்றே மீட்பின் நாள் என்று புனித பவுலடியார் இவ்விரண்டாம் வாசகத்தின்; வழியாக கடவுளோடு ஒப்புரவாக நமக்கு அழைப்புவிடுக்கிறார். அவரின் அழைப்பை ஏற்று கடவுளிடமிருந்து நாம் பெற்ற அருளை மீண்டும் புதுமிக்க வழிகாட்டும் இவ்வாசகத்திற்கு மனம் திறந்து செவிமடுப்போம்.

திருநீற்று பூசும் சடங்கு முன்னுரை

பழைய ஏற்பாட்டில்; கோணிiயை ஆடையாக அணிந்து சாம்பல் பூசி தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தும்படி இறைவாக்கினர்கள் மக்களை அழைத்தார்கள். அதேபோல் மனம் மாற்றத்தின் காலமாகிய தவக்காலத்தில் அடியெடுத்து வைப்பதன் அடையாளமாக இப்பொழுது, அருள்பணியாளர் நம்மை அனைவரையும் இச்சடங்கில் பங்கேற்க அழைப்பார். அதன் பின்னர் திருநீற்றின் மீது செபித்து அதை ஆசிர்வதித்து “மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்” என்ற சொல்லியபடி திருநீற்றை நம் நெற்றியில் பூசுவார். இறைமக்கள் அனைவரும் இச்சடங்கில் பக்தியுடனும் அமைதியுடனும் பங்கெடுக்கவும்.

மன்றாட்டுகள்

1. மனமாற்றத்தின் பாதையில் மக்களை வழிநடத்த திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! கிறிஸ்துவின் சீடர்களாகிய நாங்கள் அனைவரும், கிறிஸ்துவின் போதனைகளின் படி எங்கள் வாழ்வை நடத்தவும், கிறிஸ்துவின் பாடுகள் மூலம் நாங்கள் பெற்ற மீட்மை என்றென்றும் காத்துக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாவிகனை மன்னிக்கும் எம் இறைவா! குற்றங்கள் புரிந்து, அதற்காக தண்டனை அனுபவிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் அனைவரும் தங்கள் தவறுகளுக்காக மனம் வருந்தி, தங்கள் வாழ்வை புதிய பாதையில் அமைத்துக் கொள்ள தேவையான அனைத்து வரங்களையும் பொழிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. அமைதியை ஏற்படுத்த வந்த எம் இறைவா! எங்கள் இல்லங்களில் அமைதி, ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல் போன்ற இறைப்பண்புகள் மேலோங்கிட வேண்டுமென்றும், மனமாற்றத்தின் காலமாகிய இத்தவக்காலத்தில் எங்கள் குடும்பங்களில் உள்ள உறவு பிணைப்புகள் வலுப்பெற தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. தங்கள் நாடுகளையும், வீடுகளையும் இழந்து அகதிகளாக வாழும் அனைத்தும் மக்களை நிறைவாக அசீர்வதிக்கும்படி மன்றாடுகின்றோம். கடுமையான மன மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் இவர்களை நாங்கள் அனைவரும் எங்களுடைய சகோதரர்களாக கருதி அவர்களுக்கு மதிப்பும் நல் வாழ்வும் அளிக்க தேவையான தாராள மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

5. மனமாற்றத்தின் காலமாகிய இத்தவக்காலத்தில் காலடி எடுத்து வைக்க இத்திருநீற்று புதன் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இறை வாரத்தை படித்து, தியானித்து அதன் படி வாழ்ந்து இத்தவகாலத்தை பயனுள்ளதாக மாற்ற தேவையான அருள் வரங்களை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 



Ash Wednesday Mass Liturgy 2025
Ash Wednesday Mass Introduction 2025
Ash Wednesday Iraivelicham

Thursday, February 27, 2025

பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு 02-03-2025

பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு 

02-03-2025

பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு 02-02-2025


திருப்பலி முன்னுரை

நல்ல உள்ளம் கொண்டவர்களின்; நன்மைத்தன்மை, அவர்களுடைய செயல்களாலே அறியப்படும். இறைவன் மீதும், தம் அயலாரின் மீதும் அன்பு கொண்டவர்கள் ஒருபொழுதும் தீங்கிழைக்க மாட்டார்கள். இருப்பினும், மனித பலவீனத்தால் ஏதேனும் தவறுகள் செய்துவிட்டால், அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பார்கள். இப்படி, தங்களிடத்;தில் உள்ள நம்மைத்தன்மைக்கு செயல் வடிவம் கொடுப்பார்கள். இதைத்தான் புனித பவுல் “செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்” என்று குறிப்பிடுகின்றார்.

இயேசு இவ்வுலகில் பிறந்து, இறைவனிடமிருந்து பெற்ற நன்மைத்தன்மையை யாவருக்கும் பகிர்ந்தளித்தார். தம்முடைய சீடர்களையும் அவர் வழி பின்பற்றி நன்மையை உலகெங்கும் எடுத்துச்செல்ல பணித்தார். அதுபோல, இறைவனின் உண்மையான சீடர்களும் நற்செயல்கள் புரிவதில் ஆர்வம் காட்டுவார்கள். எனெனில், நம்முடைய செயல்களை பொறுத்தே நமமுடைய விசுவாசமானது அறியப்படுகின்றது. இயேசுவின் சீடர்களாக நாம் இருக்க வேண்டுமென்றால் அதற்குரிய பண்புகளையும், செயல்களையும் நாம் கொண்டிருக்க வேண்டும். 

நம்முடைய எண்ணத்தால், வார்த்தையால், சொற்களால் மற்றும் செயல்களால் நம்மிடையே உள்ள நல்லவைகளை பன்மடங்கு பெருக்கி, அதை பன்மடங்கு பிறருக்கு உதவும்படி செய்ய தேவையான ஆற்றல்களை வேண்டி இந்த ஆன்மீக விருந்தில் அர்பணிப்புடன் பங்கேற்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

ஒருவரின் வாயிலிருந்து உதிர்க்கும் வார்த்தைகளும், அந்த வார்த்தைகளோடு பொருந்திய அவருடைய செயல்களுமே, அம்மனிதரின் உள்ளத்து அறைகளின் அழகை இவ்வுலகுக்கு எடுத்துரைக்கின்றன. எனவே, நாம் உதிர்க்கும் வார்த்தைகளுக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னரை

இவ்வுலகின் மீது ஆளுகைப் புரிந்து கொண்டிருந்த பாவத்தையும், அதனால் விளையும் சாவையும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெற்றிக்கொண்டார். அவருடைய சீடர்களாகிய நாமும், பாவத்தை விடுத்து சாவை வெற்றி கொள்ள முடியும். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கைக் கொண்டு பாவத்துக்கிற்கு எதிராக வாழ அழைப்புவிடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.


மன்றாட்டுகள்

1. அன்பு தந்தையே இறைவா, திருஅவையை கட்டி எழுப்ப நீர் தேர்ந்தெடுத்த எம் திருதந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் இருபால் துறைவியருக்காக செமிக்கிறோம். தங்கள் வாழ்வில் வரும் சோதனை, இன்னல்கள் மற்றும் தடைகளை கண்டு தடம் மாறாமல். நல்ல கனி தரும் மரங்களாக வளர தேவையான அருளை பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 


2. வழிநடத்தும் வள்ளலே எம் இறைவா, எம் நாட்டு தலைவர்களை ஆசிர்வதிக்க வேண்டுகிறோம். தன்னலனில் அக்கறை கொள்ளாமல் பிறர் நலன் நாடவும், மக்களின் அன்றாட தேவையை உணர்ந்து, அவர்களை வழிநடத்த தேவையான ஞானத்தையும், முன்மதியையும் தர வேண்டி உம்மை மன்றாடுகிறோம்.


3. நல்ல ஆயனே இறைவா, இன்றைய உலகில் மக்கள் படும் துன்பங்களை உம் கருணை கண் கொண்டு பாரும். போர்களாலும், இயற்கை சீற்றத்தாலும் பாதிக்கப்பட்டு நிம்மதியற்று வாழும் மக்களுக்காக வேண்டுகிறோம். அன்பு, அமைதி, மன்னிப்பு மற்றும் விட்டுக்கொடுத்தல் போன்ற பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தி தங்களை பாதுகாத்து வாழ வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 


4. உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும் என்று மொழிந்த ஆண்டவரே. இத்திருப்பீடம் சூழ்ந்துள்ள அனைவரையும் உம் பாதம் அர்பணிக்கின்றோம். நாங்கள் அனைவரும் உம் ஆற்றலுள்ள இறைவார்த்தையை எங்கள் உள்ளத்தில் பதித்து, அதனை  எங்கள் அன்றாட வாழ்வில் பிறரோடு பகிர்ந்து வாழ் அரம்தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. குணமளிப்பவரே எம் இறைவா! தொடர் உடல் நல பின்னடைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருத்தந்தை அவர்களுக்காக மன்றாடுகின்றோம். கிறிஸ்துவை இவ்வுலகில் பிரதிபலித்து, மக்களின் திருந்தந்தையாக திகழ்ந்த எம்முடைய திருந்தந்தை விரைவில் குணமடைய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். 


To Download PDF


Thursday, February 20, 2025

பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு 23-02-25

பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு 

23-02-25

பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு  23-02-25


திருப்பலி முன்னுரை 

இறை இயேசுவின் அன்பால் ஈர்க்கப்பட்டு இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! பொதுக்காலத்தின் ஏழாம் ஞாயிற்றின் திருப்பலி வாசகங்கள் அனைத்தும் நம்மை அன்பு செய்யவும், நம் அன்பை பிறரோடு பகிர்ந்து வாழவும் அழைக்கிறது. பகைவரையும் அன்பு செய்யுங்கள் என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தை நம்மை சிந்திக்க வைக்கிறது. அன்பு செய்பவரையே பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில், நம் பகைவரையும் வெறுப்போரையும் எவ்வாறு பொறுத்துக் கொண்டு, அன்பு செய்வது? என்ற கேள்வியை நம்மை நோக்கி நாமே எழுப்புவோம். நம்மிடையே நம்முள் ஒருவராக பிறந்து, வளர்ந்து மற்றும் பாடுபட்டு இறந்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிறரன்iபு வெறும் வார்த்தைகளால் அல்லாமல் தம் தினசரி வாழ்க்கையால் வாழ்ந்தும் காட்டினார். 

அன்பே இறைமகனாம் இயேசுவின் சாயலாகும். அவரின் சாயலில் படைக்கப்பட்ட நாம் அவரைப்போல வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் உள்ளத்தில் கோபம், பழிவாங்கும் எண்ணம் மற்றும் பொறாமை பெருகும் பொழுது அவற்றை தூக்கு எரிந்து விட்டு அன்பு, மகிழ்ச்சி, பொறுமை என்னும் தூய ஆவியின் கனிகளை அச்சாணியாக கொண்டு நம் வாழ்வை புதுப்பிப்போம். 

"நாளை நாளை எண்ணாதே நாளை வீணில் களிக்காதே

நாளை செய்யும் காரியத்தை இன்றே செய்து முடித்திடுவாய்!"

என்பதற்கேற்ப நாளை என ஒதுக்காமல், இன்றே நல்லதை செய்ய தொடங்குவோம். பகைவரை அன்பு செய்து, வெறுப்போருக்கு நன்மை செய்து, சபிப்போருக்கு ஆசி கூறி மற்றும் இகழ்வோரை மன்னித்து வாழும் நல் மனம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை 

தன்னை கொலை செய்ய வந்த சவுலை பழிதீர்க்க தாவீதுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தாவீதோ "ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கைவைக்கமாட்டேன் என்று கடவுள் மேல் உள்ள அன்பையும், பத்தியையும் வெளிப்படுத்தினார். அன்பு எங்கு உள்ளதோ அங்கே மன்னிப்பு இருக்கும். தாவீதைப் போல மன்னித்து வாடி வரம் வேண்டி இ;ம்முதல் வாசகத்திற்கு பக்தியோடு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

புனித பவுல் கொரிந்து மக்களுக்கு கடவுளின் சாயலையும், மனிதனரின் சாயலையும், அவர்களின் இயல்பையும் இந்த இரண்டாம் வாசகம் வழியாக எடுத்துரைக்கிறார். முதல் மனிதன் ஆதாம் மண்ணிலிருந்து உருவாக்கப்பெற்றார். மண்ணக சாயலைக் கொண்டார். ஆனால் இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். விண்ணக சாயலை கொண்டவர். இம்மண்ணக, விண்ணக சாயலின் விளக்கங்களை அறிந்து கொள்ள உதவும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்

1. உம் எல்லையில்லா அன்பின் அடையாளமாக திரு அவையை ஏற்படுத்திய எம் இறைவா! உம் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும், உம்மைப் போல தங்களிடத்தில் உள்ள அனைத்தையும் பிறரோடு பகிர்ந்து கொண்டு வாழும்; தாராள மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! போதிய உணவு, உடை, உறைவிடமின்றி வறுமையால் வாடும் அனைவரையும் அரவணைக்கும்படி மன்றாடுகின்றோம. இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டிய மனப்பக்குவத்தை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம். 

3. எங்களை அதிகமாய் அன்பு செய்யும் இறைவா! உலகெங்கும் வெவ்வேறு வழிகளில் உம்முடைய நற்செய்தி அறிவிப்பு பணியை, சமூக நல சேவைகள் மூலம் ஆற்றி வரும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுக்கு தேவையான பொருள் உதவிகளை தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்

4. குழந்தைகளை அன்பு செய்த எம் அன்பு இறைவா! எங்கள் வீடுகளில் உள்ள சிறு குழந்தைகளுக்கு பகிர்வின் மேன்மையை எங்களுடைய செயல்களால் எடுத்துச் சொல்லவும். பிறரன்பு பகிர்வின் பாதையில், அவர்களை; நன்முறையில் வளர்த்திட வேண்டிய ஞானத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. தலைமை குருவே எம் இறைவா! நீர் ஏற்படுத்திய நற்செய்தி பணியை இவ்வுலகில் தொடர்ந்து ஆற்ற, தேவையான இறை அழைத்தல்களை தந்தருள வேண்டுமென்றும், சிறப்பான முறையில் எங்கள் பங்கில் இறை அழைத்தலை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.


Thursday, February 13, 2025

பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு – 16-02-25

பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு 

16-02-25

பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு – 19-02-25

                                    இயேசுவின் மலைப் பொழிவு


திருப்பலி முன்னுரை

இவ்வுலக மக்களாகிய நாம் செல்வமாக கருதுபவை யாவும் இறைவன் முன்னிலையில் மதிப்பற்றதாகின்றது. எனவே, உலக செல்வத்தை சேர்ப்பதால் இறைவன் தரும் நிலைவாழ்வை நாம் உடமையாக்கிக் கொள்ள முடியாது. இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசங்களும் இறைவன் தரும் நிலைவாழ்வை பெறுவதற்காக தகுதியாக்கிக் கொள்ள நமக்கு அழைப்புவிடுகின்றது. அதிலும் சிறப்பாக, இன்றைய நற்செய்;தியில் இடம் பெற்றுள்ள மலைப்பொழிவு வாசகத்தில் இறைவன் அளிக்கும் விண்ணக இன்பத்தை யார் அடைவார்கள் என்று இயேசுவே பட்டியலிடுகின்றார்.

ஏழைகளையும், நோயளிகளையும் மற்றும் துன்புறுவோரையும் பாவிகள் என்று கருதி இவ்வுலகு வெறுத்த வேளையில், இவர்களுக்கே விண்ணகம் உரியது என்று இயேசு கிறிஸ்து மொழிந்த பொன்மொழிகளை நம்முடைய வாழ்வாக்கி, இறைவன் தரும் நிலையான பெருமகிழ்வில் பங்குகொள்ள நமக்கும் அழைப்பு விடுகின்றார். எளிய இறை நம்பிக்கையின் மூலம், இறைவனின் பிள்ளைகளாகிய அனைவருக்குமாக நாம் வாழ்வோமெனில், இறைவன் நம் இதயத்தில் குடிகொள்ளவார். எனவே, எளிய மனம் கொண்ட இயேசுவின் சிடர்களாகிய நாம் அனைவரும் ஏழைக்களுக்காகவும், துயருவோருக்காகவும் செபிக்க இந்த எளிமையான விருந்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

இறைவனை தவிர்த்து, இவ்வுலக செல்வத்தின் மீதும். மனிதர்களும் மீதும் நம்பிக்கை வைப்போமெனில் இறைவன் தரும் மீட்பை நம்மால்; பெற முடியாது. எனெனில், அனைத்தையும் படைத்த நம்முடைய இறைவனே நம்மை காக்க வல்லவர். எனவே, இறைவனில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர் என்றும், நீர் அருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பார்கள் என்று கூறும் இறைவாக்கினர் எசாயா அவர்களின் இறைவாக்கிற்கு கவனமுடன் செவிகொடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு கிறிஸ்து இவ்வுலக மக்கள் அனைவரின் பாவங்களுக்காகவும் இறந்தார். இறந்த இயேசு கிறிஸ்து இறப்பை வென்று, மீண்டும் உயிர்தெழுந்தார். எனவே, அவருடைய சகோதர, சகோதிரிகளாகிய நம்மாலும் பாவத்தை விலக்கி, சாவை வெற்றி கொள்ள முடியும். கிறிஸ்துவோடு இணைந்திருப்போமெனில், கிறிஸ்துவோடு உயிர்த்தெழுவோம் என்ற உயிர்ப்பின் வார்த்தைகள் அடங்கிய இவ்விரண்டாம் வாசகத்திற்கு பக்தியுடன் செவிகொடுப்போம். 


மன்றாட்டுகள்

1. எழை, எளியோரின் வாழ்வை நலமாக்க திருஅவையை ஏற்படுத்திய எம் இறைவா! உம் திருஅவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைரும் உலக செல்வத்தில் நாட்டம் கொள்ளாமல், விண்ணகச் செல்வத்தை சேர்ந்து இறைவன் தரும் நிலைவாழ்வை உடமையாக்கிக் கொள்ளவதற்கான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

2. எழைகளே, நீங்கள் பேறுபெற்றோர் என்று மொழிந்த எம் இறைவா! எங்களிடத்தில் தேவைக்கு மிகுதியாக உள்ளவற்றை பிறருடன் பகிர்ந்து கொண்டு, ஏழைகளின் துயர் துடைக்கவும், அவர்களின் வாழ்வு மேன்மையடைய தேவையான நல உதவிகளை நாங்கள் அவர்களுக்கு செய்திட தேவையான நல்ல மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்களுக்காக மரித்த எம் இறைவா! நாட்டின் எல்லைகளிலும்; மற்றும் எங்கள் மத்தியிலும்; உயிர்களைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடும் வீரர்களுக்காகவும், மருத்துவர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் செய்யும் பணியை நிறைவாக ஆசிர்வதித்து, அவர்களுடைய பணியை கவனமுடன் ஆற்ற அவர்களுக்கு தேவையான அனைத்து வரங்களையும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் இருப்பிடமே எம் இறைவா! இறைவனாகிய உம்மாலே நாங்கள் அனைவரும் மீட்பு பெறுகின்றோம் என்பதை உணர்ந்து, விண்ணக வீட்டை எங்கள் இல்லமாக மாற்ற விண்ணகச் செல்வத்தை சேர்க்க வேண்டிய ஆற்றலை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்றும், அதற்காக எம்மையே நாங்கள் தகுதியாக்கிக் கொள்ள தேவையான அருள் வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

5. தேடிச் சென்று உதவும் இறைவா! பல்வேறு பிரச்சனைகளால் காப்பகங்களில் இருக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை நாங்கள் செய்யவும், எங்கள் இல்லங்களில் உள்ள குறைபாடுள்ளவர்களை நன்றாக கவனித்து கொள்ளதற்கும் தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.




Sunday Mass Introduction
Catholic Mass 
Tamil Mass Introduction

தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25

 தவக்காலம் 3-ஆம் ஞாயிறு 23-03-25 திருப்பலி முன்னுரை தவம், செபம் மற்றும் தியாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கும் தவக்காலத்தின் மூன்...