இறை வெளிச்சம் புனித திருப்பலி உதவியை வழங்குகிறது. புனித திருப்பலி முன்னுரை நீங்கள் இங்கே காணலாம்.

Tuesday, March 3, 2026

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR
08
2026

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

YEAR
A

✦ திருப்பலி முன்னுரை

இறைவனில் தாகம் கொண்டு இவ்விறைப்பிடம் சூழ்ந்துள்ள சகோதர சகோதரிகளே! இவ்வுலக மக்களின் தாகம் தீர்ப்பவராக நம் இறைவன் திகழ்கின்றார் என்ற மைய கருத்தினை சிந்திக்க தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இன்றைய வாசகங்கள், இறைவனில் நம்பிக்கை கொண்டு நிலை வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு மட்டுமே அந்நிலை வாழ்வு சொந்தமாகும் என்று ஆழமாக வலியுறுத்துகின்றன. பாவத்தின் மீது வேட்கை கொண்ட மனிதர்களாகிய நாம் இவ்வுலகச் செல்வங்களின் மீது நாட்டம் கொண்டு, நம்முடைய ஆன்ம தாகத்திற்கான மருந்தை பொருள் செல்வங்களில் தேடுகின்றோம். ஆனால் உண்மையில் நம்முடைய ஆன்ம தாகத்தை போக்க வல்ல அருமருந்து நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்பதை நாம் மறந்து விடுகின்றோம்.

எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற இஸ்ரேயல் மக்கள், ஆண்டவரின் அருள் செயல்களை தங்கள் கண் முன் கண்டும் தங்களுடைய தாகத்திற்கான ஆதாரத்தை இவ்வுலக முறைப்படி மன்றாடினார். இதன் காரணமாகவே, நிலை வாழ்வை அளிக்க வந்த இயேசு கிறிஸ்துவை அவர்கள் மீட்பர் என கண்டு கொள்ள இயலாமல் போனது. கிறிஸ்துவே, இவ்வுலகின் மீட்பர் என்று அறிக்கையிட்டு. திருமுழக்கின் வழியாக கிறிஸ்துவுடன் இணைக்கப் பெற்ற நாம் அனைவரும், கிறிஸ்துவை வாழ்வின் மையமாக கொண்டு, இறைவனின் நிலையான அமைதியில் என்றென்றும் மகிழ்ந்திட தேவையான வரங்களை வேண்டி இத்தாகம் தீர்க்கும் இறைபகிர்வில் பக்தியுடன் கலந்துகொள்வோம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னரை (விடுதலைப் பயணம் 17: 3-7)

இன்றைய முதல் வாசகம், பாலைநிலத்தில் தாகத்தால் துன்புற்ற இஸ்ரயேல் மக்களின் அழுகுரலையும், அவர்களின் உலக வேட்கையையும், அவர்களிடம் இறைவன் காட்டிய அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. தாகத்தால் இறைவனைச் சோதித்த மக்களின் மனித பலவீனத்தையும், அதே சமயம் அவர்கள்மீது இறைவன் பொழிந்த அளவற்ற கருணையையும் இந்த வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. நம் வாழ்க்கையில் வறட்சி நிறைந்த தருணங்களில் இறைவன் விட்டு விலகி இவ்வுலக மாயைகளின் மீது விருப்பம் கொள்ளதே! என்ற வாழ்க்கை பாடத்தை கற்று தரும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர், ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 5: 1-2, 5-8)

இன்றைய இரண்டாம் வாசகம், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்து, நம்மீது அளவற்ற அன்பை வெளிப்படுத்தியதை எடுத்துரைக்கிறது. எனவே, நம்முடைய இன்பத்திற்காக இறைவனை மறுத்தலிக்காமல் கிறிஸ்துவின் வழியாக இறைவனுடன் நல்லுறவு பேண வேண்டும். எனெனில், நமக்கு நிலையான மகிழ்ச்சி அளிக்க வல்லவர் நம்முடைய இறைவனே! எனவே, உயிருள்ள இறைவனில் என்றென்றும் நம்பிக்கை கொள்ள அழைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

நற்செய்திக்கு முன் வசனம் யோவா 4: 42, 15 : ஆண்டவரே, நீர் உண்மையிலே உலகின் மீட்பர்; நான் தாகம் கொள்ளாதபடி வாழ்வு தரும் தண்ணீரை எனக்கு அளித்தருளும்.

✦ மன்றாட்டுகள்

  1. இறைப் படிப்பினைகளை மையமாகக் கொண்டு திரு அவையை நிறுவிய எம் இறைவா! எம் திரு அவையின் உறுப்பினர்கள் அனைவரும் இவ்வுலகச் செல்வத்தை தவிர்த்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்து காட்டிய நிலை வாழ்வின் பாதையில் என்றென்றும் பயணித்து, கிறிஸ்துவின் வழியாக நீர் எமக்கு வாக்களித்த நிலையான பேரின்பத்தை அடைந்திட தேவையான வரங்களை தந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அமைதியை அளிக்க வல்ல இறைவா! இறைவனின் பெயராலும், பழமைவாத சிந்தனைகளாலும் சிதறுண்டு போர் சூழலில் சிக்கி தவிக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்காக மன்றாடுகின்றோம். போரில் ஈடுபட்டு அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடும் இவர்களுடைய உள்ளங்களில் தோன்றி, போர்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றும் அங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான உதவிகளை செய்தருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்
  3. உண்மை செல்வத்தை உலகிற்கு அளிக்க வந்த எம் இறைவா! எங்களின் வாழ்க்கையையும், நேரத்தையும் சமூக ஊடகங்களிலும் கேளிக்கை பேச்சுகளிலும் செலவிடாமல், இறைவன் அளித்த அறிவினைப் பயன்படுத்தி இறைவேண்டல், படிப்பு மற்றும் உழைப்பு போன்ற உண்மையின் வழிகளின் மூலம்; வாழ்வில் முன்னேற்றம் அடைந்திட தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்
  4. வாழ்வின் நீரூற்றே என் இறைவா! மக்களின்; தேவைகளை நன்குணர்ந்த நல்ல தலைமை பண்புகளைக் கொண்ட தலைவர்களை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். அதிலும் குறிப்பாக எம் நாட்டின் நாளைய தூண்களாகிய இளைஞர், இளம் பெண்கள் தங்களுக்கான தலைவரை தங்கள் பகுத்தறிவின் துணை கொண்டு தேர்ந்தெடுத்திட தேவையான ஞானத்தை தந்தருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.
  5. வாழ்வளிப்பவரே என் இறைவா! இத்து திருவழிபாட்டில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்காகவும் மன்றாடுகின்றோம். ஆன்ம மாற்றத்தை எதிர்பார்த்து இறைவனை நாடி வந்துள்ள நாங்கள் அனைவரும் எங்களுடைய உலக கவலைகளை மறந்து, உள்ள கவலைகளை இறைவனின் பாதம் சமர்ப்பிக்கின்றோம். நாங்கள் ஆன்மீகப் பாதையில் தொடர்ந்து பயணித்து இறைவனில் என்றும் நல்லுறவு பேண தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Lent 3rd week introduction | Iraivelicham Mass Introduction | Sunday 6th Week Mass Introduction |தவக்காலம் மூன்றாம் ஞாயிறு | திருப்பலி முன்னுரை | இறை வெளிச்சம்



Saturday, February 28, 2026

The Way of the Cross – History and Devotion

The Way of the Cross – History and Devotion
The Way of the Cross – History and Devotion

In every Catholic church, alongside the Tabernacle, the crucified image of Christ, and the statue of the Blessed Virgin Mary, one devotional element is almost always present: the 14 Stations of the Way of the Cross.

Especially during the Lenten season, which prepares us to commemorate the Passion, Death, and Resurrection of Christ, the Way of the Cross becomes a deeply cherished devotion. By meditating on the sufferings of Jesus and spiritually walking with Him along the path of His Passion, the faithful are drawn into a profound experience of prayer. For this reason, the Way of the Cross has become one of the most widely practiced devotions throughout the world.

 

👉 But how did this devotion, centered on the Passion of Christ, begin? 

👉 And how did it spread across the globe? Let us explore its history and spiritual significance.

✦ Early Historical Origins

The Way of the Cross – History and Devotion


In AD 313, the Roman Emperor Constantine officially recognized Christianity. Following this, in AD 335, the Church of the Holy Sepulchre was constructed at the site where Jesus Christ was believed to have been buried.

This marked a turning point in Christian history. Believers were now able to express their faith openly, and pilgrimages to the holy places of Jerusalem—especially to the tomb of Jesus—became increasingly common.

Saint Jerome, in his writings, records that large crowds of Christians journeyed together to venerate the holy tomb. Similarly, between AD 381 and 384, a Christian pilgrim named Egeria documented her pilgrimage experiences in Jerusalem and its surrounding regions.

In her accounts, she vividly describes how the faithful walked the path Jesus took toward Calvary, stopping along the way to meditate on His sufferings and to pray in spiritual union with Him.

✦ From the Path of Suffering to the Way of the Cross

The route along which Jesus carried His cross toward Mount Calvary gradually became known as the Way of the Cross. Christians began to reflect prayerfully on each significant event that occurred along this path, transforming the physical journey into a devotional practice.

Although Jerusalem was completely destroyed by the Romans in AD 70, knowledge of the path Jesus walked was preserved through oral tradition. As a result, pilgrims continued to retrace this sacred route for centuries.

✦ The Role of the Franciscans

After the 7th century, Jerusalem came under Islamic rule, making Christian pilgrimages increasingly difficult and dangerous. Nevertheless, the Saint Francis of Assisi–founded Franciscan Order played a crucial role in preserving and promoting devotion to the Way of the Cross.

In AD 1342, the responsibility for safeguarding the holy places in Jerusalem was formally entrusted to the Franciscans. This helped ensure the continued development and spread of the Way of the Cross devotion.

✦ The Development of the “Stations”

The Way of the Cross – History and Devotion

In the 15th century, an English pilgrim named William Wey visited Jerusalem and referred to the route Jesus walked as the Via Dolorosa (“Way of Sorrow”). He described the events of Christ’s Passion as distinct stopping points, or stations—a concept that laid the foundation for the structure we know today.

During this period, the number of stations varied widely: some traditions had 12 stations, while others included as many as 37.

✦ The 14 Stations – Scripture and Tradition

The 14 Stations of the Way of the Cross as we know them today are drawn from both Sacred Scripture and Sacred Tradition. Certain events—such as

  1. Veronica wiping the face of Jesus, and
  2. Jesus falling three times

are not explicitly recorded in the Bible, but they are rooted in longstanding Church tradition. The remaining stations are directly connected to the Gospel accounts of Christ’s Passion.

✦ Guidance of the Popes

  1. 1686 – Pope Innocent XI granted permission for Stations of the Cross to be erected inside churches
  2. 1731 – The Church officially fixed the number of stations at 14
  3. 1742 – Pope Benedict XIV mandated that all churches should follow the same standardized form of the 14 stations

Later, Saint Leonard of Port Maurice played a decisive role in spreading this devotion by establishing the Way of the Cross in more than 500 churches throughout Italy alone.

✦ A Global Symbol of Faith

At the Colosseum in Rome, the public celebration of the Way of the Cross on Good Friday gained worldwide attention through Pope John Paul II. This annual observance helped present the devotion to a global audience and reaffirmed its spiritual power in the modern world.

✦ Concluding Reflection

The true purpose of the Way of the Cross is not merely to recall the sufferings of Christ, but to walk with Him, to share in His pain, and to unite our own struggles with His saving sacrifice.

Therefore, each time we participate in the Way of the Cross, let us do so not as a routine devotion, but with the deep awareness that we are sharing in the suffering of our Lord—with reverence, devotion, and renewed hope in the promise of the Resurrection. 🙏

Way of the Cross History in Tamil -திருச்சிலுவை பாதை – வரலாறும் பக்தியும்

திருச்சிலுவை பாதை – வரலாறும் பக்தியும்
Way of the Cross History in Tamil -திருச்சிலுவை பாதை – வரலாறும் பக்தியும்

✦ திருச்சிலுவை பாதை – முன்னுரை

கத்தோலிக்க திருச்சபையின் எந்த ஒரு ஆலயத்திற்குள் நுழைந்தாலும்,


நற்கருணை பேழை, பாடுபட்ட கிறிஸ்துவின் திருவுருவச் சுருபம், கன்னி மரியாவின் திருவுருவம் ஆகியவற்றோடு, தவறாமல் இடம்பெறும் ஒரு முக்கிய ஆன்மீக அம்சம் திருச்சிலுவை பாதையின் 14 நிலைகள் ஆகும்.

குறிப்பாக, கிறிஸ்துவின் இறப்பு மற்றும் உயிர்ப்பை நினைவுகூர்ந்து நம்மைத் தயாரிக்கும் தவக்காலத்தில், இயேசு கிறிஸ்துவின் பாடுகளை தியானித்து, அவரின் வேதனைப் பாதையில் ஆன்மீகமாக இணைந்து பயணிக்கச் செய்யும் இந்த திருச்சிலுவை பாதை பக்தி முயற்சி, உலகளவில் மிகவும் பிரபலமான வழிபாடாக விளங்குகிறது.

அப்படியானால், 

👉 கிறிஸ்துவின் பாடுகளை மையமாகக் கொண்ட இந்த திருச்சிலுவை வழிபாடு எவ்வாறு தொடங்கியது? 

👉 எப்படி அது உலகம் முழுவதும் பரவியது? இந்த கேள்விகளுக்கான விடையையே இங்கு பார்க்கப் போகிறோம்.

✦ திருச்சிலுவை பாதையின் 14 நிலைகள்

  1. இயேசு மரணதண்டனைக்கு தீர்ப்பளிக்கப்படுகிறார்
  2. இயேசு சிலுவையைச் சுமக்கிறார்
  3. இயேசு முதல் முறை கீழே விழுகிறார்
  4. இயேசு தமது அன்னை மரியாவை சந்திக்கிறார்
  5. சைமோன் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவுகிறார்
  6. வெரோனிக்கா இயேசுவின் முகத்தைத் துடைக்கிறார்
  7. இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்
  8. எருசலேம் மகளிரை இயேசு சந்திக்கிறார்
  9. இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்
  10. இயேசுவின் ஆடைகள் கழற்றப்படுகின்றன
  11. இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்
  12. இயேசு சிலுவையில் உயிர் துறக்கிறார்
  13. இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படுகிறது
  14. இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்

✦ தொடக்க கால வரலாறு

Way of the Cross History in Tamil -திருச்சிலுவை பாதை – வரலாறும் பக்தியும்


தகிபி 313 ஆம் ஆண்டு, ரோமப் பேரரசர் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவத்தை அங்கீகரிக்கப்பட்ட மதமாக அறிவித்தார். இதன் பின்னர், கிபி 335 ஆம் ஆண்டு, இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திருத்தூய கல்லறை தேவாலயம் கட்டப்பட்டது.

இந்த நிகழ்வு, கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படையாக வெளிப்படுத்தும் புதிய காலகட்டத்தை உருவாக்கியது. இயேசுவின் புனித கல்லறையை நோக்கி திருப்பயணம் மேற்கொள்ளும் பழக்கம் இதன் மூலம் உருவானது.

புனித ஜெரோம் தனது எழுத்துகளில், மக்கள் பெருந்திரளாக இயேசுவின் கல்லறையை நோக்கி திருப்பயணம் செய்ததாக குறிப்பிடுகிறார். அதேபோல், கிபி 381–384 காலப்பகுதியில், ஏஜேரியா என்ற கிறிஸ்தவ யாத்திரிகை, ஜெருசலேம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மேற்கொண்ட திருப்பயண அனுபவங்களை எழுத்தாக பதிவு செய்துள்ளார்.

அவர், இயேசு கல்வாரி மலையை நோக்கி நடந்த பாதையில், மக்கள் கிறிஸ்துவின் வேதனைகளை தியானித்து, அவரோடு இணைந்து நடந்த விதத்தை மிக அழகாக விவரிக்கிறார்.

✦ வேதனைப் பாதையிலிருந்து திருச்சிலுவை பாதைை

இயேசு கிறிஸ்து, கல்வாரி மலையை நோக்கி சிலுவையைச் சுமந்து நடந்த அந்தப் பாதையே, பின்னாளில் திருச்சிலுவை பாதை என்ற பக்தி வழிபாட்டின் அடையாளமாக மாறியது. அந்தப் பாதையில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வையும் நினைத்து, தியானித்து வழிபடத் தொடங்கினர்.

கிபி 70 ஆம் ஆண்டு, ரோமையர்கள் ஜெருசலேம் நகரத்தை முற்றிலும் அழித்தபோதிலும், இயேசு நடந்த பாதை குறித்த தகவல்கள் வாய்மொழி மரபுகள் மூலம் பாதுகாக்கப்பட்டன. இதனால், கிறிஸ்தவர்கள் தங்கள் திருப்பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டனர்..

✦ பிரான்சிஸ்கன் துறவிகளின் பங்கு

கிபி 7ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, ஜெருசலேம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்ததால், அங்கு கிறிஸ்தவர்கள் திருப்பயணம் மேற்கொள்வது ஆபத்தானதாக மாறியது. இருந்தாலும், புனித பிரான்சிஸ் நிறுவிய பிரான்சிஸ்கன் துறவியர்கள், இந்த திருச்சிலுவை பாதை வழிபாட்டை உயிர்ப்புடன் பாதுகாத்தனர்.

கிபி 1342 ஆம் ஆண்டு, ஜெருசலேமிலுள்ள புனித இடங்களை பராமரிக்கும் பொறுப்பு பிரான்சிஸ்கன் துறவியர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம், திருச்சிலுவை பாதை வழிபாடு மேலும் வளர்ச்சி பெற்றது.

✦ “நிலைகள்” என்ற அமைப்பு

Way of the Cross History in Tamil -திருச்சிலுவை பாதை – வரலாறும் பக்தியும்

15ஆம் நூற்றாண்டில், ஆங்கில யாத்திரிகரான வில்லியம் வே, ஜெருசலேமில் இயேசு நடந்த பாதையை “Via Dolorosa” என்று அழைத்து, ஒவ்வொரு நிகழ்வையும் தனித்தனி நிலைகளாக வகுத்தார். இதுவே இன்றைய திருச்சிலுவை பாதையின் அமைப்புக்கான அடித்தளமாக அமைந்தது.

அந்த காலகட்டத்தில், சில இடங்களில் 12 நிலைகளாகவும், சில இடங்களில் 37 நிலைகளாகவும் இந்த எண்ணிக்கை மாறுபட்டது.

✦ 14 நிலைகள் – விவிலியமும் மரபும்

திருச்சிலுவை பாதையின் 14 நிலைகள், விவிலிய ஆதாரங்களும் திருச்சபையின் மரபு வழி செய்திகளும் இணைந்தே உருவானவை.

  1. வெரோனிக்கா இயேசுவின் முகத்தைத் துடைத்தது
  2. இயேசு மூன்று முறை கீழே விழுந்தது

இந்த நிகழ்வுகள் நேரடியாக விவிலியத்தில் இடம்பெறாவிட்டாலும், திருச்சபையின் மரபு வழி செய்திகளின் அடிப்படையில் நிலைகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர, மற்ற அனைத்து நிலைகளும் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை விவரிக்கும் விவிலியப் பின்னணியிலிருந்து பெறப்பட்டவையே.

✦ திருத்தந்தையர்களின் வழிகாட்டுதல்

திருச்சிலுவை பாதையின் 14 நிலைகள், விவிலிய ஆதாரங்களும் திருச்சபையின் மரபு வழி செய்திகளும் இணைந்தே உருவானவை.

  1. 1686 – இனோசென்ட் பதினொன்றாம் ஆலயங்களில் திருச்சிலுவை பாதை அமைக்க அனுமதி வழங்கினார்
  2. 1731 – திருச்சபை அதிகாரப்பூர்வமாக 14 நிலைகள் என நிர்ணயித்ததுு
  3. 1742 – பெனடிக்ட் பதினான்காம் அனைத்து ஆலயங்களிலும் ஒரே வடிவில் 14 நிலைகள் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்

பின்னர், புனித லியோனார்ட் ஆஃப் போர்டோ மோரீசியோ, இத்தாலியில் மட்டும் 500க்கும் மேற்பட்ட ஆலயங்களில் திருச்சிலுவை பாதைகளை நிறுவி, இந்த பக்தியை உலகளவில் பரப்பினார்.

✦ உலகளாவிய அடையாளம்

ரோமில் உள்ள கொலோசியம் மன்றத்தில், புனித வெள்ளியன்று திருச்சிலுவை பாதை வழிபாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியதன் மூலம், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், இந்த பக்தியை உலக அரங்கில் பெரும் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

✦ நிறைவுச் சிந்தனை

கிறிஸ்துவின் பாடுகளை தியானித்து, அவரோடு இணைந்து பயணித்து, அவரின் வேதனைகளை நம் இதயத்தில் பகிர்ந்து கொள்வதே திருச்சிலுவை பாதையின் உண்மையான ஆன்மீக நோக்கம்.

எனவே, நாம் திருச்சிலுவை பாதையில் பங்கேற்கும் ஒவ்வொரு முறையும், அதை ஒரு சாதாரண வழிபாடாக மட்டும் அல்ல, இறைவனின் வேதனையில் நாமும் பங்கெடுக்கிறோம் என்ற ஆழ்ந்த உணர்வோடு, மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் கலந்து கொள்வோம். 🙏

Friday, February 13, 2026

Ordinary Sunday 6th Week 2026

FEB
15
2026

பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு

YEAR
A

✦ திருப்பலி முன்னுரை

இறைச்சமுகமாக இறைவனை ஆராதிக்க இவ்விறைப்பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! இறைவனோடு நாம் கொண்டுள்ள உறவானது, நம்முடைய பிறரன்புச் செயல்களின் மூலம் வெளிப்பட வேண்டுமென்ற மைய நோக்கோடு நம் தாயாம் திருஅவை, பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறைச் சிறப்பிக்க நம்மை அன்புடன் அழைக்கின்றது. கிறிஸ்து இறைப்பணியை தனித்து ஆற்ற வல்லமை பெற்றிருந்தும், தன்னுடைய இறைபணிக்காக சீடர்களைத் தேர்ந்து கொண்டார். துன்பத்தின் வேளையில் இயேசுவின் சீடர்கள் கிறிஸ்துவை மறுதலித்த பொழுதும், தன்னுடைய சீடர்களை கிறிஸ்து ஒரு பொழுதும் மறுதலித்ததில்லை. எனெனில், கிறிஸ்து இறைவனுக்கும் மனிதருக்கும் இடையே பாலமாக இருந்து, வெளிவேடமற்ற தூய்மையான உள்ளங்களை கொண்ட இறைச் சமுகத்தை கட்டியெழுப்புவதை தன்னுடைய நோக்கமாக கருதினார்.

கிறிஸ்துவின் சீடர்களாகிய நாமும் கிறிஸ்துவின் மேன்மைமிக்க மதிப்பீடுகளை கடைபிடிக்க அழைக்கப்படுகின்றோம். கிறிஸ்துவின் சட்டங்களும், மதிப்பீடுகளும் புறக்காரணிகளைச் சார்ந்தவை அல்ல. அவை நம்முடைய அகத்தை மையப்படுத்துகின்றன. இப்படி, கிறிஸ்துவின் கட்டளைகள் நம்முடைய உள்ளத்தை சார்ந்தது என்று நாம் உணரும் பொழுது கிறஸ்துவின் ஞானம் நம்மை ஆட்கொண்டு, தீயதை விலக்கி நன்மையின் பாதையில் நம்மை அழைத்துச் செல்லும். எனவே, நம்முடைய உள்ளத்தை நம் அன்பின் செயல்கள் மூலம் தூய்மை செய்வோம். மேலும், நம் புலன்களால் செய்வது மட்டும் பாவமல்ல, நம் உள்ளமே பாவத்தின் தொடக்கப்புள்ளி என்பதை உணர்ந்து அகமாற்றத்திற்கு அழைப்புவிடுக்கும் இந்த சகோதரத்துவத்தின் திருவிருந்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (சீராக் 15: 15-20)

இறைவன் கட்டாயத்தின் பெயரால் நம்மை நன்மையின் பாதையில் நடத்துவதில்லை. மாறாக, நாம் முழுமனதுடன் உண்மையின் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று இறைவன் விரும்புகின்றார். அதற்கு ஏதுவாக, இறைவன் நம்முன் நன்மையையும் தீமையையும் வைத்துள்ளார். மேலும், தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும் நமக்களித்துள்ளார். எனவே, நாம் நம்முடைய சுய விருப்பத்துடன் இறைவனை தேர்ந்தெடுப்பதன் அடையளமாக நன்மையின் பாதையை காட்டும் இம்முதல் வாசகத்திற்கு பக்தியுடன் செவி கொடுப்போம்.

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

இரண்டாம் வாசக முன்னுரை (கொரி 2: 6-10)

ஞானம் என்பது கடவுளிடமிருந்து பிறக்கின்றது. இவ்வுலக அறிவால், நாம் இறைவனை அடைவது அத்தனை எளிதல்ல. எனவே, இறைவன் அளிக்கும் ஞானத்தை பெற நாம் முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சியின் முதல் படியாக தளர்வற்ற இறை நம்பிக்கை வேண்டுமென்று பவுல் அடிகளார் வலியுறுத்துகின்றார். நம்மை படைத்து காத்தும் வரும் இறைவனை அறிந்து கொள்வதற்கு உதவும் ஞானத்தை நமதாக்கி கொள்வோம். அதற்கான வழிகனை கற்பிக்கும் இவ்விரண்டாம் வாகத்திற்கு கிறிஸ்துவின் நம்பிக்கையாளர்கள் என்ற மனவுறுதியுடன் செவி கொடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி - மத் 11: 25 அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

✦ மன்றாட்டுகள்

  1. நேர்மையை நிலைநாட்ட திரு அவையை ஏற்படுத்திய எம் இறைவா! உம் திரு அவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் இறை நெறிகளைக் குறைவின்றி கற்று, உண்மைக்குச் சான்று பகர்ந்திட வேண்டுமென்று மன்றாடுகின்றோம். மேலும், சகோதரத்துவத்தை முன்னிறுத்தி சமமான சமுதாயத்தை கட்டியெழுப்ப தேவையான அருள்வரங்களைத் எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. நீதியின் பாதையில் பயணிக்க அழைக்கும் எம் இறைவா! எம் நாட்டு தலைவர்களும், மக்களும் நீதியின் பாதையில் நடந்திட அருள்புரியும்! நாங்கள் அனைவரும் எங்கள் சனநாயக கடமையை சரிவர ஆற்றவும், எங்களுடைய வாக்குகளை பணத்திற்காக செலுத்தாமல், நல்ல மனம் கொண்ட மனிதர்களுக்கு செலுத்தி, நல்ல தலைவர்களைப் பெற்றிட தேவையான ஞானத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. காயப்பட்டவர்களை தேடி மீட்கும் எம் இறைவா! உரிமைகளுக்காகவும், நேர்மைக்காகவும் மற்றும் தங்களின் கடமையின் பொருட்டும் உயிர் துறந்த அனைத்து ஆன்மாக்களுக்காகவும் மன்றாடுகின்றோம். நேர்மையை தங்களின் வாழ்வின் பாதையாக கொண்டு வாழ்ந்த இவர்களை நாங்கள் என்றும் நினைவு கூர்ந்து, அவர்களைப் போல நேரிய வழியில் வாழ்ந்திட தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்
  4. அன்பை உலகில் விதைத்த எம் இறைவா! எங்களுடைய குடும்பங்களில் கிறிஸ்துவ விழுமியங்களைப் பின்பற்றி, ஒருவர் மற்றவருக்கு துணையாக வாழ்ந்திடவும், தளர்வுறும் நேரங்களிலும், உறவுகளில் விரிசல் ஏற்படும் வேளைகளிலும் அமைதி காத்து அன்பினை அடிப்படையாக வைத்து, அனைத்து இன்னல்களயும் ஒற்றுமையுடன் வென்று சமதானத்தில் என்று நிலைத்திட வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்
  5. எங்கள் குடும்பங்களையும் , சமுதாயத்தையும் தங்கள் கரங்களில் ஏந்தவுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்காக மன்றாடுகின்றோம். திரைக்கவர்ச்சியையும் சமுக ஊடக ஈர்ப்பையும் தவிர்த்து தங்களுடைய நேரத்தை நல்ல முறையில் செலவழிக்கும் இவர்களுக்கு நீரே துணையாக இருந்து, அவர்களுடைய வாழ்வின் வெற்றியின் கனியினை அடைந்திட உதவ வேண்டுமென்றும், அவர்கள் மூலம் எம் சமுதாயம் மேம்படைய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.


Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Ordinary 6th Week | Iraivelicham Mass Introduction | Sunday 6th Week Mass Introduction |



Friday, February 6, 2026

Sunday 5th Week Mass Introdcution - A

FEB
08
2026

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு

YEAR
A

✦ திருப்பலி முன்னுரை

இறைவனின் திருவிருந்தில் நம்பிக்கையுடன் பங்கேற்ற வந்துள்ள சகோதர, சகோதரிகளே! பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறை சிறப்பிக்கும், இந்நாளில் இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள் நம்முடைய நம்பிக்கையையும், நன்மைத்தன்மையையும் செயல்களில் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்துகின்றன. இறைவன் தம்முடைய அன்பை, இவ்வுலகை படைத்து அவற்றை மனிதனுடைய ஆளகைக்கு உட்படுத்தியதன் வாயிலாக தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். இறைவாக்கினர்களும் திருத்தூதர்களும் இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து இறைவார்த்தையை அறிவித்ததன் வாயிலாக தங்களுடைய நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுத்தனர். இவர்களைப் போல நம்முடைய நம்பிக்கையை செயல்களின் வயிலாக வெளிபடுத்த வேண்டும்.

இறைவன் நமக்களித்துள்ள பரிசுகளை நம்முடைய சுயநலத்திற்காக மட்டும் பயன்படுத்தும் பொழுது நாம் பாவத்தில் விழுகின்றோம். நம்முடைய திறமைகளையும், செல்வத்தையும் நமக்காக மட்டும் பயன்படுத்துவதற்கு பதிலாக இறை மகிமைக்காக பயன்படுத்தும் பொழுது நம்முடைய நம்பிக்கை முழு வடிவம் பெறும். நம்முடைய விசுவாசத்தை வார்த்தைகளாகவும், செயல்களாகவும் பிறருக்கு பகிர்தளிப்போம். திருப்பலியில் பங்கேற்று, இறைவனின் அருளைப் பெற்ற நாம் , அந்த இறையாசிரை பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கான வழிகளை நமக்கு கற்பிக்கும் படி இறைவனிடம் மன்றாடுவோம். நம்முடைய தேவைகளை நன்கறிந்த இறைவன், பிறருடைய தேவைகள் அறிந்துகொள்ளும் நல்ல மனதை நமக்கு நல்கிட வேண்டுமென்றும் அதன் மூலம் இவ்வுலகிற்கு உப்பாகவும், ஒளியாகவும் விளங்கிட வேண்டுமென்றும் நம்பிக்கையுடன் இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (எசாயா 58: 7-10)

வெளிப்புற ஆடம்பர காணிக்கைகளை இறைவன் விரும்புவதில்லை. பசித்தவர்களுக்கு உணவளிப்பதும், வீடில்லாதவர்களுக்கு உறைவிடம் வழங்குவதும், உடையற்றவர்களுக்கு உடை கொடுப்பதுமே இறைவன் விரும்பும் உண்மையான நோன்பு என்பதை இறைவாக்கினர் எசாயா தெளிவாக எடுத்துரைக்கிறார். இந்த உண்மையான நோன்பின் ஆழமான பொருளை வெளிப்படுத்தும் இன்றைய முதல் வாசகத்தை கிறிஸ்துவின் ஒளியாக விளங்க வேண்டுமென்ற ஆர்வத்துடன் கவனிப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (கொரிந்தியர் 2: 1-5)

நமது நம்பிக்கையின் அடித்தளமானது நம்முடைய ஞானத்தில் அல்ல, கடவுளின் வல்லமையில் உள்ளது. இதை மையமாகக் கொண்டு தூய பவுலடியார் தனது பணிவாழ்வை அமைத்தார். அவர் அறிவித்த நற்செய்தி மனித திறமையால் அல்ல, தூய ஆவியாரின் வல்லமையான செயலால் நிகழ்ந்தது என்பதை உறுதியாக எடுத்துரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகமான திருத்தூதர் பவுலடியாரின் எழுத்துகளை நாம் கவனமுடன் வாசிக்க கேட்போம்.

✦ மன்றாட்டுகள்

  1. அன்பை ஆணிவேராக வைத்து நீர் உருவாக்கிய உம் திரு அவைக்காக மன்றாடுகின்றோம். இறைவாக்கினர்களும், மெசியாவும் எவ்வித தொய்வும் இன்றி இறைப்பணி ஆற்றியது போல உம் திரு அவையின் தலைவர்களும், உறுப்பினர்களும் தளராது இறைப்பணி ஆற்றி, தங்களுடைய இறைநம்பிக்கையை செயல்களின் மூலம் வெளிப்படுத்தி இவ்வுலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
  2. நல்ல மேய்ப்பனே எம் இறைவா! இவ்வுலகில் பல்வேறு சித்தாந்தங்களின் அடிப்படையில் மக்களை ஆளும் தலைவர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் தங்களைப் பின்பற்றும் மக்களை நல்ல வழியில் நடத்திடவும், தங்களுடைய வாழ்வின் சுயநல எண்ணங்களுக்காக மக்களை பயன்படுத்தாமல் இருக்கவும், மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்கவும் அவரகளுக்கு தேவையான நல்ல மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. நலம் தரும் நற்கருணை நாயகனே எம் இறைவா! இவ்வுலகில் நோய்களாலும், போர்களாலும் மற்றும் கொடிய இனவாதத்தாலும் பாதிப்படைந்து தங்களுடைய அன்றாட வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் மன்றாடுகிறோம். நீரே அவர்களை உம்முடைய பிள்ளைகளாக கருதி அவர்களுக்கு அறுதலாக இருக்க வேண்டுமென்றும், எங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்திட வேண்டிய நல்ல மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.
  4. உறவுகளை உன்னத விருந்தின் மூலம் கட்டி எழுப்பும் எம் அன்பு இறைவா! திருப்பலியில் பங்கேற்று ஒரே பாத்திரத்தில் இருந்து நற்கருணை உட்கொள்ளும் நாங்கள் அனைவரும் ஒரே மக்கள் என்ற உணர்வைப் பெற்று எவ்வித வேறுபாடு இன்றி ஒற்றுமையில் நிலைத்திருக்கவும், எங்களுடைய ஆன்மீக வாழ்வு, அன்றாட வாழ்வில் வெளிப்பட வேண்டிய நிறை வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. நம்பிக்கையை வலுப்படுத்தும் எம் இறைவா! இறை வேண்டலில் ஈடுபட்டு இறைநம்பிக்கையில் வலுபெற இறைபீடம் சூழ்ந்துள்ள எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். எங்களுடைய குறைகளை ஏற்று, இறைவழியில் நடந்து, இறைவனின் வல்லமையை பெற எங்களுக்கு தேவையான அருளைத் தந்தருளும். மேலும், எங்களுடைய நம்பிக்கை எங்களுடைய செயல்களில் வெளிப்படுத்திட வேண்டிய வழிகளை எங்களுக்கு கற்பித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.


Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Ordinary 4th Week | Iraivelicham Mass Introduction



Friday, January 30, 2026

Ordinary Sunday 4th Week

FEB
01
2026

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு

YEAR
A

✦ திருப்பலி முன்னுரை

இறையாசிர் பெற இவ்விறைப் பீடம் சூழ்ந்துள்ள சகோதர, சகோதரிகளே! நம்முடைய வலிமையிலும், வலிகளிலிலும்; கிறிஸ்துவின் வல்லமை முழமையாக வெளிப்படுகின்றது. அனைத்து விதமான வரங்களையும் இறைவன் நமக்களித்து, நிலையான பேரின்பத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றார். இருப்பினும், நாம் நம்முடைய மனித பலவீனங்களால்; அப்பாதையிலிருந்து தவறும் பொழுது, காணாமல் போன ஆடுகளை ஆயன் தேடி மீட்பது போல கிறிஸ்து நம்மை மீட்க, நம்மை நோக்கி வருகின்றார். அப்படி நம் மீட்புக்காக நம்மை அணுகிவரும் இறைவனை எளிமையின் இதயம் கொண்டவராக, ஏழ்ழையின் உள்ளம் கொண்டவராக மனமுவந்து ஏற்க வேண்டும்.

ஏனெனில், இவ்வுலகு எவ்வற்றையெல்லாம் வெறுமையெனக் கருதி விலக்குகினறதோ? அவற்றையெல்லாம் இறைவன் தன் அன்பால் அரவணைத்து தன் பதம் ஈர்த்துக்கொள்கின்றார். எனவே, நாம் இவ்வுலகத்தால் நம்முடைய நற்செயல்களின் பொருட்டும், ஏழ்மையின்; பொருட்டும் வெறுக்கப்பட்டாலும் இறைவனின் அசீரும், துணையும் நமக்கு என்றுமிருக்கும் என்ற நம்பிக்கையுடன் இறைவனின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

மேலும், சாதி, பணம், இனம் மற்றும் பதவி போன்ற இவ்வுலக அளவுகோல்களை தகர் தெறிந்துவிட்டு, எளிமை, ஏழ்மை மற்றும் அன்பு என்ற விண்ணக திறவுகோல்களின் துணையுடன் இறைவனின் நிழலில் என்றும் இருப்போம் என்ற நம்பிக்கையுடன் எளியவர்களின் இவ்விறைக் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (செப்பனியா 2: 3, 3: 12-13)

வாழ்வில் எத்தனை இன்னல்களை சந்தித்தாலும், இறைவனின் மீது நம்பிக்கை இழக்காமல், இறைவனின் வார்த்தையின் படி நடப்பவர்களே உண்மையான விசுவாசிகளாவர். பல்வேறு இன்னல்களை சந்தித்த இஸ்ரேயல் மக்களினம், பலமுறை இறைவன் மறுதலித்து, இறைவனின் பாதையிலிருந்து விலகிச் சென்றது. இந்த இஸ்ரேயல் மக்களைப் போல் அல்லாமல், எளியவரின் உள்ளத்துடன், நேர்மையுடன் வாழ அழைக்கும் இறைவாக்கினர் செப்பனியாவின் வார்த்தைகளுக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை ( கொரி 1: 10-13, 17)

இவ்வுலகின் அளவுகோலும், இறைவனும் அளவுகோலும் முற்றிலும் மாறுபட்டவை. இறைவனின் படைப்பில் தங்களுடைய இயலாமையை ஓப்புக்கொள்பவர்கள் இறைவனின் துணை வேண்டி அதை தங்களுடையதாக்கிக் கொள்கின்றனர். ஞானம், அறிவு மற்றும் வலிமை என அனைத்தையும் அடைந்ததாக கருதுபவர்கள் இறைவனை புறக்கணிப்பதால், வீழ்ச்சி அடைகின்றனர். எனவே, எளிமையின் உள்ளதவராக இவைனில் பெருமை பாரட்ட அழைப்புவிடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

✦ மன்றாட்டுகள்

  1. நிலைவாழ்வை எமக்களிக்க வந்த எம் அன்பு இறைவா! விண்ணகத்தை நாங்கள் உடைமையாக்கி கொள்ள நீர் கற்ப்பித்த வழிகளை அன்றாடும் கடைப்பிடிக்கும் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். இயேசு கற்றுத் தந்த வாழ்வின் படிப்பினைகளை நாங்கள் அனைவரும் சரியாக பின்பற்றிட தேவையான இறை ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. உண்மைக்கு உயிர் கொடுக்கும் எம் இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்களும், ஆட்சியாளர்களும் தங்களின் அதிகாரத்தையும், அரசின் செல்வங்களை தங்களுடைய சுய இலாபத்திற்காக பயன்படுத்தாமல், மக்களுக்கு பயன்படும் நல்ல திட்டங்களில் செலவழித்திட வேண்டிய நேர்மையான உள்ளத்ததை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. படைப்புகளை ஆளுகை புரியும் எம் இறைவா! உலக வெப்பமயமாதல் மற்றும் கடல் நீர்மட்டத்தின் அளவு அதிகரித்தல் என்ற இருபெரும் பேராபத்தை நோக்கி பயணிக்கும் இவ்வுலகின் இயற்கைச் சூழலைப் பாதுகாத்திட வேண்டுமென்று மன்றாடுகின்றோம். இயற்கையை காப்பதற்கு போதுமான விழிப்புணர்வை தந்து, இயற்கையைக் காப்பாற்றி எங்கள் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்வதற்கான தெளிவை எங்களுக்கு அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அமைதியை அகிலத்திற்கு அளித்த எம் இறைவா! கடும் போராட்டத்தாலும், வன்முறையாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காக மன்றாடுகின்றோம். போரட்டங்களில் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு நீரே ஆறுதலாக இருந்து, அவர்களின் நாட்டிலும், வீட்டிலும் அமைதியை மலரச் செய்ய வேண்டுமென்றும், போரில் ஈடுபடும் தலைவர்களின் மனதில் அமைதியை விதைத்திட வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.
  5. எங்கள் தேவைகளை நன்கறிந்த எம் இறைவா! இந்த திருவழிப்பாட்டில் பங்கு கொள்ளும் அனைவரின் தேவைகளையும் கண்ணோக்கி, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்தருள வேண்டுமென்று மன்றாடுகின்றோம். மேலும் விண்ணக உணவாகிய உம்மை நாங்கள் இறுகப்பற்றிக் கொண்டு , எளியவராக, நேர்மையுடன் தொடர்ந்து வாழ தேவையான வரங்களை தந்தருள உம்மை மன்றாடுகின்றோம்.


Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Ordinary 4th Week | Iraivelicham Mass Introduction



Friday, January 23, 2026

Ordinary 3rd Sunday 2026

🌟 பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 🌟

25-01-2026

✦ திருப்பலி முன்னுரை

கிறிஸ்து ஏற்படுத்திய அன்பின் பாதையில் இவ்வுலகை தொடர்ந்து அழைத்துச் செல்ல, கிறிஸ்து நம்மை சீடர்களாக தேர்ந்து, இறைவனில் தெளிவடையச் செய்கின்றார்.

கிறிஸ்துவுடன் இணைந்து பயணிக்கும் சகோதர, சகோதரிகளே! இன்று நம்முடைய திருஅவை பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறை சிறப்புடன் கொண்டாடுகின்றது. ஒற்றுமையுடன், சகோதரத்துவத்தை மையமாக கொண்டு இயங்கும் திருஅவையின் தோற்றத்திற்கான காரணத்தையும், தோன்றிய விதத்தையும் இன்றைய வாசகங்கள் தெளிவாக விளக்குகின்றன. இறைவனை விட்டு விலகிச் சென்று அடிமையாக வாழ்ந்த மக்களினத்தை, அடிமையின் பிடியிலிருந்து மீட்பதற்காக மீட்பர் தோன்றினார். நம்முடைய எதிர்பார்ப்பின்படி நம்மிடையே தோன்றிய மீட்பர் அதிகாரத்தை தவிர்த்து, அன்பை விதைத்தார். இறையன்பு மற்றும் பிறரன்பு என்ற அன்பின் கட்டளைகள் மூலம் இறையரசை இம்மண்ணுலகில் இன்று வரை தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றார்.

இந்த அன்பின் அழைப்பானது முதலில் திருத்தூதர்களுக்கு அளிக்கப்பட்டது. அவர்களும் கிறிஸ்துவின் அன்பின் கட்டளைகளை கற்று, கிறிஸ்துவில் தங்களைக் கரைத்துக் கொண்டனர். அன்று, அன்பின் பாதையில் சகோதரத்துடனும் சமத்துவத்துடனும் பயணிக்க சீடர்களுக்கு அளிக்கப்பட்ட அதே அழைப்பானது, இன்று நமக்கும் அளிக்கப்படுகின்றது. சாதி, பதவி, பணம், செருக்கும் மற்றும் பேராசை என்ற உலக மாயைகளை களைந்து, கிறிஸ்துவின் இறைக்குடும்பத்தில் நம்மை இணைத்து கொள்வோம். அதற்கு தேவையான இறையுதவிகளை அளிக்கும் இவ்வொற்றுமையின் கொண்டாட்டத்தில் அகமகிழ்வுடன் ஒன்றிணைவோம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (எசாயா 9: 1-4)

இவ்வுலகிற்கு ஒளியைக் கொண்டுவர வல்ல இறைவனின் பாதையில் நாம் நடக்கும் பொழுது, இறைவன் அளிக்கும் அவ்வொளியைக் கண்டு கொள்வோம். அதன் மூலம், துன்பங்களை தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் ஒவ்வொருவரும் இறைவன் அளிக்கும் இன்பத்தின் அகமகிழ்வை நிச்சயம் அடைந்திடுவர் மற்றும் இறைவனின் நிலையான உறவில் இணைந்திடுவர் என்ற நம்பிக்கையை அளிக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை ( கொரி 1: 10-13, 17)

கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டு, கிறிஸ்துவின் பெயரால் கூடிய வாழும் நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். கிறிஸ்து நம்முடைய மனித நிலையை தேர்ந்து கொண்டு, மானிடத்தை உயரத்தினார். எனவே, இறைவனின் பிள்ளைகளாகிய நாம் மானிடத்தின் பண்புகளாகிய சமத்துவத்துவத்தில் மேலோங்கி, நம்மிடத்தில் உள்ள வேறுபாடுகளைக் களைய அழைப்புவிடுக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு இறைக்குடும்பத்தின் உறுப்பினர் என்ற உணர்வுடன் செவிகொடுப்போம்.

✦ மன்றாட்டுகள்

  1. அன்பின் சமுகத்தை கட்டியெழுப்ப வல்ல எம் இறைவா! அகில உலக கிறிஸ்துவர்களின் ஒற்றுமைக்காக இவ்வாரம் முழுவதும் மன்றாடிய நாங்கள் இறைவிருப்பத்தின்படி ஒற்றுமையாக இருக்கவும், எங்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை முன்னிறுத்தாமல் கிறிஸ்துவை மையமாக கொண்டு இறையரசை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் செயல்பட தேவையான அருள்வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. எங்களை வழிநடத்தும் நல் ஆயனே எம் இறைவா! சுயநலமற்ற முன்மதியுடன் செயல்பட கூடிய நல்ல தலைவர்களுக்காக மன்றாடுகின்றோம். வெறுப்பு அரசியல் மூலம் மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி, அரியாமையை விதைக்கும் தலைர்களை தவிர்த்து, பிறநலன நோக்கத்துடன் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க தேவையான அறிவொளியை தந்திட வேண்டுமென்று உம்மை மன்றாகின்றோம்.
  3. அறிவின் ஊற்றே எம் இறைவா! வரும் காலங்களில் தேர்வை சந்திக்க உள்ள எம் பிள்ளைகளுக்காக மன்றாடுகின்றோம். இந்த தேர்வுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேர்வுகளுக்கான தயாரிப்பிற்காக கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், தேர்வுக்கான தயாரிப்புகளை இன்றே தொடங்கிட தேவையான வரங்களையும், அதற்கு உகந்த மனநிலையும், உடல்நிலையும் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  4. துன்புறுவோரின் துணையாளரே எம் இறைவா! உலகில் நிலவும் ஏழ்மை, வறுமை, இல்லாமை என்ற நிலைகள் மாறி இருப்பவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, சேமித்து, அளவுக்கு அதிகமான பொருட்களை, எழைகளோடு பகிர்ந்து கொண்டு உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  5. அரவணைக்கும் எம் இறைவா! இளையோர்கள் தாங்கள் விரும்பிய வாழ்வைக் கிறிஸ்து இயேசுவை அடிக்கல்லாகவும், அவரின் வாழ்வை மூலைக்கல்லாகவும் கொண்டு புதிய சிந்தனைகளோடும், புதிய ஆற்றவோடும் பணிவாழ்வே தங்களின் வாழ்வின் நிலையான வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்ந்திடத் தூய ஆவியின் வழி நடத்துதலைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

                                        

Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Baptism of Lord

Friday, January 16, 2026

Ordinary 2nd week Sunday

🌟 பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு 🌟

18- 01- 2026


✦ திருப்பலி முன்னுரை

திருமுழுக்கினால் கிறிஸ்துவோடு பிணைக்கப்பட்டு கிறிஸ்துவின் சகோதர, சகோதரிகளாக இத்திருக்கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் அன்பு உள்ளங்களே! இன்று நம்முடைய தாயாம் திருஅவை பொதுக்காலத்தின் 2-ஆம் ஞாயிறை சிறப்புடன் கொண்டாட நமக்கு அழைப்புவிடுக்கின்றது. இன்றைய திருவழிபாட்டு வாசங்கள் அனைத்தும் கிறிஸ்து திருமுழக்கின் வழியாக பெற்ற இறையாசிரைப் பற்றி எடுத்துக்கூறி, கிறிஸ்துவில் பற்றுகொண்ட நம்பிக்கையாளர்களாக நம்மை வாழ அழைக்கின்றது.

கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற பொழுது தூய ஆவியானவர் புறாவின் வடிவில் கிறிஸ்துவின் மீது இறங்கி, கிறிஸ்து மேற்கொள்ளவிருந்த இறையரசின் பணிகளுக்கு பலமளித்து, அலகையின் சோதனைகளை வெற்றி கொள்ள திடமளித்தார். கிறிஸ்துவின் சீடர்களாக திருமுழுக்கினால் புதுபிறப்பினை பெற்ற நாமும் கிறிஸ்துவை போல தூய ஆவியாரின் துணைகொண்டு வாழ்வதன் வழியாக கிறிஸ்து அளிக்கும் மீட்பை நமதாக்கி கொள்ள முடியும். அந்த மீட்பின் வழியாகவே, இறைவனின் அன்பில் என்றும் நிலைத்து நிற்கும் இறைப்பிள்ளைகளாவும், கிறிஸ்துவின் சகோதர, சகோதரிகளே வாழ நம்மையே நாம் தகுதிப்படுத்திக் கொள்ள முடியும். எனவே, இறைவனின் பெருமகிழ்வில் பங்குகொள்ள நம்மை ஆன்ம, உடல் மற்றும் மனரீதியாக தயார்படுத்தும் இந்த தாயரிப்பின் கொண்டாட்டத்தில் பெருமகிழ்வுடன் பங்கெடுத்து கிறிஸ்துவில் அகமகிழ இத்திருப்பலியில் இணைவோம்! இறையருளைப் பகிர்வோம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (எசாயா 42: 1-4,6-7)

கடவுள் நம்மை தம்முடைய பிள்ளைகளாக கருதுகின்றார். தம்முடைய அன்பின் அடையளமாக அவர் நம்மைத் தேர்ந்து கொண்டார். நாம் இறைனை விட்டு விலகிச் செல்லும் வேளைகளில், தன்னுடைய இறைவாக்கினர்கள் வழியாக வாக்குரைத்து நம்மை நல் வழிப்படுத்துகின்றார். எவ்வித எதிர்பார்ப்புமின்றி நம்மை மீ;ட்க வல்ல இறைவனின் அன்பின் அரவணைப்பை உணர்த்தும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 10: 34-38)

மனிதராய் பிறந்த இயேசு கிறிஸ்து இவ்வுலக மக்கள் அனைவருக்கும் மிட்பளித்தார். இறைவன் கிறிஸ்துவின் வழியாக நம் அனைவரையும் ஒரே குலத்தின் மக்களாக ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தார். அப்படி, ஓரின மக்களாக வாழும் நமக்கு பவுல் அடிகளார் வழங்கும் ஆசி பெற்ற வார்த்தைகளை உள்ளடக்கிய இவ்விரண்டாம் வாசகத்திற்கு செவிகொடுத்து இறைவனின் ஆசிரை நமதாக்குவோம்.

✦ மன்றாட்டுகள்

  1. அன்பை அடித்தளமாகக் கொண்டு திருஅவையை கட்டி எழுப்பிய எம் அன்பு இறைவா! திரு அவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் இறையன்பையும், பிறரன்பையும் எவ்வித குறையும் இன்றி கடைபிடிக்க தேவையான அருள் வரங்களை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்றும், கிறிஸ்துவின் பிள்ளைகளாக என்றும வாழ்ந்திட வரமளித்திட வேண்டுமென்றும் உண்மை மன்றாடுகின்றோம்.
  2. உலகுக்கு உரு கொடுத்த எம் இறைவா! இவ்வுலகில் மக்களை வழிநடத்தும் அனைத்து தலைவர்களையும் நிறைவாக ஆசீர்வதியும். இவர்கள் அனைவரும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து, மக்கள் மீது அன்பு கொண்டு, அவர்களை அன்பின் பாதையில் நடத்திட வேண்டிய வரங்களை தந்து, சுயநலமற்ற பிறநல சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  3. ஆதரவற்றோருக்கு ஆதரவே எம் இறைவா! முழுமையான அன்பும், முறையான கவனிப்பும் இன்றி தவிக்கும் அனைத்து முதியோர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இவர்களுக்கு தேவையான அன்பையும் அரவணைப்பையும் தரவேண்டிய பொறுப்புணர்வை எங்களுக்கு தந்தருளும். எங்கள் வீட்டில் உள்ள முதியவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அவர்களை அன்புடன் நடத்திட வேண்டிய அருள் வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அறிவின் ஒளியே எம் இறைவா! எம் நாட்டின் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்களுடைய வாழ்வில் அடைய வேண்டிய குறிக்கோள்களை நோக்கி பயணித்திட வேண்டிய அறிவொளியை தந்தருளும். விலைமதிப்பற்ற தங்களுடைய நேரத்தை பொழுதுபோக்குகளில் செலவழிக்கமால் தங்கள் வாழ்க்கைக்கு உதவும் அறிவுசார் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய அனைத்து வரங்களையும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. அழியும் செல்வமான இம்மண்ணக செல்வத்தின் மீது நாட்டம் கொள்ளாமல், நிலையான செல்வமாகிய விண்ணகச் செல்வத்தை உடைமையாக்கி கொள்வதற்கான வழியாகிய அன்பை நாங்கள் இறுகி பற்றி கொள்ளவும். பிறர அன்பு பணிகளில் அதிகமாக ஈடுபடவும் வேண்டிய தாராள மனதை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Baptism of Lord

Saturday, January 10, 2026

Baptism of Lord ஆண்டவரின் திருமுழுக்கு 2026

🌟 ஆண்டவரின் திருமுழுக்கு 🌟

04-01-2026


✦ திருப்பலி முன்னுரை

திருமுழுக்கின் வாயிலாக நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு நாம் இறைவனின் மாசற்ற பிள்ளைகளாகின்றோம். நாம் பெற்ற திருமுழுக்கின் வழியாக நாம் தேர்ந்தெடுத்த பாதையான கிறிஸ்துவின் பாதையில் பயணிக்கும் பொழுது கிறிஸ்து அருளும் தூய ஆவியின் திருமுழுக்கை பெறுகின்றோம்.

மண்ணுலக மாந்தரை பாவத்திலிருந்து மீட்க தோன்றிய இறைமகன், இறைவனின் பாதையில் என்றும் நடக்க திருமுழுக்கின் மூலம் தன் இறைத்தன்மையை உறுதி செய்தார். இதன் அடையாளமாக இறைமகன் இயேசு கிறிஸ்து யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்ற பொழுது, இறைவனின் தூய ஆவியானவர் புறா வடிவில் இயேசுவின் மீது இறங்கி வந்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்டு, நிலையான பேரின்ப வாழ்விற்கு அழைத்துச் செல்ல வல்ல கிறிஸ்துவின் மீது இறைவன் கொண்ட அன்பை, “என் அன்பார்ந்த மகன் இவரே, இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்ற தன் அன்பு வார்த்தைகளால் வெளிப்படுத்துகின்றார். இறைவன் இயேசுவிற்கு அருளிய அதே தூய ஆவியை நமக்கும் நம்முடைய திருமுழுக்கின்; பொழுது அளிக்கின்றார். இயேசு தான் பெற்றுக்கொண்ட தூய ஆவியின் ஆற்றலால் இறைவனுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து, இறைத்திருவுளத்தை நிறைவேற்றினார். நாமும் நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியின் வல்லமையால் நம்முள் உள்ள மன அழுக்குகளை அகற்றி இறைவன் காட்டும் அன்பின் பாதையில் என்றென்றும் பயணிப்போம். அந்தப் பயணத்திற்கு தடையாக உள்ளவற்றை, திருமுழுக்கின் வாயிலாக நாம் பெற்றுக் கொண்ட தூய ஆவியின் துணையுடன் வெற்றி கொண்டு இறைவனின் பிள்ளைகள் என்ற உறுதியுடன் இந்த இறைசமுகத்தின் சங்கமத்தில் சங்கமிப்போம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (எசாயா 42: 1-4,6-7)

ஆயனின் வருகை எதிர்பார்த்து மந்தை காத்திருப்பது போல, நமக்கு வாழ்வளிக்க வரும் எல்லாம் வல்லவரின் வருகைப் பற்றி விரிவானக் குறிப்புகள் இன்றைய முதல் வாசகத்தில் தரப்பட்டுள்ளது. துவண்டு கிடந்த மக்களினத்திற்கு புதுப்பொலிவளிக்க வல்ல மீட்பரை வரவேற்கும் படி இறைவாக்கினர் எசாயா அவர்கள் இறைவாக்குறைக்கின்றார். எனவே, இறைவனிடமிருந்து வரும் மீட்பையும், மீட்பரையும் நமதாக்குவதற்கான வழிகளைக் கற்பிக்கும் இம்முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 10: 34-38)

மனிதராய் பிறந்த அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவன் அளிக்கும் அருள் வெளிப்படுத்தப்படுகின்றது. மனிதராய் நம்மிடையே பிறந்த இயேசு கிறிஸ்து நம்மை அனைத்து தீமைகளிலிருந்து காத்து, நீதியின் பாதையில் நடத்திடுவார் என்றும், இறைவனிடமிருந்து பெற்ற தூய ஆவியின் வல்லமையுடன் அலகையை வெற்றி கொண்டார் என்ற இறை உண்மைகளை விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

✦ மன்றாட்டுகள்

  1. இயேசுவின் பெயரால் திருமுழக்கு பெற்று, இறைச் சமுகமாய் ஒன்று கூடி வாழும் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும் இயேசு காட்டிய அன்பின் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், நாங்கள் பெற்ற திருமுழக்கின் உன்னதத்தை உணர்ந்து, தூய ஆவியின் வாழிகாட்டுதல்களின் படி எங்கள் வாழ்வை சீரமைக்க வேண்டிய அருள் வரங்களை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. உண்மையை உலகுக்கு அளிக்க வந்த எம் அன்பு இறைவா! கடமை, கண்ணியம் தவறாது உழைக்கும் அனைத்து தலைவர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் மன்றாடுகின்றோம். எந்த சூழலிலும் கடமை தவறாது உழைக்கும் உண்மையானவர்களுக்கு, உண்மையின் வழியில் தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றலையும், உண்மையின் வழியில் செல்லாதோர்க்கு தகுந்த ஞானத்தை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. எங்கள் தேவைகளை நன்கறிந்த எம் இறைவா! கடும் நோய்களாலும், தீராத மன உளைச்சலாலும் அல்லல்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். விண்ணகத்திலிருந்த மண்ணகத்திற்கு இறங்கி வந்த மண்ணக உணவாகிய நீரே, அவர்களுக்கு ஆறுதலாக இருந்து நலமளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  4. விண்ணக உணவாக மண்ணகம் வந்த எம் இறைவா! அன்றாட உணவில்லாமல் வீடுகளிலும், வீதிகளிலும் வசிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு ஆன்மா உணவையும், அன்றாட உணவையும் அளிக்க வழிவகை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. ஞானத்தை வாரி வழங்கிய எம் அன்பு இறைவா! கிறிஸ்துவை மையமாகக் கொண்டு சிறிய திருஅவையாக கூடி செபிக்கும் நாங்கள் அனைவரும், கிறிஸ்துவின் போதனைகளுக்கு ஏற்றவாறு எங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளவும், எம் பங்கிலுள்ள் இறைப் பணியாளர்களும், இறைமக்களும் ஆன்ம வாழ்வில் மென்மேலும் வளர அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction | Baptism of Lord

Friday, January 2, 2026

Lord's Epiphany Mass Introduction

🌟 ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா 🌟

04-01-2026

“ஒளி அனைவருக்கும் வெளிப்பட்டது”


✦ திருப்பலி முன்னுரை

விண்ணகத்திலிருந்து மண்ணகம் இறங்கி வந்த இயேசு பாலனின் ஆசீரானது, எளிமையான இறை நம்பிக்கையை கொண்ட இடையர்களுக்கும், ஆழமான ஞானத்தை பெற்ற ஞானிகளுக்கும் நிறைவாக வழங்கப்பட்டது. ஏனெனில், இவர்கள் இருவருமே இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு, இறைவனின் ஆசீரை வேண்டினர். இதனால் இறைவன் அருளிய ஆசீர் அவர்களுக்கு நிறைவாக கிடைத்தது. மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசு பாலன், இடையர்கள் மற்றும் ஞானிகளின் உள்ளத்திலும் பிறந்தார். அதன் விளைவாக இடையர்கள் ஆர்ப்பரித்தார்கள், ஞானிகள் காணிக்கைகளை பாலனுக்கு பரிசாக அளித்தனர்.

வானதூதரும், வான் நட்சத்திரமும் இயேசு பாலனை காண இடையர்களுக்கும் ஞானிகளுக்கும் அழைப்பு அளித்தது போல இன்றைய திருவழிபாட்டின் வாயிலாக நமக்கும் அழைப்பு விடுக்கப்படுகின்றது. இயேசுவை காண வந்த மூன்று ஞானிகளுக்கு இவ்வுலகில் தாங்களிடத்தில் இருந்த சிறந்தவைகளை இறைவனுக்கு காணிக்கையாக அளித்தனர். நாம் எதை இத்திரு வழிபாட்டின் வாயிலாக இறைவனுக்கு அளிக்க வேண்டும்; என்று சிந்திப்போம். நீங்கள் குழந்தையாய் மாறாவிடில், விண்ணரசிற்குள் புக முடியாது என்று மொழிந்த இயேசுவே நம்மிடத்தில் குழந்தையாக பிறந்துள்ளார். எனவே, அக்குழந்தைக்கு போட்டி, பொறாமை அற்ற எளிய குழந்தை உள்ளத்தை பரிசாக அளிப்போம். கடினப்பட்ட நம் உள்ளத்தை கள்ளமில்லாத ஒன்றாக மாற்ற இந்த பகிர்வின் கொண்டாட்டத்தில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

பல்வேறு துன்பங்களினால் அவதியுற்ற இவ்வுலக மக்களுக்கு ஒளியை வழங்க இறைவனே மனிதனாக பிறந்தார். வாட்டமுற்ற மக்களின் மனதை இறைமகனின் பிறப்பின் முன்னறிவிப்பு செய்தி மூலம் இறைவாக்கினர் எசாயா வளமடையச் செய்கின்றார். இறைவனின் பிரதிநிதியாக அவர் கூறும் ஆசிர்வாத மொழிகளை உள்ளடக்கிய இம்முதல் வாசகத்திற்கு அவலுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

அறிவில் மிகுந்த எத்தனையோ ஞானிகளுக்கும், இறைவாக்கினர்களுக்கும் கிடைக்க அரிய பெரும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. இறைப்பண்பை கொண்ட இறைவன் மனிதராய் பிறந்ததன் மூலம் நம்மை அவருடைய உடன் பங்காளியக மாற்றுகின்றார். எளியவர்களாகிய நமக்கு அளிக்கப்பட்ட இந்த இறைவெளிப்பாடு எத்தனை மதிப்புமிக்கது என்று விளக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்

✦ மன்றாட்டுகள்

  1. எளியவர்களைத் தேடிச் செல்லும் எம் அன்பு இறைவா! விளிம்பு நிலை மக்களை தேடிச் சென்று தேற்றும் உன் திரு அவையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இயேசு பாலனின் பிறப்பால் மகிழும் நாங்கள் அனைவரும் இயலாதவர்களுக்காக நாங்கள் செய்யும் சேவைகளை மென்மேலும் சிறப்பாக செய்திட தேவையான உதவிகளை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. தாழ்ச்சியின் உருவே எம் இறைவா! தேவையற்ற ஆடம்பர நிகழ்வுகளிலும், மக்களுக்கு உபயோகமற்ற திட்டங்களிலும் எம் நாட்டுத் தலைவர்கள் பணத்தை வீணடிக்காமல், தொலைநோக்குடைய நல்ல திட்டங்களை தீட்டி, மக்களின் வாழ்வை உயரச் செய்ய தேவையான மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. நநொருங்கிய உள்ளத்தை பலியாக கேட்ட எம் இறைவா! பேராசை, தீச்செயல், வஞ்சகம், பொறாமை, செருக்கு, போன்ற உள்ள அழக்குகளை அகற்றி, எங்கள் இல்லங்களை நாங்கள் அலங்கரிப்பது போல, எங்கள் உள்ளங்களையும் அலங்கரித்து ஞானிகள் தங்களிடத்தில் இருந்தவற்றில் சிறந்ததை உமக்கு அளித்தது போல, நாங்களும் எம்மையே உமக்கு காணிக்கையாக்கும் மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  4. வார்த்தைக்கு வாழ்வளிக்கும் எம் இறைவா! இறைஞானம் பெற இறைப்பிடம் சூழ்ந்துள்ள நாங்கள் அனைவரும், பிறரன்பு பகிர்வில் வெறும் சொல் வீரர்களாய் மட்டும் இல்லாமல், செயல் வீரர்களாய் இருந்து, பிறரன்பு பணியில் ஈடுபட்டு இறைஞானத்தை எமதாக்கும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  5. குழந்தைகளை விரும்பிய எம் அன்பு இறைவா! தலைமுறை இடைவெளியாலும், தகவல் தொழில் நுட்ப கருவிகளாலும் கட்டுண்டு தவிக்கும் எம் குழந்தைகளுக்கு, இறையரசின் மேன்மைகளை உணர்த்தும், நல்ல பண்புகனை கொண்ட வழிகாட்டிகளை அளித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Holy Mass Introduction | Tamil Mass Introduction | Thirupali Munnurai | Sunday Mass Introduction

Monday, December 29, 2025

Thanksgiving New Year Prayer

நள்ளிரவு மன்னிப்பு மற்றும் நன்றி வழிபாடு

📅 டிசம்பர் 31, 2025


முன்னுரை

இயேசு பாலனின் ஆசிரைப் பெற்ற சகோதர, சகோதரிகளே! கடந்த ஆண்டு முழுவதும் இறைவன் நமக்கு செய்த அளவிட முடியாத நன்மைகளை நினைவு கூர்ந்து இறைவனுக்கு உளமாற நன்றி சொல்ல வேண்டிய தருணமிது.

மேலும், கடந்த ஆண்டு முழுவதும் இறைவனுக்கும், நம் சகோதர சகோதரிகளுக்கும் எதிராக செய்த பாவங்களை எண்ணி இறைவனிடம் மன்னிப்பு வேண்டவும், வருங்காலம் நம் வாழ்வின் வளம் கொழிக்கும் வருடமாக மாறிட அருள் வேண்டி இந்த நன்றியின் வழிபாட்டில் நாம் அனைவரும் பக்தியோடு பங்கெடுப்போம்.

📖 நற்கருணை காட்சிபடுத்தியதற்கு பின்

நிலையான புகழுக்குரிய – 3 முறை

பாடல் 1 – ஏதேனும் பொருத்தமான ஆராதனைப் பாடல்

பாவ மன்னிப்பு வழிபாடு

நன்றியின் வழிபாட்டில் முழு தகுதியுடன் பங்கேற்க, பாவ மன்னிப்பு வழிபாட்டுடன் நம்முடைய செபத்தை தொடங்குவோம்.

📜 விவிலிய வாசகம் (1 யோவான் 1:5–10)

கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவராவோம். மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்;;து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.

ஆண்டவர் உங்களோடு இருப்பராக

நம்முடைய பாவங்களை நினைவு கூர்ந்து, மனம் வருந்தி இந்தப் பாடலை ஒன்றாகப் பாடி மன்னிப்பு வேண்டுவோம்.

🎵 நன்றி பாடல் : மன்னிப்பாயா மன்னிப்பாயா / வேறு மன்னிப்பு பாடல்

நன்றி வழிபாடு

“ஆண்டவர் வழங்கிய நீதிக்காகவும், நன்மைகளுக்காகவும் இறைவனுக்கு நன்றி கூறுவோம். உன்னதரான ஆண்டவரின் பெயரைப் போற்றிப்பாடுவோம்” (திபா 7:17). இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள், தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள் (திபா 30:4) என்று திருவிவிலியத்தின் வாசகங்கள் இறைவனை நன்றியின் மிகுதியால் புகழந்து பாட அழைக்கின்றது.

அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே, இறைவன் கடந்த ஆண்டு முழுவதும் நேரடியாகவும், பிறர் மூலமாகவும் இறைவன் நமக்கு செய்த அனைத்து நன்மைகளும் நம் நினைவுக்கு கொண்டு வரவும். நாம் மேற்கொண்ட புதிய முயற்சிகளிலும், கடந்த காலத்தின் தொடர்ச்சிகளை சரியான முறையில் மேற்கொள்ள பலமளித்து, வளமளித்த இறைவனை போற்றிப் பாடுவோம்.

நன்றியின் கனிகளை சுவைத்த நாம் நம்முடைய அன்பின் காணிக்கையை நம்முடைய நன்றி மன்றாட்டுகளால் இறைவனிடத்தில் காணிக்கையாக்குவோம்.

குழு செபம்

நன்றியின் நிறைவில் புனித தாமஸ் அக்குவினாஸ் இறைவனை புகழ்ந்த இவ்வார்த்தைகளை ஒன்றாக செர்ந்து செபிப்போம்.

அன்பான தந்தையே, எல்லாம் செய்ய வல்ல, என்றும் வாழும் எம் இறைவா! உமது மகனாகிய நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும், இரத்தமும் வழியாக பாவியான என்னை ஆசிர்வதிக்க நீர் விரும்பியதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.

இந்த அருளாசீர், நான் செய்த எந்த நல்ல செயல்களாலோ எனக்குள்ள தகுதியாலோ கிடைத்தது அல்ல. உம்முடைய அளவற்ற அன்பும் கருணையும் வழியாக நான் பெற்ற பெரும் ஆருளுக்கு இறைவா உமக்கு நன்றி – ஆமேன்

(விருப்பமான நன்றிப்பாடல்)

நன்றி மன்றாட்டுகள்

பதில் : நன்மையின் இறைவனுக்கு, நன்றி பாடி மகிழ்ந்திடுவோம்.

எல்லையில்லா வரங்களைப் பொழியும் எம் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் உம்முடைய அன்பின் கருணையால் காத்து வந்த உம்முடைய கருணைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். எங்களுடைய வாழ்வில் நாங்கள் பெற்ற அனைத்து வளங்களுக்காகவும், வலிகளுக்காகவும் நன்றி செலுத்துகின்றோம். எங்களுடைய கடந்த ஆண்டின் ஒவ்வொரு நொடியிலும் எம்மோடு இருந்து எம் வாழ்வை வளப்படுத்தியதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

அன்பின் இறைவா! எனக்கு நல்ல பெற்றோரையும், உற்றார் உறவினர்களையும், நண்பர்களையும் கொடுத்து குடும்பத்தில் சமாதானம், ஒற்றுமை, மகிழ்ச்சி என கொடுத்து வருகின்றீர் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்;. அன்பின் இறைவா! எனக்கு நல்ல கணவரை, பண்புள்ள மனைவியை, பாசமுள்ள பிள்ளைகளை கொடுத்து நல்வருமானமும் கொடுத்து காத்துவரும் உம் அருளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

கடந்த ஆண்டு முழுவதும் நல்ல மழையினை கொடுத்து, விளைச்சலைப் பெருக்கி கொடுத்தமைக்காகவும், பல்வேறு விபத்துகள், இயற்கை சீற்றங்கள். பேரிடர்கள் ஆபத்துகளினின்று காத்த உமது நலனுக்காய் நன்றி செலுத்துகிறோம்.

ஆன்மீக வழி நடத்த நல்ல அருட்தந்தையையும், அருட்சகோதரிகளையும் கொடுத்ததோடு அல்லாமல் எல்லாவற்றிற்கும் மேலாக உன் அன்பின் மிகுதியால் அன்றாட திருப்பலியில் உடலாகவும், இரத்தமாகவும் எழுந்து, திருவிருந்தளிக்கும் உமக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறோம்.

எதிர்நோக்கின் பயணிகளாக கடந்த ஆண்டு முழுவதும் நம்முடைய ஆன்மீக முயற்சிகளை ஆசிர்வதித்த இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். கடந்த ஆண்டில் நம்முடைய வாழ்வில் நடைபெற்ற ஆன்மீக வளர்ச்சிக்காக நன்றி செலுத்துகின்றோம்.

(இறைவனிடத்தில் நம் நம்பிக்கை வெளிப்படுத்திய நன்றியுணர்வோடு, நற்கருணை ஆசிரை பெற தயாராகுவோம்)

✝️ நற்கருணை ஆசீர் ✝️

Friday, December 19, 2025

Advent 4th Week Mass Introduciton

திருவருகைக்கால நான்காம் ஞாயிறு

21 – 12 – 2025

இம்மானுவேல் – கடவுள் நம்மோடு | திருவருகைக்காலம்

“இம்மானுவேல் – கடவுள் நம்மோடு” ✨

✦ திருப்பலி முன்னுரை

மீட்பரின் வருகையை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கும் சகோதர, சகோதரிகளே! கிறிஸ்துவின் போதனைகளில் தனிச்சிறப்பிடம் பெற்ற அன்பு என்ற இறைக் கொடையைப் பற்றிக் சிந்திக்க இத்திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு நம்மை அன்புடன் அழைக்கின்றது. இறைவன் மனிதனை அன்பு செய்கின்றார். தம் அன்பின் அடையளமாக மனிதர்களைப் படைத்து காத்து வருகின்றார். அதற்கு, கைமாறாக, இறைவன் நம்மிடமிருந்து பாவமற்ற வாழ்வை பரிசாக கேட்கின்றார்.

இந்த பாவமற்ற வாழ்வை எப்படி வாழ்வது என்றும், மாசில்லா இதயத்தை எப்படி இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றும் கிறிஸ்து தம் அன்பின் போதனைகள் மூலம் நமக்கு கற்பித்துள்ளார். கிறிஸ்துவின் கட்டளையை ஏற்று அதன்படி வாழ்வோம் எனில் நம்மிடையே அன்பு என்றென்றும் நிலைப் பெற்றிருக்கும். மேலும். கடவுள் அன்பின் வடிவில் என்றும் நம்முடன் வாழ்வார் என்ற மறை உண்மைகளை இன்றைய வாசகங்களும் எடுத்துரைக்கின்றன. எனவே, கிறிஸ்து பிறப்பிற்காக நம்மைத் தாயாரிக்கும் இந்நாட்களில் கிறிஸ்து பிறப்பிற்கான நோக்கத்தை குறையின்றி கற்றறிவோம்.

நம்மோடு என்றும் இருப்பதற்காக நம்மிடையே தோன்றிய ‘இம்மானுவேல்’, இறைவனையும் நம் அயலாரையும் அன்பு செய்ய வேண்டும் என்று கற்பித்தார். அந்த அன்பின் பொன்மொழிகளை நம்முடைய வாழ்வாக்கி, அன்பின் வடிவாய் நம்முடன் என்றும் இருக்கும் கடவுளை உணரும் வரம் வேண்டி இந்த அன்பின் பகிர்வில் பக்தியுடன் பங்கெடுத்து, இறைவனின் அன்பின் பிள்ளைகளாக மாறுவோம். இறைவனில் ஒளிர்ந்திடுவோம்.

இம்மானுவேல் – கடவுள் நம்மோடு | திருவருகைக்காலம்

“இம்மானுவேல் – கடவுள் நம்மோடு” ✨

✦ கிறிஸ்துமல் ரீத் முன்னுரை – அன்பு

கடவுளுக்கும் மனிதருக்குமான அன்பின் உறவென்பது எதிர்பார்ப்புகளால் நிறைந்து அல்ல. உண்மையில், நம்முடைய அன்பு என்பது பிரதிபலனற்ற நம்முடைய தியாகச் செயல்களின் மூலமே வெளிப்படுகின்றது. இறைவன் தன்னுடைய அன்பின் அடையாளமாக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தன்னையே நமக்காக தியாகம் செய்தார். இயேசு பாலனின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் நாமும் நம்முடைய இறையன்பையும், பிறரன்பையும் நம்முடைய தியாகச் செயல்களால் அணி சேர்க்க வேண்டும். நம்முடைய பகிர்வின் செயல்களை, நம்முடைய சுய வளர்ச்சியை இவ்வுலகிற்கு முரசறைக்கும் அயுதமாக பயன்படுத்தாமல், பிறரின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைத்து, அன்பினால் இவ்வுலகை கட்டியெழுப்புவோம் என்ற உறுதியுடன் இந்நான்காம் திரியை எற்றி இறைவனின் அன்பில் சரணடைவோம்.

✦ வாசக முன்னுரைகள்

முதல் வாசகம் (எசாயா 7:10–14):
கடவுள் நம்முடைய அன்றாட வாழ்வில் நிகழத்தும் அற்புதற்களை நாம் கண்ணோக்க வேண்டும். நம்முடைய தேவைகளை நம்மைவிட நன்கறிந்த இறைவனை சோதித்தல் ஆகாது என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகள் நம்முடைய நம்பிக்கை அளவிட அழைக்கின்றது. எவ்வித ஐயமும் இன்றி பிறக்கவிருக்கும் மீட்பரை வரவேற்க அழைக்கும் இம்முதல் வாசகத்திற்கு நம்பிக்கையுடன் செவிகொடுப்போம்..

இரண்டாம் வாசகம் (உரோமையர் 1:1–7):
உலகையே தங்கள் அளுகைக்கு உட்படுத்தியதாக கருதிய உரோமையர்களின் மத்தியில் இயேசுவின் மீது அன்பு கொண்டவர்களுக்காக பவுல் எழுதிய வார்த்தைகள் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கொடுக்கப்பட்டுள்ளுது. பாவத்திலிருந்து நம்மை மீட்க வல்ல, நற்செய்தியை அறிவிப்பதற்கு நம்மிடையே தோன்றவிருக்கும் மீட்பரைப் பற்றி எடுத்துரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

✦ மன்றாட்டுகள்

  1. பூரண அன்பை பொழியும் எம் இறைவா! உம் அன்பின் போதனைகளை உலகெங்கும் கொண்டு சென்றிட நீர் ஏற்படுத்திய உம் திருஅவையின் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும், உம்முடைய பிறப்பிற்காக எங்களை தயார் செய்து, எங்களிடம் உள்ள உயர்ந்த பண்புகளை பிறருக்கு உகந்த வகையில் பயன்படுத்திட தேவையான வரங்களை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அன்பின் ஆழத்தை எங்களுக்கு காட்டிய எம் இறைவா! எங்களிடத்தில் உள்ள அன்பின் பகிர்வுகள் வெறும் வார்த்தை அளவில் மட்டுமில்லாமல், எங்களுடைய செயலகளின் வாயிலாக வெளிப்படவும், உம்மையே நாங்கள் முன் மாதிரியாக கொண்டு, அன்பின் பிரதிபலிப்பாக மாறாவும், நீர் காட்டும் அன்பின் பாதையில் தொடர்ந்து பயணம் செய்யவும் தேவையான வரங்களைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
  3. பஅமைதியை ஏற்படுத்த வந்த எம் இறைவா! உலக நாடுகளுக்கிடையில் நடைபெறும் போர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மன்றாடுகின்றோம். போர்ச் சூழலை எதிர்கொள்ள உம்முடைய அமைதியும் அன்பையும் பொழிந்து, நீரே அவர்களுக்கு அறுதலாக இருக்க வேண்டுமென்றும், போர்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளை அன்பின் பாதையில் நடத்திட வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அனைவருக்கும் ஆறுதலளிக்கும் எம் இறைவா, இயற்கை பேரழிவுகளால் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து வாழும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து, அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பிட தேவையான உதவிகளைச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்..
  5. தேடிச் சென்று உதவும் உம் இறைவா! உலகெங்கும் பொருளாதார நெருக்கடிகளாலும், வறுமையாலும் வாடும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்களுக்கு தேவையான உதவிகளை ஆற்றிட வேண்டிய நல்ல மனதையும், சமமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி எம் சமுகத்தை வழிநடத்திட வேண்டிய ஆற்றலையும் கொடையாக தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Lent 3rd Sunday A - தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

MAR 08 2026 தவக்காலம் மூன...